Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

Published:Updated:
##~##

 எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்!

''இந்தியப் பிரதமர் இதுவரை 1,300 முறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உண்மைதான். 250 முறை 'தெரியாது’ என்றும், 250 முறை 'வருத்தப்படுகிறேன்’ என்றும், 300 முறை 'கவலையளிக்கிறது’ என்றும், 400 முறை 'ராகுல் பிரதமராகலாம்’ என்றும், 100 முறை 'தனக்குத்தானே’வும் பேசியுள்ளார். நல்லா சொல்றாங்கப்பா டீட்டெய்லு!''

- கே.நிவேதா, ஈரோடு-4

நானே கேள்வி... நானே பதில்!

''சமீபத்தில் உங்களுக்குப் புன்னகையை வரவழைத்த ஒரு குறும்பு?''  

''என் மாணவர்களிடம், கரும்பலகையில் தினமும் ஏதாவது ஒரு பொன்மொழியை எழுதும்படி கூறியிருந்தேன். அன்றைய தினம், ஆங்கிலப் பாடத் தேர்வு. நான் வினாத்தாள்களுடன் வகுப்பறைக்குள் நுழைந்தேன். அங்கு கரும்பலகையில் என்னை வரவேற்ற பொன்மொழி... 'இன்று எனக்குத் தேர்வு. ஆனால், அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், ஒரு காகிதம் மட்டுமே எனது எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது’ - தாமஸ் ஆல்வா எடிசன்!''

- கே.சரஸ்வதி, ஈரோடு-12

''உருவத்தைப் பார்த்து எடை போடலாமா?''

''1911-ம் ஆண்டு வியட்நாமை ஆக்கிரமித்த ஃப்ரெஞ்சுப் படைகள், 'கலகம் செய்தார்கள்’ என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றைக் கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது. வண்டியில் இடம் இல்லாததால், ஒல்லியாகவும் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, 'இவன் தானாகவே செத்துவிடுவான்’ என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர். பிற்காலத்தில் அந்தச் சிறுவன் ஃப்ரெஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான். அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின்!''  

- ஜெ.கண்ணன், சென்னை -101

'' 'குடி உயர கோல் உயரும்’ என்ற முதுமொழி, இந்தக் காலத்துக்குப் பொருந்துமா?''

''இந்தக் காலத்துக்குத்தான் சிறப்பாகப் பொருந்தும். 'டாஸ்மாக் (குடி) உயர, அரசின் (செங்)கோல் உயரும்!''

- கோவி.மணிகண்டன், பொள்ளாச்சி.

''இளைஞர்கள், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகித் தவிக்கிறார்களே... அவர்கள், அதிலிருந்து விலகி இருப்பது எப்படி?''

''கடல் முழுவதும் நிறைந்திருக்கும் நீர், கப்பலை மூழ்கடிப்பதில்லை; கப்பலுக்குள் ஊடுருவும் நீர்தான் கப்பலை மூழ்கடிக்கிறது. எந்த அழுத்தத்தையும் மனதில் ஏற்றிக்கொள்ளாத வரை, வாழ்க்கை உங்கள் கையில்! இளைஞர்களே... பிரச்னைகளை மதியூகத்தால் சமாளியுங்கள்... மனதால் அல்ல!''

- கே.சரஸ்வதி, திண்டல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism