Published:Updated:

எட்எட்டு!

எட்எட்டு!

எட்எட்டு!
எட்எட்டு!
எட்எட்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் டீம்
எட்எட்டு!

கேட்ட இசை தினா, இசை அமைப்பாளர்.

எட்எட்டு!

"காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி அது. பாரதியார் பாடலைத் தனக்கே உரிய பாணியில் அருணா சாய்ராம் கர்னாடிக்கிலும், பங்கஜ் உதாஸின் பாடல்களை ஷங்கர் மஹாதேவன் ஹிந்துஸ்தானியிலும் பாடி மெய் சிலிர்க்கவைத்தார்கள். கர்னாடிக்கும், ஹிந்துஸ்தானி யும் இருவேறு துருவம். ஆனால், இரண்டையும் இனிமையான கலவை ஆக்கி அமர்க்களப்படுத்திவிட்டனர் அருணாவும் ஷங்கரும். பாடலுக்கான ஒலி அமைப்பின் கலவை மற்றும் தகுந்த இசைக் கருவிகளின் தேர்வும் அற்புதம்!"

கலந்துகொண்ட நிகழ்ச்சி
மேலாண்மை பொன்னுசாமி, எழுத்தாளர்.

எட்எட்டு!

"டெல்லி ரவீந்திர பவனில் சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்கு, வேட்டி-சட்டையுடன் இருந்தது நான் மட்டுமே. எனக்கு விருது தந்த குஜராத்தி எழுத்தாளர் என்னைப் பார்த்து, 'கே.காமராஜ்?' என்றார். அதாவது, தமிழ்நாட்டுக்கு அடையாளமாக காமராஜர் இருந்தார். அவருக்கு அடையாளமாக வேட்டி-சட்டை இருந்தது. அந்த அர்த்தத்தில் தமிழ்நாட்டில் இருந்து வருகிறாயா என்று கேட்டிருக்கிறார். அவராவது பரவாயில்லை, டெல்லியில் இருந்த தமிழர் களே நான் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதை அந்நியமாகப் பார்த்ததுதான் வருத்தமாக இருந்தது!"

வாங்கிய பொருள் ஸ்யாம், ஓவியர்.

எட்எட்டு!

"கேமராவுடன் கூடிய ஐ-பாட் ஒன்று வாங்கினேன். பார்க்க கொரியன் செல்போன் போலவே இருக்கிறது. விலை ` 7,000. பாட்டு கேட்பது, படம் எடுப்பது மட்டுமின்றி, நமக்குப் பிடித்த இடங்களை 'லைன் டிராயிங்' அதாவது, கோட்டோவியமாகப் பதிவு செய்துகொள்கிற வசதி இருக்கிறது. ஜெய்ப்பூர் அரண்மனையைப் பார்த்து வரைவதைவிட, இதில் கோட்டோவியமாகப் படம் பிடித்து, அதை வைத்து வரையலாம். பொதுவாக எனக்கு, காதுக்குள் பாடலை அலறவிட்டுக் கேட்பதில் விருப்பம் இல்லை. ஆகவே, இந்த ஐ-பாட் பாட்டு கேட்கும் கருவியாக இல்லாமல், எனக்கு கேமராவாகவே பயன்படுகிறது!"

சென்ற இடம்
காலபைரவன், கவிஞர்.

எட்எட்டு!

"விழுப்புரம் அருகே இருக்கும் கீழ்வாலை, ஆலம்பாடி,செத்தவரை ஆகிய கிராமங்களில் பழங்காலப் பாறை ஓவியங்களைப் பார்த்து வந்தேன். கற் காலத்துக்கு முந்தைய ஓவியங்களான அவற்றின் இன்றைய நிலை மிகவும் பரிதாபம். மத்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும், இந்தப் பாறை ஓவியங்களின் அருகில் இயங்கும் கல் குவாரிகள் உண்டாக் கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் காரணமாக, இந்தப் பாறை ஓவியங்கள் மெள்ள மெள்ள அழிந்து வருகின்றன. தமிழின், தமிழனின் தொன்மையை எடுத்துச் சொல்லும் இம் மாதிரியான வரலாற்று ஆவணங்களை அழித்து விட்டு, செம்மொழி மாநாடு நடத்தி என்ன செய்யப்போகிறோம்?"

சந்தித்த நபர் மேக்னா, நடிகை.

எட்எட்டு!

"நடிகர் மம்மூட்டின்னாலே அழகுன்னுதான் என் மனசுல பதிஞ்சு இருக்கு. அந்த ஹேண்ட்ஸம் மனிதரை இப்போதான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'ஆகஸ்ட் 15' படத்தில் அவர்கூட நடிக்கிறேன். சின்ன வயசுல நான் ஸ்க்ரீன்ல பார்த்தப்போ எப்படி இருந்தாரோ, நேர்லயும் இப்போ அப்படித்தான் இருக்கார். 'மெகா ஸ்டார்'னு எந்த பந்தாவும் இல்லாம, ரொம்ப இயல்பாப் பழகினார். எனக்கு மலையாளம் தெரியாது. நான் தப்புத் தப்பா வசனம் பேசுறப்போ, அவர்தான் திருத்துவார். மம்மூட்டி சார்கூட இருக்கிறப்போ, ஒவ்வொரு நாளும் எப்படி இவ்வளவு சீக்கிரம் முடியுதுன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும்!"

பாதித்த சம்பவம் ஸ்ரீதேவி, சின்னத்திரை தொகுப்பாளர்.

எட்எட்டு!

"எங்களுக்குப் பூர்வீகம் திருவாரூர். அப்பா செந்தில்குமார் பாண்டியன் மட்டும் அடிக்கடி அங்கே போயிட்டு வருவார். அங்கே எங்களுக்கு விவசாய நிலம், குளம் எல்லாம் இருக்கு. ஊர்ல இருந்து வரும்போது, எங்க குளத்துல பிடிச்ச மீன் கொண்டுவருவார். ஊருக்குப் போயிட்டு வந்ததைக் கதை கதையா சொல்வார். எனக்கு, என் அண்ணன், அக்கா மூணு பேருக்குமே அப்பான்னா அவ்வளவு இஷ்டம். அவருக்கு சிகரெட் பழக்கம்கூடக் கிடையாது. ஆனா, நுரையீரல் கேன்சர் நோயால் போன வாரம் இறந்துட்டார். இப்போ 24 மணி நேரமும் அப்பா ஞாபகமாவே இருக்கேன்!"

படித்த புத்தகம்
அகத்தியன், இயக்குநர்.

எட்எட்டு!

"ஜெயமோகனின் 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்' புத்தகம் படிச்சுட்டு இருக்கேன். பொதுவாகவே, இந்தியத் தத்துவம், இந்துத் தத்துவம் இரண்டுக்கும் இடையில் நிறையக் குழப்பங்கள் இருக்கும். 'இதுதான் அதுவா', 'அதுதான் இதுவா' என்பது மாதிரியான குழப்பங் களைத் தீர்த்துவைக்கிறது இந்தப் புத்தகம். இந்து ஞான மரபில் சாங்கியம், யோகம், ஞாயம், வைசேடிகம், பூர்வ மீமாம்சை, உத்ர மீமாம்சை என ஆறு தரிசனங்கள் இருப்பதாகக் குறிப்பிடும் ஜெயமோகன், அவற்றை நடைமுறை உதாரணங்களுடன் மிக எளிமை யாக விளக்கியுள்ளார்!"

பார்த்த படம் ப்ரியா, இயக்குநர்.

எட்எட்டு!

"சமீபத்தில் ரிலீஸான Despicable Me என்ற ஆங்கில 3D படம் பார்த்தேன். கிரிமினலா யோசிச்சு, உலகின் அதிசயங்களை எல்லாம் திருடும் ஒரு வில்லனிடம் மூன்று குழந்தைகள் எதிர்பாராம வந்து மாட்டிக்கிறாங்க. நிலாவைத் திருடும் முயற்சிக்கு அந்தக் குழந்தைகளை அவன் பகடைக்காயாப் பயன்படுத்துவான். அது வரை பாசம், நேசம்னா என்னன்னே தெரியாம இருந்தவன், அந்தக் குழந்தைகளிடம் அதை எல்லாம் கத்துக்கிறான். குழந்தைகளுடன் பெற்றோரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்!"

எட்எட்டு!
எட்எட்டு!