ஒரு வகையில், இது தெருச் சண்டை மாதிரிதான். மற்ற கலைகளில் சில ஒழுக்க விதிகள் இருக்கும். ஆபத்தான சமயங்களில் விதிகளை ஞாபகத்தில் வெச்சுக்கிட்டு சண்டை போட முடியாது. நிஜ வாழ்க்கையில் எப்படி எல்லாம் ஆபத்து வரலாம். அதை நீங்கள் எப்படிச் சமாளிக்க முடியும் என்பதைக் கற்றுத்தருகிறோம். இதோட ஸ்பெஷல்... விரைவாகத் தாக்குவது. உடலின் முக்கியமான பகுதி களான கண், தாடை, தொண்டை, மூட்டு ஆகிய பகுதிகளைத் தாக்க கத்துக்கொடுப்போம். தாக்கியவுடன் எதிரி நிலை குலைஞ்சுடுவான். உடனே, அங்கிருந்து தப்பிச்செல்வதற் கான வழி தேடணும். இதுதான் க்ரவ் மகாவோட அடிப்படைக் கொள்கை. இமி லிட்ச்டென் ஃபெல்ட்என்பவர் தான் க்ரவ் மகாவை வடிவமைச்சார். நல்லா சண்டை போடணும்னா, நல்லா பாடி மெயின் டெய்ன் பண்ணிவெச்சிருக்கணும்னு நினைக்கி றாங்க. க்ரவ் மகாவைப் பொறுத்தவரையில், நார்மலான உடம்பு இருந்தாலே போதும். இதிலும் பிராக்டீஸனர் லெவல், கிராஜுவேட் லெவல், எக்ஸ்பர்ட் லெவல், மாஸ்டர் லெவல்னு பல கட்டங்கள் இருக்கு. ஒரு மாதப் பயிற்சி போதும். க்ரவ் மகா கத்துக்கலாம். உங்களுக்கு நல்ல தன்னம்பிக்கை வந்துவிடும். இங்கே எல்லோருமே டைம் இல்லாம ஓடிட்டே இருக்காங்க. சீக்கிரமா, சிம்பிளா ஒரு தற்காப்புக் கலையைக் கத்துக்க நினைக்கிற வங்களுக்கு இது சூப்பர் சாய்ஸ். குடும்பத்திலும் சமூகத்திலும் வன்முறைகளைச் சந்திக்கும் பெண்களுக்கு இது வரப்பிரசாதம்" என்று கை கொடுக்கிறார் ஸ்ரீராம்!
|