Published:Updated:

அருள்குமார் facebook like him

ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: கே.கார்த்திகேயன்

அருள்குமார் facebook like him

ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: கே.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

மீப மாதங்களில் மட்டும் ஃபேஸ் புக்கில் நீங்கள் எத்தனை மணி நேரம் செலவழித்திருப்பீர்கள்? அதற்கான இணைய இணைப்பு, ஸ்மார்ட் போன், நெட் கார்டு என எவ்வளவு ஆயிரங்களைச் செல வழித்திருப்பீர்கள்? மனதுக்குள் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறீர்களா? சரி, ஃபேஸ்புக் மூலம், நீங்கள் எவ்வளவு வருமானம் ஈட்டியிருப்பீர்கள்?

சேலம், கந்தசாமி புதூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் அருள்குமார், ஃபேஸ்புக் நிர்வாகத்திடமிருந்து 'பக் பவுன்டி புரொக்ராம்’ மூலம் இதுவரை 8 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வெகுமதி பெற்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அது என்ன பக் ஃபவுன்டி? அதன் மூலம் எப்படி அவ்வளவு வெகுமதி பெற முடியும்? அருள்குமாரின் வார்த்தைகளிலேயே கேட்போம்...

''என் அப்பா வையாபுரி, ஒரு விவசாயி. சின்னதா ஒரு மளிகைக் கடையும் வெச்சிருக்கார். பி.இ., முடிச்சிருக்கிற நான்தான் எங்க வீட்டுல முதல் தலைமுறைப் பட்டதாரி. நண்பர்கள் மூலம் ஃபேஸ்புக் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். கல்லூரியில் தினமும் இரண்டு மணி நேரம் இணைய வசதி கிடைக்கும். அப்போ ஃபேஸ்புக்ல சும்மா உலாவிட்டு இருக்கும்போதுதான் இந்த 'பக் ஃபவுன்டி புரொக்ராம்’ பத்தித் தெரியவந்தது. அதாவது, ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோ சாஃப்ட்னு பல தளங்களில் அவங்களோட பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிச்சு சொன்னா, பணப் பரிசு கொடுப்பாங்க. அப்படி ஃபேஸ்புக்கில் ஏதாவது பாதுகாப்புக் குறைபாடு இருக்கானு தேட ஆரம்பிச்சேன். பல தளங்களில் ஃபேஸ்புக்குக்கான லிங்க் கொடுத்திருப்பாங்க. அதை நிறையப் பேர் ஷேர் செய்வாங்க. ஆனா, அதில் பல தளங்கள் போலி. ஃபேஸ்புக் போலவே தோன்றும் ஃபேக் தளங்கள். அப்படிப்பட்ட தளங்களின் லிங்க்கை நாம் க்ளிக் செய்தால், நம் கணக்கில் இருக்கும் தகவல்களை அது திருடிக்கும். இதை நான் ஃபேஸ்புக் நிர்வாகத்துக்குப் புகாரா அனுப்பினேன். அதை ஏற்றுக்கொண்டு அந்த தவறைச் சரிசெய்ததோடு எனக்கு 1,500 டாலர் பரிசா அனுப்பினாங்க.

அருள்குமார் facebook like him

உடனே ஆர்வம் அதிகமாகி, இன்னும் தீவிரமா உலாவினேன். அப்போ ஃபேஸ்புக்கில் இன்னொரு சிக்கலைக் கண்டுபிடிச்சேன். ஃபேஸ்புக்கில் இருக்கும் யாரோட புகைப்படங்களையும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனின் சாஃப்ட்வேர் கொண்டு நீங்கள் கையாள முடியும். இதைச் சொன்னப்போ, முதல்ல ஃபேஸ்புக் நிர்வாகம் அதை ஏத்துக்கலை. உடனே நானே ஒரு போலி கணக்கு உருவாக்கி, என் அக்கவுன்ட்டில் இருந்து அந்தப் போலி அக்கவுன்ட்டில் இருக்கும் புகைப்படங்களைக் கையாண்டேன். அதை ஒரு டெமோ வீடியோவாகவும் எடுத்து ஃபேஸ்புக் அட்மினுக்கு அனுப்பினேன். அப்புறம் அந்தக் கோளாறை அவங்க ஏத்துக்கிட்டு, எனக்கு 12,500 அமெரிக்க டாலர் பரிசு கொடுத்தாங்க. இதுவரை இப்படி ஃபேஸ்புக்கின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்தது உலகம் முழுக்க 329 பேர்தான். அதில் நானும் ஒருவன்'' என்று உற்சாகமாகச் சிரிக்கிறார் அருள்.

''உங்க விவசாயி அப்பாவுக்கு நீங்க என்ன செஞ்சீங்கனு புரிஞ்சதா?''

''அப்பாவுக்குப் புரியலை. அப்புறம் அவர்கிட்ட ஒரு கதை சொன்னேன். 'அப்பா... நீங்க ஒரு வீடு கட்டுறீங்க. அந்த வீட்டைச் சுத்தி வேலி போடும்போது யாராவது வந்து, 'ஏய்... என்னப்பா நீ வேலி கட்டிருக்க? அந்தப் பக்கம் ஆள் நுழையுற அளவுக்கு இடைவெளி இருக்கு பாரு. திருட்டுப்பசங்க சுளுவா உள்ளாற வந்துருவாங்க’னு கூப்பிட்டுச் சொன்னா, நீங்க அவருக்கு நன்றி சொல்லி எதாவது கொடுப்பீங்கதானே’னு விளக்கினேன்.  சிரிச்சுக்கிட்டார்!''

''பரிசுப் பணத்தை என்ன பண்ணீங்க?''

''அப்பாகிட்ட கொடுத்துட்டேன். அவர் எதுக்காவது செலவழிப்பார். ஆனா, அவருக்கு அது பெரிய விஷயமாவே இல்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேர்ல கூப்பிட்டு என்னை வாழ்த்தினார். அப்போ ஸ்டாலின் சாரையும் சந்திச்சேன். அதுல என்னைவிட அப்பாவுக்குத்தான் ரொம்ப சந்தோஷம். நம்ம கிராமத்துல இருந்து கூட்டிட்டுப் போய் முன்னாள் முதல்வரையே சந்திக்கவெச்சுட்டான்னு சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார்!''

''சரி, ஃபேஸ்புக்ல 'பக்’ தேடிட்டே மட்டும்தான் இருப்பீங்களா... சாட்டிங், மீட்டிங் எல்லாம் கிடையாதா?''  

''என் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற எல்லாருமே என் கல்லூரி நண்பர்கள் மட்டும்தான். அறிமுகம் இல்லாத வங்க யாரும் என் லிஸ்ட்ல இல்லை. ஆனா, என் நண்பர்கள் பலரும் அறிமுகம் இல்லாதவங்களுடன் அரட்டை, காதல்னு டைம்பாஸ் பண்றாங்க. நான் அதைப் பத்தி யோசிச்சதே இல்லை. இப்போதான் பெண்களிடம் இருந்து ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்திருக்கு. ஆனா, பெண்டிங்லதான் வெச்சிருக்கேன். புதுசா ஒருத்தவங்களோட அறிமுகமாகி சாட் பண்றதுக்கு நேரம் ஒதுக்க முடியுமானு எனக்குத் தெரியலை!''

''இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?''

''படிப்பு முடிஞ்சிருச்சு. 80 பெர்சென்ட் மார்க்கோட பாஸ் பண்ணியிருக்கேன். இப்போ சென்னையில் வேலை தேடிட்டு இருக்கேன். மூணு நேர்முகத் தேர்வில் கலந்துக் கிட்டேன். மூணு இடத்திலும் படிச்சதில் இருந்து சில கேள்விகள் கேட்டாங்க. அப்புறம் வாழ்த்துகள் சொல்லிட்டு 'பக் பவுன்டி’ பத்தி விரிவா கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க. 'சீக்கிரமே ரிசல்ட் சொல்றோம்’னு சொல்லி அனுப்பியிருக்காங்க. பார்ப்போம்... நல்லதே நடக்கும்!''