Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் வரவேற்பறை

உண்மைக் கவிஞன் www.arivumathi.wordpress.com

விகடன் வரவேற்பறை

ணர்வுகளின் மென்மையையும் அரசியலின் தீவிரத்தையும் பேசும் அறிவுமதியின் படைப்புகள் அடங்கிய வலைப்பூ. 'அகதி முகாம்/ மழையில் வருகிறது/ மண் மனம்' என்று மூன்றே வரிக் கவிதை உணர்த்தும் உண்மை உலகளவு விரிந்தது. அறிவுமதியின் கவிதைகளும் கட்டுரைகளும் வெவ்வேறு தளங்களில் ஒரே குரலில் பேசுகின்றன. கவிஞரின் அனுபவங்கள், அவரைப்பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகள், அறிவுமதி இயக்கிய 'நீலம்' குறும்படம் பற்றிய விமர்சனம் ஆகியவை அறிவுமதி என்னும் ஆளுமை யின் நீள, அகலத்தை உணரவைக்கிறது. 2008-க்குப் பிறகான அறிவுமதியின் படைப்பு கள் வலையேற்றப்படாதது பெரும் குறை!

இலட்சுமணப்பெருமாள் கதைகள்
வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை பக்கம்: 406 விலை:

250

விகடன் வரவேற்பறை

தீந்த நேரம், சிரிப்பாணி, தொயந்து, விரசல், தாம்சம்... என புத்தகம் முழுக்க விரவிக் கிடக்கின்றன கரிசல் நிலச் சொற்கள். சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளை உயிரோட்டமான மொழியில் சொல்கிறார் இலட்சுமணப்பெருமாள். 'ஒட்டுவாரொட்டி' உள்பட பல கதைகளில் பாலியல் பேச்சுக்களை நகைச்சுவை இழையோட யதார்த்தமாக சொல்லிச் செல்கிறார். சிறுகதையின் மொழி தட்டையானதாக மாறி வரும் நிலையில், வட்டார வழக்கை லாகவமாகக் கையாளும் இலட்சுமணப்பெருமாள், கதைகளுக்குள் அரசியலையும் வைப்பதுதான் முக்கியமானது!

உலகத்தின் வாசல் http://regator.com

விகடன் வரவேற்பறை

ல இணயதளங்களின் தொகுப்பு இந்த இணையதளம். கலை, வணிகம், பொழுது போக்கு, உடல் நலம், அரசியல், தொழில்நுட்பம் எனப் பல தலைப்புகளில் பல்வேறு இணையதளங்கள் வெளியிடும் செய்திகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்துக் கொடுக்கிறார்கள். நாம் விரும்பும் செய்தியை க்ளிக் செய்தால், அது சம்பந்தப்பட்ட இணையதளத்துக்குச் சென்றுவிடலாம். பல துறை செய்திகளை ஒரே தளத்தில் படிக்கும் வாய்ப்பு இதன் வசதி. புதிய இணையதளத்தை அறிந்துகொள்ளலாம். தவிர, ஆங்கிலத்தில் பிரபலமான வலைப்பூ பக்கங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளம்... ஒரே ஒரு க்ளிக்கில் உலகத்தின் வாசல் திறக்கிறது!

நிறைவு இயக்கம்: இராம.முத்துகணேசன்

விகடன் வரவேற்பறை

சென்னைக்கு வேலை தேடி வரும் இளைஞனின் கதை. டிக்ஷனரி விற்றுக் கிடைக்கும் பணத்தில்தான் சாப்பிட வேண்டும். ஆனால், யாரும் டிக்ஷனரி வாங்குவது இல்லை. 'அதான் செல்போன்லயே இருக்கே?' என்கிறார்கள். கடைசியில், வயிறு ஜெயிக்கிறது. டிக்ஷனரியை பழைய பேப்பர் கடையில் விற்றுவிடுகிறான். ஆனால், கிடைத்த பணமோ கள்ள நோட்டு. ஈரத் துணியே இளைஞனுக்குப் பசியாற்றுகிறது. ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம் எல்லாமும் பாராட்டும்படி இருக்கிறது. கதைத் தேர்விலும், 'பசிக்கு ஈரத் துண்டு' போன்ற பழைய கிளிஷேக்களிலும் கவனம் தேவை!

தென் மேற்குப் பருவக் காற்று
இசை: என்.ஆர்.ரஹ்நந்தன் வெளியீடு:மோசர்பேர்
விலை:

69

விகடன் வரவேற்பறை

'கள்ளிக் காட்டில் பிறந்த தாயே...' மென்மை வரிகளும் மெல்லிசையுமாக வருடுகிறது. 'சாமி நூறு சாமி இருக்குதே... அட, தாய் ரெண்டு தாய் இருக்குதா?' என்கிற பாடல் பாசக்கார 'ஆத்தா'க்களுக்கு அர்ப்பணம். ஆண்டிப்பட்டி தாலுகா காதலர்களுக்கு இடையே ஆன ஈகோவை எடுத்துக்காட்டுகிறது 'ஏடி கள்ளச்சி' பாடல். 'கள்ளி கள்ளிச் செடி' பாடலில் ஸ்வேதா மோகனின் குரல் மட்டும் சுவாரஸ்யம். அத்தனை பாடல்களிலும் வைரமுத்து வின் வரிகள் வசீகரிக்கின்றன. பாடல்களில் பருவக் காற்று வாசத்தைப் படரவிட்டு இருக்கிறார் இசையமைப்பாளர்!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை