எஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் ஷோ!' ஜிம்னாஸ்டிக், ரோலர் ஸ்கேட், சிங்கிள் வீல் சைக்கிள்,
சிற்பம், லேசர் எனப் பல கலைகளை நளின நடன அசைவுகள் கோத்து அரங்கேற்றும் திறமைசாலிகளின் கண்காட்சி!
உள் அரங்கு ஒன்றின் அடக்கமான மேடையில் அந்த திறமைசாலிகள் நிகழ்த்திய சாகசங்கள் பிரமிப்புக்கே பிரமிப்பூட்டுபவை! (உபயம்: 'ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர்!')
தரையில் கால் பதித்து ஒருவர் நிற்க, அவரு டைய உள்ளங்கையில் எறி நின்று பேலன்ஸ் செய்து, ஏரோபிக்ஸ் செய்கிறார் அந்த ஆண். அதிலும் ஒவ்வோர் அசைவும் மிக மென்மையான ஸ்லோமோஷன் பாணியில். தொடர்ந்து, கீழே இருப்பவர் படுத்துக்கொண்டு தன் கால்கள் இரண்டையும் மேலே தூக்க, அவருடைய உள்ளங்கால் மேல் பேலன்ஸ் செய்து, கைகளை விரித்து சிலையாக நிற்கிறார் அவர். நீர் மேல் பிம்ப சலசலப்புகூட இல்லாத துல்லியம்!
|