ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

##~##

 ''சமீபத்தில் யாருடைய வீர உரையைக் கேட்டு சிரிப்பாய்ச் சிரித்தீர்கள்?''

'' 'அரசாங்க அதிகாரிகளே... அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆட்சி எங்களிடம் வரப்போகிறது. கலெக்டர், வருவாய்த் துறை அதிகாரிகள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது அப்போது வழக்கு போட உள்ளோம். அதுவும் உயர் நீதிமன்றத்தில் அல்ல; உச்ச நீதிமன்றத்தில்’ என்று, மேலும் பலப்பல மிரட்டல்களை விடுத்த இந்த வீர உரைக்குச் சொந்தக்காரர்... ஆம், உங்கள் கணிப்பு சரிதான்... அன்புமணி ராமதாஸ்!''

- பி.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

நானே கேள்வி... நானே பதில்!

''ஜெயலலிதா அவர்களை நினைத்து எதற்காகப் பெருமைப்படுவீர்கள்?''

''தன் முன்னால் நிமிர்ந்து நிற்கவே பயப்படும் மந்திரிகளும், கட்சி நிர்வாகிகளும் பொதுக் கூட்டங்களில், 'அம்மா டி.வி.’ என்று சொல்லாமல் 'ஜெயா டி.வி-யைப் பாருங்கள்’ என்று தன் பெயரை உரிமையோடு சொல்ல தாயுள்ளத்தோடு அனுமதித்து வருகிறாரே... அதை நினைத்தாலே பெருமிதமாக இருக்கிறது! (மந்திரிகளின் மைண்ட் வாய்ஸ் : 'மாப்பு... வெச்சுட்டான்யா ஆப்பு!’)  

- சுஜாதா, சென்னை-61.

நானே கேள்வி... நானே பதில்!

''இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?''

''எல்லா வகையிலும் சம்பந்தம் இருக்கிறது. விநோதமான 'சம்பந்தம்’ பற்றிய ஒரு செய்தி படித்தேன். 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த புதிதில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் வயது 43-ஐ ஒட்டி இருந்தது. இப்போது அதே மதிப்பு சுமார் 61 ரூபாய்க்கு உயர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவின் வயது 66-ஐ நோக்கி பீடு நடைபோடுகிறது. இன்னும் சில மாதங்கள் 'காங்கிரஸ்’ ஆட்சியில் இருந்தால், பிரதமர் மன்மோகன் சிங் வயது 80-ஐ எட்டிவிடுமோ என்று பயமாக உள்ளது!’ என்று சொல்லியிருக்கிறார் மத்தியப்பிரதேச முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான்.  இதை அவர் ஜோக்காக சொல்லியிருந்தாலும்,இப்போ தைய இந்தியப் பொருளாதார நிலைமை அப்படித்தான் இருக்கிறது!''  

- பா.மனோகரன், சென்னை-54.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்!