Published:Updated:

அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!

அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!

அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!
அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!
அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இரா.சரவணன்
அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!

ப்பிய கன்னங்களில் வெட்கம் வழிய புது மாப்பிள்ளையாகச் சிரிக்கிறார் அய்யாதுரை.

அழகிரி மகன் துரை தயாநிதியின் இயற்பெயர் இதுதான்! கயல்விழி, அஞ்சுகச்செல்வி என இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்து மகன் பிறக்க... 'எங்க அப்பாவோட தாத்தாதான் அப்படியே பிறந்திருக்கார்!' எனப் பூரித்துப்போனார் அழகிரி. அதனால் கருணாநிதியின் தாத்தா பெயரான அய்யாதுரையே அழகிரி மகனுக்கும் பெயரானது.

அந்த அய்யாதுரைக்கு வரும் 18-ம் தேதி டும்டும்டும்! சட்டப்படிப்பு மாணவியான சென்னைப் பெண் அனுஷா சீத்தாராமன்தான் 'மதுரையாரின்' மருமகள். தேர்ந்த ஓவியரான அனுஷா, சில காலப் பழக்கத்தில் துரையை அச்சு அசலாக வரைந்து கொடுக்க... அதில் வழிந்த காதல் இப்போது கல்யாணமாக மாறுகிறது. அழகிரியின் வீடு முழுக்க ஆனந்தம் நிரம்பி இருக்கிறது. "எங்க குடும்பத்துக்கே கடைக்குட்டி துரைக்கு வீட்ல அவ்வளவு செல்லம். தங்கச்சி அஞ்சுகச் செல்விக்கு நடந்த கல்யாணத்துக்கு அப்புறம் 12 வருஷம் கழிச்சு எங்க குடும்பத்துல இப்போ பெரிய விசேஷம். அதனாலதான் தம்பி கல்யாணத்தை ஜாம்ஜாம்னு ஜமாய்க்கப் போறோம்!" உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் துரை தயாநிதியின் அக்கா கயல்விழி.

அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!
அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!

"என் தம்பி பிறந்தப்போ எனக்கு 10 வயசு. அம்மாவை பிரசவத்துக்கு உள்ளே அனுப்பிட்டு, அப்பா வெளியே உட்கார்ந்து இருந்தார். நாங்க அவர் பக்கத்துல உட்கார்ந்து இருந்தோம். அந்தப் பதற்றமான நேரத்திலும் அப்பா ரொம்ப குஷியா, 'எனக்கொரு மகன் பிறப்பான்... அவன் என்னைப்போலவே இருப்பான்'னு பாட்டுப் பாட ஆரம்பிச்சிட்டார். கொஞ்ச நேரத்துல வெளியே வந்த டாக்டர், 'பையன் பிறந்திருக்கான்'னு சொன்னதும், அப்பாவோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எவ்வளவுதான் அரசியல் சூழல் பரபரப்பா இருந்தாலும், எல்லா பிரச்னைகளையும் வெளியே விட்டுட்டுத்தான் அப்பா வீட்டுக்குள்ள நுழைவாங்க. தம்பியும் அப்பாவும் அரட்டை அடிக்கிறதைப் பார்த்தா, செம காமெடியா இருக்கும். துரை எந்தப் பொண்ணைக் காதலிக்கிறேன்னு கைகாட்டினாலும் அதுக்குத் தடை இருக்காதுன்னு எங்க எல்லாருக்கும் முன்னாடியே தெரியும். அனுஷா பத்தி துரை சொன்னப் பவே, அத்தனை பேரும் ஆர்வமாகிட்டோம். அனுஷாவை பார்த்துப் பேசின உடனே, 'உன் சாய்ஸ் சூப்பர்'னு அப்பாவும் அம்மாவும் தலையாட்டிட்டாங்க. அனுஷாவோட கலகலப்பான பேச்சுதான் எங்க குடும்பத்துக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அனுஷாவுக்கு நல்ல குரல் வளம். அவங்க சில பாடல்களைப் பாடிக் காட்டினப்ப, அம்மாவுக்கு பூரிப்புத் தாங்கலை. என் தம்பி ரொம்பக் கொடுத்துவெச்ச ஆள்!" எனச் சிரிப்பு மாறாமல் சொன்ன கயல்விழி, மணமக்களுக்குக் கொடுப்பதற்காக மிக உயர்ந்த பரிசு ஒன்றை வாங்கி வைத்திருக்கிறாராம்.

அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!

துரைக்கு மிகவும் பிடித்த பிங்க் நிறத்தில் தங்க நிற ஜரிகையுடன் அனுஷாவுக்கு

அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!

கல்யாணப் புடவை எடுத்திருக்கிறார்கள். அனுஷாவுக்கு ரசமலாய் மிகவும் பிடிக்குமாம். அதனால், கல்யாண விருந்தில் ரசமலாய் சேர்க்கச் சொல்லி உத்தரவு போட்டு இருக்கிறார் மாப்பிள்ளை. சாப்பாடு சைவம்தான்!

அப்பா எழுதிக்கொடுத்த பத்திரிகையை அச்சில் வார்த்து அதன் முதல் பிரதியை அப்பா வின் கையிலேயே அழகிரி கொடுக்க... இருவர் முகத்திலும் பேரானந்தம். அம்மா செல்லமான அழகிரி, 'கல்யாணத்துக்கு மூணு நாள் முன்னாடியே நீங்க மதுரைக்கு வந்துடணும். உங்க ஆசியோடுதான் எல்லாமே நடக்க ணும்!' என தயாளு அம்மாளிடம் அன்புக் கட்டளை போட்டிருக்கிறார். சிரித்துக்கொண்டே 'சரி சரி' என்று ஆமோதித்து இருக்கிறார் தயாளு அம்மாள்.

மதுரையின் பிரமாண்ட விழா, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா. அதற்கடுத்து, அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள். இந்த இரு விழாக்களையும் மிஞ்சும் வகையில் களைகட்டி வருகிறது அழகிரி மகன் தயாநிதியின் திருமண விழா!

நவம்பர் 17 நிச்சயதார்த்தம், 18-ம் தேதி தமுக்கம் மைதானத்தில் திருமணம். கருணாநிதி 17-ம் தேதி அதிகாலையே அழகிரி வீட்டுக்கு வந்துவிடுவார். திருமணத்தை நடத்திவைத்துவிட்டு, மீண்டும் அவர் 19-ம் தேதிதான் சென்னை திரும்புவார் என்கிறார்கள்!

தமிழக அமைச்சர்கள் அத்தனை பேரின் வீட்டுக்கும் அழகிரி, காந்தி அழகிரி, மகள்கள் கயல்விழி, அஞ்சுகச்செல்வி, மருமகன்கள் வெங்கடேஷ், விவேக் சகிதம் நேரில் சென்று தேங்காய், பழம், பூவோடு பத்திரிகை வைத்து அழைத்து இருக்கிறார்கள். அதனால், கிட்டத்தட்ட மொத்த அமைச்சர்களும் திருமணத்துக்கு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது!

'அத்தனை அமைச்சர்களும் ஆஜர்' என்பதை எதிர்க் கட்சிகள் சர்ச்சையாக்கி விடக்கூடாது என்பது அழகிரியின் எண்ணம். மதுரையில், நீண்டகாலமாக இழுத்தடித்துக்கொண்டு இருந்த செல்லூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்திருக்கிறது. அதன் திறப்பு விழாவை அந்தச் சமயம் வைத்து, அமைச்சர்கள் சங்கமத்துக்கு காரணம் காட்டலாமா என்பதும் ஒரு யோசனை!

கடைசி நிமிடம் வரை போராடியேனும் சோனியா அல்லது பிரதமர் மன்மோகன் சிங்கை திருமணத்துக்கு வரவழைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அழகிரி!

திருமணத்துக்கு பேராசிரியர் அன்பழகன்தான் தலைமை. பொதுவாக, கழகத்தினரின் இல்லத் திருமணங்களில் தலைமை ஏற்பவர்கள், சூடான அரசியல் நிலவரங்களை மேடையில் பேசுவார்கள். கருணாநிதியின் வழக்கமும் அதுவே. ஆனால், முதல்வர் பேரனின் திருமணத்தில் அப்படி எதுவும் அரசியல் பேச்சுக்கள் இருக்காது என்கிறார்கள் உடன்பிறப்புகள்!

பகுத்தறிவுத் தலைவரின் பேரன் திருமணம் என்பதால், சீர்திருத்த மணவிழாதான் நடக்க இருக்கிறது. ஆனால், காந்தி அழகிரியோ யானைமலை நரசிங்க பெருமாளின் தீவிர பக்தை. அதனால், திருமணத்தன்று பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனை இருக்கும் என்கிறார்கள்!

- டி.எல்.சஞ்சீவிகுமார், கே.கே.மகேஷ்

அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!
அம்மாவுக்கு அழகிரியின் கட்டளை!