Published:Updated:

பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்

பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்


பிபாய் ப்ளாக், கெவ், ஸ்பைக், நாஷ்
பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்
பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எஸ்.கலீல்ராஜா
படங்கள்:என்.விவேக்
பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்

ஜாஸ், ராக் அண்ட் ரோல், கான்டெம்பரரி, சல்சா, ஹிப் ஹாப் என மேற்கத்திய

டான்ஸ் வகைகளுக் கும், சென்னை சுண்ணாம்புக்
கால்வாய் சிறுவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இந்த இருவேறு புள்ளிகளை, கலாசாரத்தை இணைத்திருக்கிறார் ஆண்டோ. சென்னை யின் பிரபலமான ஹிப் ஹாப் டான்ஸர்.

"All For One Dance Factory" - இதுதான் எங்க டான்ஸ் கம்பெனியின் பெயர். ஆரம்பத்தில் மத்த டான்ஸ் பள்ளிகளைப்போல, வசதி யான வீட்டுப் பசங்களுக்குத்தான் டான்ஸ் சொல்லிக்கொடுத்தேன். அதில் பணத் தேவைகள் பூர்த்தியானாலும்... மனத் திருப் தியோ, சவாலோ இல்லை. மூணு வருஷம் முன்னாடி ஒரு வேலையா சுண்ணாம்புக் கால்வாய் வழியா போனேன். அங்கேஏதோ லோக்கல் நிகழ்ச்சிக்காக பசங்க மேடையில் குத்துப் பாட்டுக்கு ஆடிட்டு இருந்தாங்க. செம லோக்கல் டான்ஸ். ஆனா, அற்புதமா இருந்தது. வளைஞ்சு, நெளிஞ்சு, மடங்கி, நிமிர்ந்து உற்சாகமா ஆடிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஹிப் ஹாப் சொல்லிக் கொடுத்தா, பின்னி எடுப்பாங்கன்னு தோணுச்சு.

பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்

உடனே, என் நண்பர் ஜான் மூலமாஆர்வ மான பசங்களைத் தேர்ந்தெடுத்தோம். ஹிப் ஹாப்ங்கிறது ஒரு கலாசாரம். அதைக் கத்துக்கணும்னா, அதுக்கு ஏத்த மாதிரி வாழப் பழகணும். அந்தப் பசங்களுக்கு நல்ல தமிழ், நல்ல இங்கிலீஷ் ரெண்டும் சொல்லிக்கொடுத்தோம். ஜீன்ஸ், டி-ஷர்ட், பெர்முடாஸ்னு அவங்களோட உடைகளை யும் மாத்தினோம். புது ஆட்களிடம் எப்படிக் கை கொடுக்கணும்னு ஆரம்பிச்சு, ஹோட்டல்களில் சாப்பிட்டதும் வாய் துடைக்க நாப்கின் பயன்படுத்துறது வரை சொல்லிக்கொடுத்தோம். ஏன்னா, போட்டி களுக்காக வெளி மாநிலமோ, வெளி நாட்டுக்கோ போகும்போது டான்ஸர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பாங்க. அதனால, எப்பவும் ஜென்டில்மேனா இருக்கணும்.

பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்

முதல் ஷோவில் இவங்க மேடை ஏறினதும், 'என்னடா, லோக்கல் பசங்க மாதிரி இருக்காங் களே'ன்னு ஆடியன்ஸ் லேசா புருவம் உயர்த்தி னாங்க. ஆனா, ஷோ முடிஞ்சதும் அப்ளாஸ் பிச்சிருச்சு. ஒரு வருஷ உழைப்புக்குக் கிடைச்ச வெற்றி!" என்றபடியே தியாகுவை அறிமுகப்படுத் தினார் ஆண்டோ.

"எனக்கு இன்னொரு பேர் இருக்கு... ஐ யாம் பி பாய் ப்ளாக்!"- பெரிய சிரிப்போடு பேசத் துவங்கு கிறார் தியாகு. "ஹிப் ஹாப் டான்ஸர்ஸ் அவங்க ளோட கலாசாரத்துக்கு ஏத்த மாதிரி பேர்வெச்சுப் பாங்க. அதனால நரேஷ், நாஷ் ஆகிட்டான். சுரேந் தர், ஸ்பைக் ஆகிட்டான். கார்த்திக், கெவ் ஆகிட்டான். இந்த வாழ்க் கையே எங்களுக்குப் புதுசா இருக்கு. நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். சும்மா பொழுது போகாம ரோட்ல ஆடிட்டு இருப்பேன். இப்போ ஸ்டேஜில் ஏறி புரொஃபஷனலா ஆடிக் கைதட்டு வாங்குறது சந்தோஷமா இருக்கு. சென்னையைத் தாண்டியவன் இல்லை நான். ஆனா, இப்போ ஹைதரா பாத், பெங்களூரு, மும் பைனு பல நகரங்கள் பார்த்துட்டேன். ஹிப் ஹாப்ல 2000-னு ஒரு ஸ்டைல் இருக்கு. அதில் சென்னையின் பெஸ்ட் டான்ஸர் நான் தான். வாய்ப்பு கிடைச்சா, யாரும் சாதிக்கலாம்கிறதுக்கு நானே ஓர் உதாரணம்!" என்கிறார் தியாகு.

"சென்னை மாநகராட்சிப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சுரேந்தரின் அப்பா ஒரு

பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்

வாட்ச்மேன். கார்த்திக் கின் அப்பா டீக்கடை வெச்சிருக்கார். இப்படி எல்லோ ருமே பின் தங்கிய குடும்பங்களில் இருந்து வந்தவங்க. ஜானும் அவரது மனைவி சோஷியாவும் எங்களுக்கு ஷோ வாய்ப்புகள் வாங்கித் தர்றாங்க. அதில் வருகிற வருமானத் தைப் பசங்க கையில் கொடுக்க மாட்டோம். அவங்களுக் குத் தேவையான ஷூ, டான்ஸ் காஸ்ட்யூம், ஸ்கூல்-டியூஷன் ஃபீஸ், நோட்டுப் புத்தக செலவுகளை அதைவெச்சே சமாளிப்போம். ஒரு பையன் நல்ல பெர்ஃபார்மர் ஆனதும், தனியே ஷோ நடத்தச் சொல்லி அனுப்பிருவேன்.

அடுத்ததா இன்னும் 10 டான்ஸர்களை உருவாக்கணும். இப்போ எனக்கு என் வேலை நிம்மதியா, சந்தோஷமா இருக்கு"- ஆனந்தமாகச் சிரிக்கிறார் ஆண்டோ!

பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்
பிபாய் ப்ளாக் கெவ் ஸ்பைக் நாஷ்