1. புகைப்படத்துடன் கூடிய பெயர்
2. சொந்த ஊர்? (உள்ளூரா... வெளியூரா)
3. பட்டப் பெயர்/புனை பெயர்
4. அங்க அடையாளங்கள்
5. ஏற்கெனவே வேலை பார்த்த இடம்
அதன் உரிமையாளர் பெயர் / போன் எண்ணுடன்
6. வேலையை விட்டதற்கான நிஜக் காரணம்
7. கையில் வைத்திருக்கும் செல் எண்/
வீட்டில் லேண்ட் லைன் இருந்தால், அதன் எண்
8. படிப்பு விவரங்கள்
9. பிறந்த தேதி/ வயது
10. குடும்ப விவரங்கள் - அப்பா, அம்மா, மனைவி,
குழந்தைகள், நெருக்கமான
உறவினர்கள், சொந்த ஊர்
நண்பர்கள். (முகவரி/ போன் எண்ணுடன்)
11. அவசரத் தகவல் தொடர்புக்கு - நண்பர்கள்
இருவர்... உறவினர்கள் இருவர்...
(முகவரி / போன் எண்ணுடன்)
12. வேலைக்கு அறிமுகப்படுத்தியவர் யார்? முகவரி,
போன் எண்ணுடன் விவரங்கள்
13. தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமாக
வந்தவரா? விவரங்கள் போன் எண்ணுடன்
14. திடீரென்று ஒரு நாள் டிரைவரைக் காணவில்லை.
அவரை வெளியில் எங்காவது கண்டால்,
போலீஸுக்கு அடையாளம் காட்டக்கூடிய உங்கள்
வீட்டு நபர்கள் யார் யார்?
(முகவரி, போன் எண்ணுடன்)
15. அடிக்கடி சென்று வருவது - சொந்த ஊர்/ உள்ளூர்... எங்கே?
16. வேலையில் சேரும்போது வாங்கி வைக்கவேண்டிய
சான்றிதழ்களின் பிரதிகள் -
ரேஷன் கார்டு / டிரைவிங் லைசென்ஸ் /
பாஸ்போர்ட்/ பள்ளிச் சான்றிதழ் / மற்றவை...
17. குறிப்புகள் ஸ்பெஷலாக ஏதாவது
இந்த விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட உதவி போலீஸ் கமிஷனர் ராதா கிருஷ்ணன் மேலும் கூறியதாவது,
''தற்போது வேலைக்கு ஆள் கிடைப்பதே குதிரைக் கொம்பு. இதில் இந்தப் பட்டியலை அவர்கள் முன் நீட்டினால், 'எதுக்குடாவம்பு?' என்று நல்லவர்களும் பயந்து பின்வாங்கிவிடுவார்களே என்று நீங்கள் தயங்கலாம். முதல் நாளே பணியாளர்களிடம் இந்த விவரங்களை எல்லாம் சேகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அத்தியாவசியத் தகவல்களை மட்டும் சேகரித்துக்கொண்டு, பின்னர் ஒரு மாத காலத்தில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பேசிப் பேசி, வேண்டிய தகவல்களைச் சேகரித்து, நீங்களே கேள்வித்தாள் கட்டங்களைப் பூர்த்திசெய்துவிடுங்கள். அவர்கள் அளித்த முகவரிக்கு ஏதாவது ஒரு விசேஷ நாளுக்கான வாழ்த்து அட்டையைத் தபாலில் அனுப்புங்கள். அது திரும்பி வர வில்லை என்றால், கொடுத்த முகவரி நிஜமாக இருக்கலாம். ஒருவேளை, 'முகவரியில் ஆள் இல்லை அல்லது, அப்படி ஒரு முகவரியே இல்லை' என்று வாழ்த்து அட்டை திரும்பி வந்தால், நீங்கள் உஷார் ஆக வேண்டியது அவசியம்!
இளம் வயதினர், குடி, போதைப் பாக்கு போன்ற பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், செல்போனில் அடிக்கடி கோபமாகப் பேசு கிறவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளாதீர்கள். ஒருவேளை, அப்படியான ஒருவரை வேலைக்கு அமர்த்தி இருந்தால், உடனடியாக நீக்கிவிடுங்கள். அதற்கான காரணத்தை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். பிற்காலத்தில் அந்த நபர் ஏதேனும் உதவி கேட்டு வந்தால், புறக்கணித்து விடும்படி தெளிவாக எச்சரித்துவிடுங்கள்!
அனைத்துப் பணியாட்களும் மோசமானவர் கள் அல்ல. ஆனால், சமயங்களில் நாம் அமைத் துக்கொடுக்கும் சுதந்திரமான சூழல்தான்,
சஞ்சலத்தில் இருப்பவரையும் சலனப்படுத்தும். அதனால், எந்த நேரமும் விழிப்புடன் இருங்கள்!" என்கிறார் உறுதியாக.
கார், வேன்களில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் விழிப்பாக இருக்கிறார்களா என்பதைக் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கவனித்துக்கொண்டே இருப்பார். அதைக் காட்டிலும் அதிக விழிப்பு உணர்ச்சியை அந்த ஓட்டுநர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் காட்ட வேண்டியது, குடும்பத்தினர் ஒவ்வொருவருடைய கடமையாகும்!
|