Published:Updated:

எட்எட்டு!

எட்எட்டு!

எட்எட்டு!
எட்எட்டு!
எட்எட்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் டீம்
எட்எட்டு!

வாங்கிய பொருள் சங்கீதா கிரிஷ், நடிகை.

எட்எட்டு!

"என் கணவர் கிரிஷுக்கு breitling நிறுவன கைக்கடிகாரம் என்றால் உயிர். எங்கேயாவது ஷாப்பிங் மால் ஷோ ரூம்ல அந்த வாட்ச்சைப் பார்த்துவிட்டால், நின்று ரசிச்சுப் பார்த்துக்கொண்டே இருப்பார். 'மன்மதன் அம்பு' ஷூட்டிங்குக்காக வெனிஸ் போயிருந்தேன். அங்கே இந்த வாட்ச்சைப் பார்த்தவுடன் கிரிஷ் ஞாபகம்தான் வந்தது. உடனே வாங்கிட்டேன். வீட்டுக்கு வந்ததும் சர்ப்ரைஸா அவருக்கு அதைப் பரிசளித்தவுடன் சந்தோஷத்தில் துள்ளிக் குதிச்சுட்டார். அடிக்கடி கையில் கட்டுறதும் கழட்டறதுமா... சாரோட பந்தா தாங்க முடியலை!"

பார்த்த படம் அறிவழகன், இயக்குநர்.

எட்எட்டு!

"பல பேர் புரியாது என்று பயமுறுத்திய பின்பும் Inception படம் பார்த்தேன். எனக்குப் படம் ரொம்பவே பிடித்திருந்தது. ஒரு கனவுக் குள், அந்தக் கனவுக்குள், மீண்டும் அந்தக் கனவுக்குள்... என ஒன் லைன் சொல்வதற்கே கஷ்டமாக இருக்கும் சிக்கலான கதைக்கு, தெளிவான திரைக்கதை அமைத்து, சினிமா ஆக்கியிருப்பது பிரமிப்பு. கேமரா கோணங்கள் முதல், லைட்டிங், கூர்மையான வசனங்கள் என அத்தனை அம்சங்கள் மூலமும் நமக்குக் கதையைப் புரிய வைக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். புரிந்துகொண்ட நாம் புத்திசாலி அல்ல; புரியவைத்த அவர்தான் உண்மையில் புத்திசாலி!"

பாதித்த சம்பவம் அ.வெண்ணிலா, கவிஞர்.

எட்எட்டு!

"டெல்லி காமன் வெல்த் எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த எழுத்தாளர்களுக்கு பாரதி, புதுமைப்பித்தன், நா.பார்த்த சாரதியைத் தவிர, வேறு எந்தத் தமிழ் படைப்பாளிகளையும் தெரிய வில்லை. காரணம், தமிழ் எழுத்துக்களின் மொழிபெயர்ப்பு மற்ற பிராந்திய மொழிகளில் குறிப்பிடப்படும் அளவுக்கு நடைபெறவே இல்லை. தமிழ் எழுத்துக்களை அனைவருக்கும் எடுத்துச் செல்ல பரந்த அளவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் மிக அவசியம்... மிக அவசரம்!"

சந்தித்த நபர் கிஷோர், நடிகர்.

எட்எட்டு!

" 'பூமித் தாய்' என்ற கன்னடப் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அதன் ஷூட்டிங்கில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். யாரோ ஷூட்டிங் பார்க்க வந்த பெண் என்றுதான் நினைத்தேன். பிறகு பார்த்தால், அந்தப் பெண்தான் எனக்குப் படத்தில் மகளாக நடித்தார். டி.வி-யில் நடித்துக்கொண்டு இருந்த அந்தப் பெண்ணின் பெயர் அனுஸ்ரீ. அவருக்கு அதுதான் முதல் சினிமா. ஆனால், பிரமாதமாக நடிக்கிறார். 'நிஜத்தில் எனக்கு இப்படி ஒரு மகள் இருந்தால் நன்றாக இருக்குமே' என்று ஏங்க வைத்துவிட்டார்!"

கேட்ட இசை அனுராதா ஸ்ரீராம், பாடகி.

எட்எட்டு!

"சமீப நாட்களாக நான் கபீர் பஜன்ஸ் கேட்கிறேன். வருடந்தோறும் மத்தியப்பிரதேச மாநிலத்தில், கிராமத்து இசை விழாக்கள் நடத்து வார்கள். அதன் ஒரு வடிவமாக கபீர் பாடல்கள் பாடுவார்கள். எந்த ஒரு கடவுள் பற்றியும் கபீர் பாடவில்லை. நம் ஊர் பாரதியைப்போல, சமுதாய சிந்தனைகள்கொண்ட பல பாடல்களை இயற்றி இருக்கிறார். குருவுக்குத்தான் முதல் ஸ்தானம் தருகிறார் கபீர். தீபாவளிச் சுடர்போல, கபீரின் பாடல்களும் ஒளி தருபவை. கபீர் எழுதிய வரி களின் தாக்கத்தால் நானும் அந்தப் பாடல்களைப் பாடக் கற்றுக் கொண்டேன்!"

சென்ற இடம் சந்தானகிருஷ்ணன், ஓவியர்.

எட்எட்டு!

"வருடந்தோறும் நடக்கும் 'ஆர்ட் சிங்கப்பூர்' விழாவுக்காக சிங்கப்பூர் சென்றிருந்தேன். ஆசிய ஓவியர்களுக்கு சிங்கப்பூர் ஒரு சொர்க்கம். பல நாடுகளில் இருந்தும் பலதரப்பட்ட ஓவியங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தியாவின் சார்பாக நான் வைத்திருந்த விதவிதமான பாரம்பரியக் கதவு ஓவியங்களை எல்லோருமே ஆச்சர்யமாகப் பார்த்து விசாரித்துச் சென்றார்கள். அங்கு எனக்கு ஆச்சர்யம் தந்தது, சிங்கப்பூரின் பெரும்பாலான இடங்களில் கடைகளுக்குக்கூட தமிழில் பெயர்ப் பலகைகள் வைத்திருந்தது!"

சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி
கம்பம் செல்வேந்திரன், டெல்லி பிரதிநிதி, தி.மு.க.

எட்எட்டு!

"சித்திரைத் திருவிழா கொண்டாடும் மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டேன். கொட்டும் மழையில், அந்தத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அந்த மழையிலும் புத்தகத்தின் மீது ஆர்வம்கொண்டவர்கள், ஒவ்வொரு புத்தகமாக திருப்பிப் பார்த்து, வாசித்து, விலை கொடுத்து வாங்கிச் சென்றார்கள். சுமார் ஆறு லட்சம் பேர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்களாம். மக்களின் இந்தப் புத்தக வாசிப்பு ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது!"

படித்த புத்தகம் வசுமித்ர, கவிஞர்.

எட்எட்டு!

"பா.வெங்கடேசன் எழுதிய 'தாண்டவராயன் கதை' நாவலை சமீபத்தில் வாசித்தேன். பொதுவாக, தொன்மங்களை வைத்து நிறையப் பேர் கதை எழுதி இருக்கிறார்கள். ஆனால், இவர் ஒரு புதிய தொன்மத்தையே அறிமுகப்படுத்தி கதை சொல்கிறார். கதையில் ஃபிரெஞ்சு கலாசாரம் வருகிறது, திப்புசுல்தான் வருகிறார், தமிழ் சிறு தெய்வங்கள் வருகின்றன. பொதுவாக, நாவல் என்றால், கதை முழுக்க ஒரு நபர் கதாநாயகனாக வருவார். ஆனால், இதில் சிறு சிறு பாத்திரங்கள் கதை நாயகனுக்கு உரிய முக்கியத்துவத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளன!"

எட்எட்டு!
எட்எட்டு!