ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

மணல் மாஃபியா...

கனல் அரசியல்!ப.திருமாவேலன், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.சிதம்பரம்

##~##

 வெள்ளையர்களை விரட்டிவிட்டு கொள்ளையர்கள் கையில் நாட்டைக் கொடுத்துவிட்டோம்!

'என்ன வளம் இல்லை
   இந்தத் திருநாட்டில்|
ஏன் கையை ஏந்த வேண்டும்
வெளிநாட்டில்?’

- என்று பாட்டு எழுதிய மருதகாசிக்குத் தெரியாது, 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்’ நினைப்பவர்களால் அந்தவளங் கள் திருடப்பட்டால், அடுத்த வேளை சோற்றுக்குக்கூட வெளிநாட்டில்தான் கையேந்தி நிற்கவேண்டும் என்பது!

தமிழ்நாட்டின் வளங்கள் அனைத்தையும் மிகச் சில தனி நபர்களுக்குத் தாரைவார்த்துவிட்டு, பலப் பல வருடங்களாக துண்டு விழும் பட்ஜெட்டையே போட்டுக்கொண்டு இருக்கிறது தமிழக அரசாங்கம்.

'எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் கொட்டிக்கொடுக்க ரெடி!’ என்று, மதுரை கிரானைட் கற்களுக்கு உலகச் சந்தையில் ஏக கிராக்கி. ஆனால், அந்த லாபம் எதுவும் தமிழக மக்களின் வளத்துக்கும் நலனுக்கும் பயன்படவில்லை. பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் சிலர் மட்டுமே அதனை அனுபவித்துக்கொண்டிருந்த நிலைக்கு, மிக சமீபத்தில்தான் லாடம் கட்டப்பட்டது.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான கார்னெட் மணல், உலகச் சந் தைக்கு தமிழகத்தில் இருந்துதான் அதிகம் போனது. அதன் லாபமும் வைகுண்டராஜன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே போனது. இதில் நடந்த முறைகேடுகளைப் பற்றி பரிசீலிக்க ஒரு குழு அமைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

மணல் மாஃபியா...

மாநிலத்தின் தாய்மடியான ஆற்றுப் படுகைகளை, பொக்லைன் எந்திரம்வைத்துச் சிதைத்து மணல் அள்ளி... பெரு வியாபாரம் செய் யும் முதலாளியாகச் சுட்டிக்காட்டப்படுபவர், கோவை ஆறுமுகச்சாமி. இப்படிப்பட்ட சிலர் பன்னெடுங்காலமாக இயற்கை வளங்களை  வாரிய பிறகு, 'சுற்றுச்சூழல் அனுமதி பெறாத மணல் எடுப்புகளுக்குத் தடை விதியுங்கள்!’ என்று, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த வாரம் கறார் காட்டியிருக்கிறது. இனி எடுப்பதற்கு ஆற்றில் மணல் இல்லை... உடைப்பதற்கு மதுரையில் மலைகள் இல்லை... கரைப்பதற்கு ராதா புரம், விளாத்திகுளம் போன்ற இடங்களில் கார்னெட்டும் காண வில்லை. சாகக்கிடக்கும் நேரத்தில் 'சங்கரா... சங்கரா...’ என்கின்றன அரசாங்கமும் பசுமைத் தீர்ப்பாயமும்.

கடந்த 20 ஆண்டு காலமாக மணல், கிரானைட், கார்னெட் விற்ப னையில் தகிடுதத்தங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் அள்ளிக்கொண்ட லாபம் அனைத்தும் அரசாங்க கஜானாவுக்கு வரவேண்டிய வரவு! இதனைக் கண்டும் காணாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல்; அந்த வர்த்தகச் சூதாடிகளுக்கு உறுதுணையாக இருந்து, வாங்க வேண் டியதை வாங்கி, செய்யக் கூடாததை எல்லாம் செய்துகொடுத்ததில் எந்த ஆட்சியின் அதிகார மையமும் விதிவிலக்கு அல்ல. சகாயம்,மதுரை மாவட்ட ஆட்சியராக வந்து சொன்னால்தான், ஆனைமலையைச் சுற்றி உள்ள பகுதிகளைத் துளைப் போட்டு உடைத்துவிட்டார்கள் என்று ஓர் அரசாங்கத்துக்குத் தெரியவருமா என்ன? திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் 15 ஆண்டுகளாக அரங்கேறிக்கொண்டு இருக்கும் சமாசாரம் அது!

தூத்துக்குடியில் கார்னெட் பிரிப்புப் பணிகள் தொடங்கிய சமயம், இப்போது அந்த மாவட்ட ஆட்சியராக இருந்து தூக்கியடிக்கப்பட்ட ஆஷிஸ் குமார், ஐ.ஏ.எஸ்., கனவுகூட இல்லாமல் மத்தியப்பிரதேசத்தின் ஒரு பள்ளிக்கூடத்தில் பாடம் படித்துக்கொண்டு இருந்திருப்பார். 'இந்த முறை கேடுகளை  இனியும் மறைக்க முடியாது’ என்ற நெருக்கடியை சகாய மும் ஆஷிஸ் குமாரும் உருவாக்கிவிட்டார்கள். அதனால்தான் பி.ஆர்.பி. மீது வழக்குகள் பாய்ந்தன. கார்னெட் அதிபர்கள், 'என்ன நடக்குமோ!’ என்று தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறார்கள். ஆற்று மணல் விற்பனையும் அதிர்ச்சி முடிவை எதிர்பார்த்து நிற்கிறது.

மணல், கனிமம், கற்கள்... இந்த மூன்று வர்த்தகமும் முறையான அனுமதி பெற்று மேற்கொள்ளப்படுவவைதான். அதில் சந்தேகம்இல்லை. ஆனால், அனுமதி தரப்பட்ட எல்லைக்குள் அதன் விதி முறைப்படி நடந்ததா, அல்லது நடக்கிறதா என்பதுதான் இங்கு சர்ச்சை மையம்! மாதா மாதம் அரசாங்கம் தரும் சம்பளத்தைவிட 'ஒஸ்தி’யான கிம்பள போதையில் அரசு அதிகாரிகள் சிலர் நடத்திய சொகுசு வாழ்க்கையே, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளத்தையும் சூறையாடிவிட்டது.

மணல் மாஃபியா...

'தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னெட், இலுமினைட், ரூட்டைல் போன்ற கனிம வளங்களை அள்ளுவதற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள சில பகுதிகளை ஆய்வு செய்தபோது, கள்ளத்தனமாக பெருமளவுகடற் கரை மணல் அள்ளப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக’ மண்ணியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனருக்கு, தூத்துக்குடி மாவட்ட கலெக் டர் ஆஷிஸ் குமார் கடந்த வாரம் அறிக்கை அனுப்பினார். 'தூத்துக் குடி மாவட்டத்தில் குத்தகைக்கு விடப்பட்ட ஆறு பகுதிகளில் முறை கேடாக கனிம வளங்கள் எடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்ய, சிறப்புக் குழு அமைக்கப்படும்’ என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது காலம் கடந்த சூரியநமஸ்காரம். என்றாலும், இப்போதாவது விழித்துக்கொண்டார்களே என்று ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.

கோடிக்கணக்கில் வருமானம் கொடுக்கும் கிரானைட் கற்களை ஏலம்விடும் பொறுப்பு, மதுரை மாவட்ட நிர்வாகத்தின் வசம் உள்ளது. புறம்போக்கு நிலத்தில் 12 ஆயிரம் கிரானைட் கற்களும், பட்டா நிலத்தில் 1.5 லட்சம் கற்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை உள்ளூர் ஏலத்தில் விட்டால் சிண்டிகேட் அமைத்து விலையைக் குறைத்துவாங்கிவிடுவார்கள் என்பதால், குளோபல் டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்தார், மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா. அதற்குள் அவர் பணி மாறுதல் செய்யப்பட்டார்.கிரானைட் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் ஜெயலலிதாவின் மேற்பார்வையில் நடப்பதாகச் சொல்லப்பட்டாலும், முக்கியமான அமைச்சர்கள் இருவர், எம்.எல்.ஏ-க்கள் மூவர்,  அரசு அதிகாரிகள் சிலரும் அந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட படியே இருந்தார்கள். அது, கார்னெட் விவகாரத்திலும் நடக்க வாய்ப்பு உண்டு.

இந்தக் கோணத்தை மனதில்வைத்துப் பார்த்தால், தூத்துக்குடியில் கார்னெட் மணல் எடுத்துப் பிரிப்பதில் முறைகேடு நடப்பதாகக் கிடைத்த தகவலைவைத்து ரெய்டு நடத்த உத்தரவிட்ட அந்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் குமார், உத்தரவிட்ட தினமே பணி மாறுதல் செய்யப்படுவதின் பின்னணி என்ன? ஆஷிஸ் குமார் மீது வேறு குற்றச்சாட்டுகள் உண்டு; அதனால்தான் அவர் பணிமாறுதல் செய்யப்பட்டார் என்று சொல்லப்பட்டாலும், அன்றைய தினமே அது நடந்தது பலத்த சந்தேகங்களைக் கிளப்பிஉள்ளது.

இதைத்தான் கருணாநிதியும் கிண்டல் செய்து உள்ளார். ஜெயலலிதா அமைத்து உள்ளசிறப்புக் குழு சம்பந்தமாக எழுதிய கருணாநிதி, 'அந்தக் குழுவுக்குத் தலைவராக வைகுண்டராஜன் என் பவரை நியமிக்கலாம் என்று நம்முடைய ஆபீஸ் பையன் சிபாரிசு செய்கிறான்’ என்று எள்ளி நகையாடுகிறார். இந்தக் கிண்டல் சரி... ஆனால், அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்த நடவடிக் கையேனும் எடுக்கப்பட்டதா?

மணல் மாஃபியா...

முன்பு, அந்தப் பகுதியில் டைட்டானியம் உலோகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க, தமிழக அரசுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம்செய்தது. சாத்தான்குளம், திசையன் விளை பகுதியில் என்னென்ன அரிய உலோகங்கள் உண்டு என்பதைச் சோதனைசெய்யும் உரிமை, டாடாவுக்குத் தரப்பட்டது. தேரிக்காட் டில் கிடைக்கும் இல்மனைட் மணலை எடுத்துச் சுத்திகரித்து டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிப்பதும், இதிலிருந்து டைட்டானியம் உலோகம் தயாரிப்பதும் திட்டம். அ.தி.மு.க. சார் பானவராக தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட வைகுண்டராஜனுக்கு சிக்கலை ஏற்படுத்தவே, டாட்டாவை அந்தப் பிரதேசத்தில் காலூன்ற வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்அது என்று அப்போது சொல்லப்பட்டது. டாடா வந்தால் தன்னுடைய வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால், மீனவர்களைத் தூண்டி எதிர்ப்பு களைக் கிளப்பினார்கள். அது, இந்தியா முழுக் கவே வளங்களைச் சூறையாடுபடுவர்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடந்துவந்த சமயம் என்பதால், டாடாவும் பின்வாங்க வேண்டியதாயிற்று. இதுதான் முந்தைய ஆட்சி யில் நடந்த கனிம 'பாதுகாப்பு’ நட வடிக்கை! 'எனக்குத் தரப்பட்டுள்ள துறையை வைத்து எதுவும் செய்ய முடியாது!’ என்று வருத்தப்பட்ட மந்திரி ஒருவரிடம், 'இந்தா... கனிம வளத் துறை’ என்று தூக்கிக் கொடுக் கும் காரியம்தான் தி.மு.க. ஆட்சியில் நடந்தது. இது, இன்று வரையும் தொடர்கிறது.

தமிழ்நாடு கனிம நிறுவனம், புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆகிய இரண்டும் அப்பழுக்கற்ற அதிகாரிகளின் ஆணைப்படி இனியேனும்  செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டின் வளங் களைக் காப்பாற்ற முடியும்.

மணல் மாஃபியா...

'தமிழகம்’ இயற்கை வளம் கொழிக்கும்மாநிலம்.  மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையுமாக நீண்ட தூர மலைத் தொடர்கள் இருக்கும் மாநிலம். பல்வேறு வகை யான மணல்கள் இங்கே உண்டு. அதிகமாக இருப்பது செம்மண். பழுப்பு நிலக்கரி, சுண்ணாம் புக் கல், கார்னெட் மணல், சிலிகான் மணல், குவார்ட்ஸ், பெல்ஸ் பார், கிராபைட், மாக்ன ஸைட், இரும்புத் தாது போன்ற கனிமங்களை நம் பூமி தாங்கி உள்ளது. கிரானைட்டைப் பொறுத்தவரை கறுப்பு-வெள்ளை பாரடைஸ், பல வண்ண கிரானைட்டுகள் கொட்டிக்கிடக் கின்றன. சீனா, ஜப்பான், கிழக்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் இந்த கிரானைட் கற்களுக்கு பலத்த வரவேற்பு உள்ளது. நிதி இல்லை, கஜானா காலி... என்று புலம்பும் அரசாங்கம், இந்த இயற்கை வளங்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்தால், நாட்டின் வள மும் பாதுகாக்கப்படும்; அரசாங்கத்துக்கும் வருமானமும் கிட்டும்.

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடியில் இருந்து தூத்துக்குடி வேம்பார் வரையுள்ள 150 கிலோ மீட்டர் கடற்கரை மணலில் நடந்தே போகலாம் என்பது பழைய கதை. இன்று, நடக்கவும் முடி யாது; நடக்கவும் விட மாட்டார்கள். மீறி நடந் தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. சொந்த வீடு கட்டுவதற்காக ஆற்று மணலை மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்பவர்களைத் தடுத்து வழக்குப்போடும் வருவாய்த் துறையும் காவல் துறையும் 20 ஆண்டுகளாக இருட்டறையில்இருந் தது ஏன்? அரசாங்கங்களை மிரட்டி, அதிகாரி களை அச்சுறுத்தும் அரசியல் கட்சிகளை தங்கள் நிறுவனக் கூலிக்காரர்களாகக் கருதும் இத்தகைய நிழல் ராஜ்யங்களுக்கு முடிவு எப் போது?

விசாரணைக் குழுவிடம் விடை கிடைக்குமா?