Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

வருங்காலத் தொழில்நுட்பம்


வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்

ரண்டு வாரங்களுக்கு முன் சான்ஃபிரான்சிஸ்கோ டெக் கான்ஃபரன்ஸ் ஒன்றில் பேசிய

கூகுள் சி.இ.ஓ எரிக் ஸ்மித், 'கார்களின் பிரச்னை, அவை கம்ப்யூட்டர்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதுதான். இல்லை என்றால், கார்கள் இப்போது தங்களைத் தாமாகவே ஓட்டிக்கொண்டு இருக்கும்!' என்று வேறு ஏதோ கேள்விக்குப் பதில் அளிக்கையில், எக்ஸ்ட்ரா ஒரு பிட் விட, டெக் உலக நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் முகங்களில் பளீர் பல்ப். அவர்கள் சுறுசுறுப்பாக அதைப்பற்றிய செய்திகளைத் தேடத் துவங்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக ரகசியமாக கூகுள், தானோட்டு கார் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அதைப்பற்றிய விவரங்களைப் பார்க்கும் முன், கூகுளின் 'Street View' புராஜெக்ட்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.

வருங்காலத் தொழில்நுட்பம்

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் கட்டப்பட்டு இருக்கும் கூகுளின் மேப்ஸ் தளம் (http://maps.google.com) பிரபலமானது. புதிய இடம் ஒன்றுக்குச் செல்கையில் திசைகள் தெரிந்துகொள்ள மேப்ஸ் தளம் பயன்படும். அந்தத் தளத்தின் பயனீட்டை அதிகரிக்க, கூகுள் சென்ற ஆண்டில் Street View என்பதை அறிமுகப்படுத்தியது. செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும் பறவைப் பார்வையுடன், தெருவில் நடக்கும்போது பார்க்கும் பார்வையையும் இணைத்தால் என்ன என்ற சிந்தனையின் வடிவாக்கம்தான் Street Viewன் அடிப்படை. உதாரணமாக, பாளையங்கோட்டை NGO காலனியில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடைபெறும் நண்பனின் திருமண வரவேற்புக்கு, நெல்லை டவுனில் இருந்து வர வேண்டி இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். கூகுள் மேப்பில், எங்கிருந்து புறப்பட்டு, எங்கே செல்ல வேண்டும் என்பதைக் கொடுத்தால், திருப்பம் பை திருப்பமாக அது வழி சொல்லிக்கொடுக்கும். இதனுடன், செல்லும் வழியில் உள்ள பாதையையே தொடர்புகைப்படமாகக் காட்டினால், மிக வசதியாக இருக்கும். 'அப்டியே வந்து, பிள்ளையார் கோயில் முக்குல திரும்பி, ஒரு ரெண்டு நிமிஷம் ஓட்டினா, அண்ணா சிலை வரும். அதுல லெஃப்ட்ல திரும்பினா...' என்றெல்லாம் நண்பனின் குளறுபடி திசை காட்டல் தேவைப்படாது. எங்கே போகப்போகிறீர்கள்; அதன் பாதையில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு விஷ§வலாக, புறப்படுவதற்கு முன்பே தெரிந்திருக்கும். 'நல்லா இருக்கே' என்று தோன்றலாம். ஆனால், இதைக் காரியத்தில் கொண்டுவர, கூகுள் பட்ட/படும் பாடு பெரிது. தெருக் காட்சிகளைப் படம் எடுக்க கேமரா பொருத்தப்பட்ட கார்களை அனுப்பிவைக்க வேண்டும். இந்த கார்கள் சீரான வேகத்தில் செல் லும்போது, தெருக் காட்சிகள் படம் எடுக்கப்பட்டு, சரியாக இணைக்கப்பட வேண்டும். இப்படிப் படம் எடுத்ததில் சில்லறைத்தனமாகவும், சீரியஸாகவும் கூகுள் எதிர்பார்க்காத சில பிரச்னைகள்.

வருங்காலத் தொழில்நுட்பம்

உதாரணத்துக்கு, கோடைக் காலம் என்பதால், நீச்சல் குளத்தின் அருகே டாப்லெஸ்ஸாக சூரியக் குளியல் எடுத்தபடி இருந்த சீமாட்டியின் படம் வேலிகளுக்கு இடையே தெரிவதை பக்கத்து வீட்டு மாமி சொல்லித் தெரிந்துகொண்ட சீமாட்டி அப்செட். சாலை விபத்தில் இறந்தவரின் பிணம் நகர்த்தப்படாமல் அப்படியேகிடக்கும் க்ளோசப் கோரக் காட்சி என்ற ரீதியிலான குற்றச்சாட்டுகள் சமர்ப் பிக்கப்பட்டால், அவற்றை கூகுள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதால், அதற்கான பணியாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அவசியம் வேறு.

வருங்காலத் தொழில்நுட்பம்

அதைவிட முக்கியமானது, இந்த கேமரா கார்கள் தெருவில் உலா வருகையில், தெருப் புகைப்படங்களை எடுப்பதற்கும் மேலாக என்னென்ன மற்ற தகவல்களைச் சேகரிக்கலாம் என்ற ஆர்வக் கோளாறு காரணமாக, வீடுகளில் இருக்கும் வயர்லெஸ் இணைப்புகளின் விவரங்களையும் சேகரித்தது தெரிய வர... பல நாடுகளின் அரசாங்கங்களுக்குக் கோபம். ஜெர்மனிபோன்ற சில நாடுகள்... கூகுள், கேமரா கார்களைப் பயன்படுத்துவதையே தடை செய்துவிட, 'தெரியாம செஞ்சுட் டேண்ணா... இனி இப்படி பண்ணவே மாட் டேங்ணா!' என்று சர்வதேச மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை. ஆனாலும், எங்கெல்லாம் முடிகிறதோ, அங்கெல்லாம் தொடர்ந்து தெருப் பார்வை புகைப்படம் எடுக்கும் கார் களை ஓடவிட்டு, தகவல் திரட்டபடியேதான் இருக்கிறது கூகுள்.

Street View அறிமுகம் போதும். இப்போது ஆளே இல்லாமல் கார் ஓட்டும் தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம்.

சென்ற ஒரு வருடமாக, ஓட்டுநர் இயக்க வேண்டிய அவசியம் இல்லாமல், GPS மற்றும் சென்சார்களின் உதவியுடன் பல டொயோட்டா கார்களை சான்ஃபிரான்சிஸ்கோவில் இயக்கி வருவதை கூகுள் ஆமோதித்து இருக்கிறது. பரிசோதனை முயற்சியாக, கிட்டத்தட்ட 1,50,000 மைல்கள் இப்படி ஓட்டப்பட்டு இருக்கும் கார்களில், ஓட்டுநர்

வருங்காலத் தொழில்நுட்பம்

ஒருவர் இருப்பார். தானியக்கத்தில் பிரச்னை ஏதேனும் ஏற்பட்டால், ஸ்டீயரிங் வீலை லேசாகப் பிடித்தால் போதும். காரின் தானியக்கம் நின்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் கார் வந்துவிடும். இது வரையிலான இந்தப் பரிசோதனையில், விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை. இரண்டு முறை மட்டுமே ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டுக்கு காரை கொண்டுவர வேண்டிய அவசியம் இருந்தது என்பது கொசுறு செய்திகள்.

'இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மனித சமூகத்துக்கு மிகப் பாதுகாப்பான வாகன ஓட்டுதலை அளிக்க கூகுள் முயற்சி செய்வது பாராட்டத்தக்கது!' என்ற ரேஞ்சில் எழுதப்படும் பதிவுகளைப் படிக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. கூகுள் குடுமி அப்படியெல்லாம் சும்மா ஆடாது; அவர்களின் நோக்கமே வேறு என்பது எனது திடமான எண்ணம். அதை விரிவாக அடுத்த வாரத்தில் பார்க்கலாம்!

வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
LOG OFF