Published:Updated:

எனது உரிமை கலைஞரின் கடமை!

எனது உரிமை கலைஞரின் கடமை!


"எனது உரிமை... கலைஞரின் கடமை!"
எனது உரிமை கலைஞரின் கடமை!
எனது உரிமை கலைஞரின் கடமை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எஸ்.கலீல்ராஜா
படம்:கே.கார்த்திகேயன்
எனது உரிமை கலைஞரின் கடமை!

மீண்டும் அரசியல் சீ(ஸ)னில் ராதாரவி! அ.தி.மு.க-வில் பல காலமாக ஒதுங்கியே

இருந்தவர், திடீரென ராகுல் காந்தியைச் சந்தித்தார். 'காங்கிரஸில் இணைவார்' என்ற யூகங்களுக்கு இடையில், மீண்டும் அம்மாவிடமே தஞ்சம் அடைந்திருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் உறுப்பினர் படிவத்துடன், 'நாளைய ஹீரோக்கள்' அறைக்கு வெளியே கனவுகளுடன் காத்திருக்க, "சொல்லுங்க..." என கம்பீர கரகரக் குரலோடு ஆரம்பிக்கிறார் ராதாரவி.

"ராகுலைச் சந்தித்து பரபரப்புக் கிளப்பினீர்கள். ஆனால், மீண்டும் அ.தி.மு.க-விலேயே ஐக்கியமாகிவிட்டீர்களே?"

எனது உரிமை கலைஞரின் கடமை!

" 'என்.எஃப்.டி.சி-யில் இருந்து நிதி வரணும். குழந்தைகள் திரைப்படக் கழகம் மற்றும் விருது தேர்வுக் குழுவில் எங்களை உறுப்பினர் ஆக்க வேண்டும்' போன்ற கோரிக்கைகளோடு ராகுலைச் சந்தித்தேன். அதோடு, நடிகர் சங்கத்தின் 60-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தேன். 'பார்க்கலாம்'னு சொல்லியிருக்கார். நான் முன்னாள் எம்.எல்.ஏ., என்பதால், 'தமிழகத் தேர்தலில் யார் ஜெயிப்பாங்க?'ன்னு கேட்டார்.

எனது உரிமை கலைஞரின் கடமை!

யோசிக்காம 'அ.தி.மு.க'ன்னு சொன்னேன். காரணம் கேட்டார். 'சில விஷயங்களை விவரிக்க முடியாது. நிறைய இடங்களுக்குப் போறேன். மக்கள்கிட்ட பேசுறேன். தி.மு.க மேல மக்களுக்குக் கசப்பு இருக்கு. அதனால ஆட்சி மாற்றம் வரும்'னு சொன்னேன். புருவம்கூட உயர்த்தலை. அமைதியா கேட்டுக் கிட்டார்!"

"கோபத்தில்தான் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தீர்கள். இப்போது ஏன் இந்தத் திடீர் மாற்றம்?"

எனது உரிமை கலைஞரின் கடமை!

"என் அம்மா இறந்தப்போ மேடம் பார்க்க வரலை. அது மட்டும்தான் கோபம். என் வருத்தத்தில் கட்சி பங்கு எடுத்துக்கொள்ளலைன்னா, எனக்குக் கோபம் வரத்தானே செய்யும். அதான் ஒதுங்கிட்டேன். திடீர்னு ஒருநாள் மேடம் போன் பண்ணினாங்க. 'நீங்க அ.தி.மு.க-வில்தானே இருக்கீங்க... வந்து பாருங்க!'ன்னு சொன்னாங்க. என்னை எம்.எல்.ஏ., ஆக்கினவங்க. பெரிய அரசியல் தலைவர். அவங்களா தேடிக் கூப்பிடுறாங்க. அதனால போய்ப் பார்த்தேன்!"

"எம்.ஆர்.ராதாவுக்கு நினைவுச் சின்னம் அமைக்கலைன்னு கலைஞர் மீது குற்றம் சொல்லிட்டே இருக்கீங்களே?"

எனது உரிமை கலைஞரின் கடமை!

"அதில் என்ன தப்பு இருக்கு? அவருக்கு 'கலைஞர்'னு பட்டம் சூட்டியதே என் அப்பா எம்.ஆர்.ராதாதானே! கேட்குறது என் உரிமை. செய்ய வேண்டியது அவர் கடமை. பெரியாரின் எல்லாப் போராட்டங்களிலும் கூட இருந்தவர் என் அப்பா. சரியாக, பெரியார் பிறந்த நாளன்று இறந்தவர். என் அப்பாவைப் பற்றி என்னைவிட அதிகம் தெரிஞ்சவர் கலைஞர். ஆனால், இதுவரை ஒரு நினைவுச் சின்னம்கூட அமைக்கவில்லை. அது போக, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிற மாதிரி எஸ்.வி.சேகரை என் அப்பாவோடு ஒப்பிட்டுப் பேசுறார். என்னால சும்மா இருக்க முடியுமா? உடனே, என் வருத்தத்தைப் பதிவு செஞ்சேன். பதில் வரலை. நான் உயிரோடு இருக்கும் வரை இந்தக் கேள்வியைக் கேட்டுட்டே இருப்பேன்!"

"இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவுக்கு கலைஞர் வரலையே?"

எனது உரிமை கலைஞரின் கடமை!

"சினிமாவுக்குள் அரசியல் வரக் கூடா துன்னு முடிவெடுத்து, அந்த விழாவை நடத்தினோம். அரசியல்வாதிகளை அழைத்தால், அது அரசாங்க விழாவாக மாறிடுது. பாதுகாப்புங்கிறபேர்ல போலீஸ் கெடுபிடி பண்றாங்க. அரசுத் தரப்பில் இருந்து எல்லோரும் குடும்பத் தோடு வந்து உட்கார்ந்துடுறாங்க. ஒரு சினிமா நிகழ்ச்சியில் அஜீத், சூர்யாவோடு சேர்த்து பல பேர் இடம் கிடைக்காம நின்னுட்டு இருந்தாங்க. சினிமா நிகழ்ச்சி யில் ஏன் ஒரு ஹீரோ நிக்கணும்? ஆனா, இதுபோன்ற எந்தப் பிரச்னையும் இல்லாம இயக்குநர் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நடந்தது. யாரையும் நம்பாம சினிமாக்காரனே நடத்துன முதல் நிகழ்ச்சி இதுதான். இயக்குநர்களுக்கு என் பாராட்டுக்கள்!"

"இது மாதிரியான நிகழ்ச்சிகளுக்குத்தான் ஹீரோக்களை மிரட்டிக் கூப்பிடுறாங்கன்னு அஜீத் முன்னாடி சொன்னாரே?"

எனது உரிமை கலைஞரின் கடமை!

"அவரை யார் மிரட்டினாங்கன்னு தெரியலை. அப்படி அவர் மிரட்டப்பட்டு இருந்தா, அது ரொம்பத் தப்பு. மிரட்டினாங்கன்னு மொட்டையா சொல்லாம, இன்னார் தான்னு கை காட்டியிருந்தா, நாங்க தலையிட்டு நடவடிக்கை எடுத்திருப்போம். நடிகர்களுக்கு சங்கம் இருக்கு. எந்த பிரச்னையாக இருந்தாலும் சங்கத்திடம் முதலில் சொல்லியிருக்க வேண்டும். எதுவும் சொல்லாம இருந்தா, சங்கம் என்ன பண்ண முடியும்?"

"இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவில், 'ரஜினி நல்ல நண்பர். இப்போ மறந்திட்டார்'னு சொன்னீங்களே?"

எனது உரிமை கலைஞரின் கடமை!

"அது சும்மா ஜாலியா சொன்னது. 'பாபா' வரைக்கும் ரஜினி நடிச்ச பெரும்பாலான படங்களில் நான் நடிச்சிருக்கேன். ஒருநாள் அவரே கூப்பிட்டு, 'நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சு ரொம்ப நாளாச்சு'ன்னு சொன்னார். 'ஆமா சார், நீங்க என்னை மறந்துட்டீங்க'ன்னு சொன்னேன். 'ரத்தக் கண்ணீர்' நாடகம் போடும்போது எல்லாம், அவுட் ஆஃப் டாபிக் விஷயங்களையும் சொல்வேன். அதைத்தான் அன்றைக்கு மேடையில் ஜாலியாகச் சொன்னேன். மறுநாள் 'நாடகம் ரொம்ப பிரமாதமா இருந்தது ரவி. ஃபுல் வெர்ஷன் போடும்போது சொல்லுங்க. வந்து பார்க்குறேன்'னு போன்ல பாராட்டினார் ரஜினி!"

எனது உரிமை கலைஞரின் கடமை!
எனது உரிமை கலைஞரின் கடமை!