Published:Updated:

ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

ஆயிரம் பூக்கள் மலரட்டும்!
ஆயிரம் பூக்கள் மலரட்டும்!
ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரீ.சிவக்குமார்
ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

ந்தியாவில் திருநங்கைகள் ஒதுக்கப் பட்டும் ஒடுக்கப்பட்டும் இருக்கும் சூழலில்,

அமெரிக்க அரசு ஒரு தமிழ்த் திருநங்கையைஅழைத்து சிறப்பு செய்தது வரவேற்புக்கு உரியது!

'இன்டர்நேஷனல் விசிட்டர்ஸ் லீடர்ஷிப் புரொகிராம்' என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு இந்தியாவில் இருந்து கல்கியை அழைத்தது.

"எப்படி இருந்தது அமெரிக்கா?" என்றேன் கல்கியிடம்.

"ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்ற வகையில், சமூகத்தில் பலவகையிலும் சிறுபான்மையினராக இருப்பவர்களைச் சந்திப்பதும், அவர்களின் அமெரிக்க வாழ்க்கையைத் தெரிந்துகொள்வதுமே எனது விருப்பமாக இருந்தது. அமெரிக்க அரசின் நோக்கமும் அதுதான்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

அமெரிக்கா என்பதே வெவ்வேறு சிறுபான்மையினர் வாழும் நாடாகத்தான் இருக்கிறது. மதச் சிறுபான்மையினர், பாலியல்சிறுபான்மையினர், அகதிகள், வேறு நாடுகளில் இருந்து தொழில் நிமித்தம் வந்தவர்கள் ஆகியோர் நிரம்பியது தான் அமெரிக்கா. பல்வேறு மனிதர்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு கலாசாரங்கள் என மாவோ சொன்னதைப்போல 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' என்கிறது அமெரிக்கா.

குறிப்பாக, பாலியல் சிறுபான்மையினர்களாகிய திருநங்கைகளுக் கும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் சட்டரீதியான அங்கீகாரம் நிறையவே உண்டு. ஒருவர் திருநங்கை என்பதற்காகவோ, ஓரினச் சேர்க்கையாளர் என்பதற்காகவோ வேலையில் சேர்க்காமல் இருக்க முடியாது, வேலையைவிட்டுத் தூக்கவும் முடியாது. உடனடியாக சட்டப்படி நீதி கிடைப்பதற்கான சாத்தியங் கள் உள்ளன. ஆனால், அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வதற்குச் சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. அதனால், ஒருவர் வெளிநாட்டுக்குப் பயணம் செய்கிறார் என்றால், தனது கே பார்ட்னரையோ, லெஸ்பியன் பார்ட்னரையோ அழைத்துச் செல்ல முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், அந்தத் தடையையும் நீக்கி இருக்கிறது ஒபாமா அரசு.

நான் சென்றபோது, அதிர்ஷ்டவசமாக அக்டோபர் 11-ம் நாள் 'நேஷனல் கமிங் அவுட் டே' வந்தது. அதாவது, ஓரினச் சேர்க்கையாளர்கள், தங்கள் அடையாளத்தை அறிவிப்பதற்கான நாள். அந்த அக்டோபர் 11 அன்று நூற்றுக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் பெற்றோர்களோடு அந்த தினத்தைத் திருவிழாவாகக் கொண்டாடுவதைப் பார்த்த எனக்கு மகிழ்ச்சி ததும்பியது. என்றாலும், இங்கு இருப்பதைப்போல இட ஒதுக்கீட்டு முறையோ, திருநங்கை களுக்கு தமிழக அரசு அமைத்துள்ள நல வாரியம்போன்ற ஏற்பாடுகளோ இல்லாதது பெரும் குறை. இதை நான் மனித உரிமைகள் தொடர்பாக நடந்த கலந்துரையாடல் கூட்டங்களிலும் வலியுறுத்திப் பேசினேன்.

இந்த சந்திப்பில் எனக்குப் பெரிதும் மனநிறைவைத் தந்த விஷயம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத் துக்குச் சென்றது. அங்கு 'அட்வகசி ஆபீஸர்' ஆக இருப்பவர் குமார் என்ற ஈழத் தமிழர். இறுதிப் போர்க் காலகட்டத்தில் நடைபெற்ற கொடுமைகள் குறித்து நானும் குமாரும் துயரத்தோடு பகிர்ந்துகொண்டோம். ஈழ மக்களை ஆதரித்து திருநங்கைகள் உண்ணாவிரதம் இருந்ததைச் சொன்னபோது, குமாரின் கண்கள் பனித்தன. அம்னஸ்டி இன்டர்நேஷனல், போர்க் குற்றங்கள்பற்றிய ஓர் அறிக்கையைத் தயாரித்து வருகிறது. அதை விரைவில் ஐ.நா-விடம் சமர்ப்பிக்கப் போகிறதாம்!

ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

அமெரிக்காவில் முக்கியமாகக் கவனித்த விஷயம், அங்கு உள்ள எல்லாக் கட்டடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனி லிஃப்ட், தனிக் கழிப்பறைகள் இருந்தன. இப்படிப் பல பாராட்டத்தக்க விஷயங்கள் இருந்தபோதும், இன்னமும் கறுப்பர்களுக்கு எதிரான வெள்ளையர்களின் வெறுப்பு, ஒரு அடிநீரோட்டமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. கறுப்பர்கள், வெள்ளை மாளிகை தொடங்கி, பல பொறுப்பானபதவிகளில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், கறுப்பர்களைத் தங்களைவிட, ஒருபடி தாழ்வாகக் கருதும் 'வெள்ளை மனம்' இன்னும் மாறவேஇல்லை.

செப்டம்பர் 11 தாக்குதலில் இடிந்துபோன இரட்டைக் கோபுரத்தைப் பார்த்தபோது, நானே இடிந்துபோனேன். இப்போது அங்கு மூன்று கட்டடங்கள் எழுப்பப் பட்டுக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒரு கட்டடம், இறந்துபோனவர்களை

ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

நினைவுகூர்வதற்கானது. அந்த கட்டுமானப் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அதற்குப் பின்னால் உள்ள அரசியல் எதுவாக இருந்தபோதி லும், அந்தத் தாக்குதலில் இறந்துபோன வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை நினைத்துக் கண்ணீர் சிந்துவதைத் தடுக்கமுடிய வில்லை. ஏனோ, எனக்கு இடிந்து போன இரட்டைக் கோபுரத்தைப் பார்க்கும்போது, இந்தியாவில்இடிக் கப்பட்ட பாபர் மசூதி நினைவுக்கு வந்தது.

'வன்முறை இல்லாத வாழ்க்கை வேண்டும், சக மனிதர்களின் அடையாளங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், சமூகத்தில் விலக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்' எனது இந்தக் கருத்துக்களை அமெரிக்கப் பயணம் மேலும் உறுதி செய்திருக்கிறது!"

ஆயிரம் பூக்கள் மலரட்டும்!
ஆயிரம் பூக்கள் மலரட்டும்!