Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்

Published:Updated:
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5 கேள்விகள்

பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகனிடம்...

"வன்னியர்கள் ஒன்று சேருங்கள் என்று டாக்டர் ராமதாஸ் பேசி வருகிறார். ஆனால், அவர் சகோதரரே ராமதாஸைப் புறக்கணித்துவிட்டு, காங்கிரஸில் சேர்ந்திருக்கிறாரே?"

"இதில் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், அய்யாவின் தம்பி சீனிவாச கவுண்டர், அந்தக் காலத்தில் இருந்தே காங்கிரஸில்தான் இருந்து வருகிறார். அவர் எப்போதும் பா.ம.க-வில் இருந்தது இல்லை. பா.ம.க-வில் கட்சிப் பொறுப்பு வகித்ததோ, தேர்தலில் போட்டியிட்டதோ கிடையாது. அவர் இப்போது தன் மகனையும் அழைத்துச் சென்று, காங்கிரஸில் சேர்த்துவிட்டுஇருக்கிறார். அவ்வளவுதான்!"

வெற்றிகொண்டானிடம்...

"முக்கியமான முடிவுகளில் காங்கிரஸை தி.மு.க. கலந்து ஆலோசிப்பது இல்லை என்று இளங்கோவன் குற்றம்சாட்டிஉள்ளாரே?"

"சமீபத்தில், டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில் அவர்கள் எடுத்த முடிவுகளை எல்லாம் தி.மு.க-வைக் கேட்டுக்கொண்டா எடுத் தார்கள்? அவர் குறிப்பிடுவது அரசாங்க முடிவுகளைப்பற்றி என்றால், காங்கிரஸ் அரசுடன் ஆலோசிக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை முக்கியமானவர்களுடன் ஆலோசிக்கத்தான் செய்கிறோம். அதைத் தெரிந்துகொள்ளக்கூடிய இடத் தில் இளங்கோவன் இல்லாமல் இருக்கலாம். அதற்கு தி.மு.க. என்ன செய்யும்?"

5 கேள்விகள்

பண்ருட்டி ராமச்சந்திரனிடம்...

" 'தீய சக்திகள் ஒன்று சேர்வதைத் தடுக்க நல்லவர்கள் ஒன்றுசேர வேண்டும்!' என விஜயகாந்த் சொல்வதைப் பார்த்தால், கூட்டணி உறுதியாகிவிட்டதோ?"

"தீயவர்கள் ஒன்று சேர்கிற போது, நல்லவர்கள் தனியே இருப்பது தீயசக்திகள் வெல்வதற்கு வாய்ப்பாகிவிடும் என்று பொருள்படவே விஜயகாந்த் அவ்வாறு பேசியிருக்கிறார். இதை வைத்து 'தே.மு.தி.க. இங்கு செல்லும், அங்கு செல்லும்' என கூட்டணி பற்றி யாரும் கணிக்கத் தேவை இல்லை. அதேநேரம் 'கூட்டணியில் சேரத் தயார்' என்று இரண்டு ஆண்டு களுக்கு முன்பே கட்சியின் பொதுக் குழுவில் விஜயகாந்த் அறிவித்திருக் கிறார். யாருடன் கூட்டணி, எத்தனை ஸீட் என்பது எல்லாம் தேர்தல் நெருங்கும்போதுதான் முடிவாகும்!"

சிவாவிடம்....

"கௌதம் மேனனின் அடுத்த படத்தில் நீங்கள்தான் ஹீரோவாமே?"

"ஆமா தலைவா... ஏற்கெனவே கௌதம் சாரோட பெப்ஸி விளம்பரத்தில் வேலை பார்த்திருக்கேன். 'குவாட்டர் கட்டிங்' பார்த்துட்டுக் கூப்பிட்டார். 'நல்லா நடிச்சிருக்க. ஒவ்வொரு ஸீனுக்கும் விழுந்து விழுந்து சிரிச்சேன். நம்ம சேர்ந்து படம் பண்ணலாமா?'ன்னார். உடனே 'ஓ.கே. சார்'னு உற்சாகமா சொன்னேன். 'இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா' முடிஞ்சதும் பிப்ரவரியில் ஆரம்பிச்சுடலாம். ஏ.ஆர்.ரஹ்மான் மியூஸிக்'னு சொன்னார். இதுக்கு மேல என்ன வேணும்? நான் இப்போ ரொம்ப ரொம்ப ஹேப்பி!"

ஸ்ரேயாவிடம்...

" 'என் சொந்த விஷயத்தில் தயவு செய்து தலையிட வேண்டாம்' என்று ரொம்பவும் மனம் நொந்து பேசி இருக்கிறீர்களே... எதற்காக?"

"மீண்டும் மீண்டும் தனிப்பட்ட கேள்விகளால் என்னைத் துளைக்கும்போதுதான் இப்படிப் பேச வேண்டியிருக்கிறது. நான் எப்போதும் மற்றவர் களின் பெர்சனல் வாழ்க்கையை மதிக்கிறேன். அதேபோல, மற்றவர்களும் என் சொந்த வாழ்க்கையை மதித்து, அதில் தலையிடக் கூடாது என்று விரும்புகிறேன். நடிகை என்பதால், பெர்சனல் வாழ்க்கையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அப்படிச் சொல்வதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!"

5 கேள்விகள்
5 கேள்விகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism