Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு விரைவில் திருமணம். நீண்ட நாள் காதலியான ஸ்நேகா ரெட்டியுடன்தான் டும்டும்டும். தீர்க்க சுமங்கலி பவ!

இன்பாக்ஸ்

பத்மபூஷண் விருது பெற்ற எழுத்தாளர் ராமச்சந்திர குஹா எழுதிய 'Makers of Modern India' புத்தகம் வெளியான மூன்றே நாட்களில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்திருக்கிறது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த 19 சாதனையாளர்களைப்பற்றி அந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார் குஹா. ஈ.வெ.ரா. பெரியார் மட்டுமே இந்தப் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கும் ஒரே தமிழகத் தலைவர். தமிழர் தலைவன்!

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவிட்டன சென்னையின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள். விடிய விடிய நடக்கவிருக்கும் புத்தாண்டு பார்ட்டிகளில் கெட்ட ஆட்டம்போட நடிகைகளுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டன. அதில் முதல் இடத்தில் இருப்பது... அனுஷ்கா.ஆறடி அஞ்சலை!

மகேஷ் பூபதியின் தந்தை அவரை டென்னிஸ் ப்ளேயராக உருவாக்க, `24.5 லட்சம் செலவழித்தாராம். 'ஒரு பயிற்சியாளர் என்ற முறையில் அவருக்கு நான் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன். அந்தத் தொகைக்கு எனக்கு வரிவிலக்கு வேண்டும்!' என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பூபதி. ஆனால், 'மகனை வளர்க்க வேண்டியது ஒரு தந்தையின் கடமை. மகன், தந்தைக்குக் கொடுக்கும் பணத்துக்கு எல்லாம் வரிவிலக்கு அளிக்க முடியாது!' என்று சுளீர் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். 'சர்வீஸ்' இருந்தால் டேக்ஸ் இல்லாமலா?!

இன்பாக்ஸ்

'அவதார்' படத்தின் இரண்டாம் பாக வேலைகளைத் துவக்க இருப்பதால், ஏஞ்சலினா ஜோலியை வைத்து இயக்குவதாக இருந்த 'கிளியோபாட்ரா' படத்தைத் தள்ளிப் போட்டுவிட்டார் ஜேம்ஸ் கேமரூன். 2011 ஜனவரி மாதத்தில் துவங்க இருக்கிறது அவதார்-2 ஷூட்டிங். 2014-ம் ஆண்டு இறுதியில் அவதார்-2வும், 2015 இறுதியில் அவதார்-3ம் திரைக்கு வருமாம். அவதார இயக்குநர்!

இன்பாக்ஸ்

ஆசிய சாதனையாளர்களுக்கு சமீபத்தில் லண்டனில் விருது வழங்கப்பட்டது. இதில் ஆசியாவின் சிறந்த தொழிலதிபருக்கான விருது ரத்தன் டாடாவுக்கும், சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் மக்களின் நாயகன் விருது சச்சின் டெண்டுல்கருக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது அமிதாப் பச்சனுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. விருது நாயகர்கள்!

இன்பாக்ஸ்

சிக்கலில் சிக்கியிருக்கிறார் ஹாலிவுட் கவர்ச்சிப் புயல் மோனிகா பெலூச்சி. 46 வயதில், பிரசவத்துக்குப் பின்னும் தன் அழகு அப்படியே இருப்பதை உலகுக்கு அறிவிக்க விரும்பியவர், இத்தாலியின் புகழ்பெற்ற பத்திரிகையான வேனிட்டி ஃபேரில் தன் ஐந்து மாதக் குழந்தையோடு முற்றும் துறந்து போஸ் கொடுத்திருக்கிறார். கொதித்தெழுந்த குழந்தை நல அமைப்புகள், பெலூச்சியைப் பிலுபிலுவென நீதிமன்றத்துக்குப் பிடித்து இழுத்திருக்கின்றன. அம்மம்மா!

இன்பாக்ஸ்

அமெரிக்காவின் 18 வயது அலெக்ஸாண்ட்ரியா மில்ஸ்தான் 'மிஸ் வேர்ல்டு 2010'. இந்தியாவின் மானஸ்வியால் கடைசி 20 இடங்களுக்குள்கூட வர முடியவில்லை. பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான், அலெக்ஸாண்ட்ரியாவின் கனவாம். கொடுத்துவெச்ச பசங்க!

இன்பாக்ஸ்

கால்பந்து ஜாம்பவான்களான பீலேவுக்கும் மாரடோனாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், 'மாரடோனா சிறந்த வீரர்தான். ஆனால், அவர் சிறந்த ரோல் மாடல் இல்லை. அவர் தன் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், எந்த அணியும் அவரை ஒப்பந்தம் செய்யாது!' என்று மாரடோனாவை போட்டுத் தாக்கியிருக்கிறார் பீலே. மாரடோனா எப்போ ரிட்டர்ன் கோல் அடிப்பார்!

'எந்திரனு'க்கு அடுத்து சன் பிக்சர்ஸ், மணிரத்னத்தின் இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளில் புதிய படத்தைத் தயாரிக்க இருக்கிறது. தமிழில் விக்ரமும் தெலுங்கில் மகேஷ் பாபுவும் நடிக்கிறார்கள். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவிய கதையாம். மணியின் செல்வன்!

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தி. லண்டன் மேடம் டூஸ்ஸாட்ஸ் மெழுகுச் சிலை மியூஸியத்தில் ரஜினிகாந்த்தின் சிலை விரைவில் இடம் பெறலாம். பேச்சுவார்த்தை ஆன் தி வே. சூப்பர் ஸ்டார் இதுவரை ஓ.கே. சொல்லவில்லையாம். 'நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி... மியூஸியத்தில் மெழுகுவத்தி!'

இன்பாக்ஸ்

இதுவரை சென்னை ஸ்டுடியோவிலேயே இசையமைத்து வந்த ஜி.வி.பிரகாஷ், சீனியர்களான ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டைலில், வெளிநாடுகளுக்குப் பறந்து ட்யூன் போட ஆரம்பித்திருக்கிறார். முரளி மகன் அதர்வா நடிக்கும் 'முப்பொழுதும் உன் கற்பனை' படத்துக்கு இசை அமைக்க சீனாவின் மக்கா நகருக்குச் சென்று வந்திருக்கிறார் ஜி.வி. ஃபாரின் பற பற... ட்யூனைத் திற திற!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்