Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குவாட்டர் கட்டிங்னா என்னப்பா?
நானே கேள்வி... நானே பதில்!

" 'எந்திரன்' படத்தின் கதை என்னுடையது என்று சிலர் புறப்பட்டு

இருக்கிறார்களே?"

"ஸ்ரீதர் இயக்கத்தில் 'தேன் நிலவு' படம் வெளிவந்தபோது, 12 பேர் 'இது என்னுடைய கதை' என்று வழக்குத் தொடுத்தார்கள். வழக்கு கோர்ட்டுக்கு வந்தது. 12 பேரையும் அழைத்து விசாரித்தார் நீதிபதி. '12 பேருக்கு வந்த கற்பனை... 13-வதாக எனக்கும் வந்திருக்காதா?' என்று நீதிபதியைப் பார்த்து ஸ்ரீதர் கேட்டார். வழக்கு தள்ளுபடியானது!"

- எஸ்.சாரிகா, சென்னை-78.

"சமீபத்தில் நெஞ்சை நெகிழவைத்த செய்தி?"

நானே கேள்வி... நானே பதில்!

"காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வந்து இருந்தார் துணை ஜனாதிபதி அன்சாரி. தனி விமானம் மூலம் வந்த அன்சாரியை, விமான நிலையத்தில் வரவேற்றார் தமிழக அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பிறகு, அவருடன் காந்தி கிராமத்துக்கும் சென்றார். அரசு தனக்குக் கொடுத்த பணியைப் பொறுப்புடன் செய்து முடித்தார் உபயதுல்லா. அப்போதுதான் அந்தத் தகவல் துணை ஜனாதிபதிக்கு சொல்லப்பட்டது. 'சற்று நேரத்துக்கு முன்பு உங்கள் அன்பு மகன் இறந்துவிட்டாராமே. அதன் பிறகும் ஏன் எனக்காக வந்தீர்கள்?' என அன்சாரி பதறினார். அனுமதி பெற்றுக்கொண்டு, இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தஞ்சை புறப்பட்டுச் சென்றார் அமைச்சர். பாராட்டப்பட வேண்டிய பண்புடைய அமைச்சர்!"

- ஆர்.கே.சுந்தரம், சென்னை-26.

" 'தர்மசங்கடம்' என்றால் என்ன?"

"டி.வி-யில் பட விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, 'அப்பா, குவார்ட்டர் கட்டிங்னா என்னப்பா?' என்று உங்கள் ஐந்து வயது மகன் கேட்பது!"

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

"மண்டையைக் குழப்பிய விஷயம்?"

"சமீபத்தில் நாளிதழ்களைப் புரட்டியபோது பிரமாண்டமான முழு நீள விளம்பரம் தென்பட்டது. அது உத்தரப் பிரதேச அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரம். உத்தரப்பிரதேச அரசின் சாதனைகளை ஏன் தமிழகத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்?"

- பா.சங்கரி, விழுப்புரம்.

"புதுப் பாடல்களில் பாடல் வரிகளுக்கும், காட்சி அமைப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே?"

"பழைய பாடல்களிலும் நீங்கள் சொல்லும் குறை உண்டு. உதாரணமாக, 'நல்ல நேரம்' திரைப்படத்தில், 'ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' என்ற பாடல் வரும். எம்.ஜி.ஆர் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு இருக்கும்போது, 'உழைக்காமல்' யானையைவைத்து வித்தை காட்டி வசூல் செய்துகொண்டு இருப்பார். ஊருக்கெல்லாம் கொடுக்க மாட்டார், ஊர் மக்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு இருப்பார். அதேபோல், 'பல்லாண்டு வாழ்க' படத்தில் 'ஒன்றே குலம் என்று பாடுவோம்! ஒருவனே தேவன் என்று போற்றுவோம்!' என்று பாடல் வரும். 'ஒருவனே தேவன்' என்று சொல்லும் பாடலின் அடுத்த பாராவிலேயே, இப்படி ஒரு வரி வரும், 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்'. நாங்களும் கண்டுபிடிப்போம்ல!"

- ஏ.கே.சம்சுதீன், திருச்சி.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!