Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

கிரிக்கெட் வீரர்களுக்குச் சவால் விடும் வகையில் விளம்பர ஒப்பந்தங்களிலும் விறுவிறுவென முன்னேறி வருகிறார் சாய்னா நெஹ்வால். டோனி, சச்சின், ஷேவாக்குக்கு அடுத்தபடியாக, விளம்பரங்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டுபவர், சாய்னாதான். ஒரு விளம்பரத்தில் நடிக்க சாய்னா வாங்கும் சம்பளம்...

இன்பாக்ஸ்

1 கோடி. முன்னால் முன்னால் முன்னால் முன்னால்... வாம்மா!

இன்பாக்ஸ்

ஜன்னி வந்த எஃபெக்ட்டில் இருக்கிறார் ஜெனிலியா. ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்புக்காகச் சென்ற இடத்தில் ஹோட்டலில் ஒரு மர்மக் குரலைக் கேட்டாராம் ஜெனி. "அந்த ஹோட்டல் ரூம் முழுக்க, விநோதமான ஓவியங்கள் இருந்தன. அப்பவே எனக்கு டவுட். நைட் திடீர்னு சுவரில் பேச்சுக் குரல் கேட்க ஆரம்பிச்சிருச்சு. அலறி

இன்பாக்ஸ்

அடிச்சுட்டு வெளியே வந்தா, பக்கத்து ரூம்களில் இருந்தவங்களும் பயந்து போய் வெளியே நின்னுட்டு இருந்தாங்க. நிச்சயம் அது பேய்தான்!" என்று கண்களை உருட்டுகிறார் ஜெனி. அப்படியே ஷாக் ஆகி இருப்பீங்களே!

கர்நாடக நடிகர் சங்கம், வரும் ஜனவரியில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர் சங்கங்களை இணைத்து, பெங்களூரில் ட்வென்ட்டி:20 கிரிக்கெட் போட்டியை நடத்த இருக்கிறது. பாலிவுட் அணிக்கு சல்மான் கானையும், கோலிவுட் அணிக்கு விஜய்யையும் கேப்டனாக நியமிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். வுட் கிரிக்கெட்!

இன்பாக்ஸ்

'மைனா' படம் மூலம் டாப் ஹீரோயினாகிவிட்ட அமலா பால், விஜய் இயக்க... விக்ரம் நடிக்கும் 'தெய்வ மகன்' படத்தில் நடிக்கிறார். மைனாவுக்கு றெக்கை முளைச்சிருச்சு!

'அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில், சென்னையில் இருக்கக் கூடாது' என்பதற்காகவே வெளிநாட்டில் ஷூட்டிங் வைக்கச்சொல்லி, இப்போதே கால்ஷீட் கொடுக்கிறார்களாம் கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள். லிஸ்ட்டில் தல, தளபதியும் உண்டு. தேர்தல் வந்தாலே தேடுதல் ஆரம்பிச்சிருமே!

இன்பாக்ஸ்

'மங்காத்தா' படம் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே ஹாலிவுட் ஸ்டைலில், தீபாவளி அன்று தியேட்டர்களில் டீசர் விளம்பரம் செய்யத் திட்டமிட்டாராம் வெங்கட் பிரபு. "படத்தின் ஸ்க்ரிப்ட்டை முழுவதுமாக முடித்துவிட்டு, அப்புறம் டீசர் போடலாம்" என்று வெங்கட் பிரபுவுக்கு நோ சொல்லிவிட்டாராம் அஜீத்! 'உள்ளே வெளியே' விளையாட்டா இருக்கே!

இன்பாக்ஸ்

பாலிவுட்டில் இப்போது ரீ-மேக் சீஸன். குறிப்பாக தமிழ், தெலுங்குப் படங்களைப் போட்டி போட்டு வாங்குகிறார்கள். அபிஷேக் பச்சன் 'கில்லி' படத்தின் ரீ-மேக்கில் நடிக்க, அஜய் தேவ்கன் 'சிங்கம்' படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார். தெற்கு செய்யுது... வடக்கு வாங்குது!

இன்பாக்ஸ்

ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினீயர் ரசூல் பூக்குட்டி, இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார். நீண்ட நாட்களாகத் தனது மனதில் வைத்திருந்த எமோஷனல் கதையை அமிதாப்பிடம் பூக்குட்டி சொன்னாராம். "நிச்சயமாக நடிக்கிறேன்" என்று டபுள் ஓ.கே. சொல்லிவிட்டாராம் பிக் பி. அடுத்த அவார்டு ரெடி!

இன்பாக்ஸ்

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பவர்ஃபுல் மனிதர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் இடம் பிடித்திருக்கிறார் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ. ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டு உலகில் உள்ள 6.8 பில்லியன் மக்களில் 68 பவர்ஃபுல் மனிதர்களைத் தேர்ந்தெடுத்தது. பட்டியலில், சோனியா காந்தி ஒன்பதாவது இடத்தையும், மன்மோகன் சிங் 18-வது இடத்தையும் பிடித்தனர். ஆன்னா ஊன்னா... இப்போ சீனா வந்திருதுப்பா!

இன்பாக்ஸ்

பிரேசிலின் முதல் பெண் ஜனாதிபதி, 62 வயதான டில்மா ரூஸ்ஸஃப். டில்மா, பொருளாதார வல்லுநர் என்பதோடு, 1970-களில் பிரேசிலில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற உள் நாட்டுப் போரில் கெரில்லா தாக்குதலை முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. போராளித் தலைவி!

பாண்டிச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் தினமும் காலையில் ஷேர் மார்க்கெட் நிலவரங்களை அப்டேட் செய்துகொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. ஷேர் மார்க்கெட்டில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்து வைத்திருப்பதுதான் காரணம். மார்க்கெட் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப முதலமைச்சரின் மூடும் மாறுமாம். டீச்சர் சொல்லித்தரலியா... ஷேரிங்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்