Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

" 'என்னிடம் ஒரே ஒரு டி.வி. சேனலைக் கொடுங்கள். மாற்றிக் காட்டுகிறேன்' என்று சவால்விடுகிறாரே டி.ராஜேந்தர்?"

"அவர் என்ன மாற்றுவது? மக்களே மாற்றிவிடுவார்கள்... சேனலை!"

- இரா.ரமேஷ்பாபு, சிதம்பரம்.

" 'சோனியா காந்தி பதிபக்தி இல்லாதவர்' என்று ஜெயலலிதா சொன்னதாக கருணாநிதி சொல்கிறாரே?"

"ஆம், 'சோனியா பதிபக்தி இல்லாதவர்' என்று ஒருமுறை ஜெயலலிதா சொன்னது உண்மைதான். ஆனால், கருணாநிதியோ... ஜெயலலிதா சொன்னதாக, சோனியா பதிபக்தி இல்லாதவர் எனப் பலமுறை சொல்லிவிட்டார்!"

- எஸ்.இராசேந்திரன், கபிஸ்தலம்.

" 'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி'யா?"

"பல சமயங்களில் அது உண்மை. சில சமயங்களில் தாமதிக்கப்பட்டாலும், நீதி நியாயமாகவே அமைவதும் உண்டு. 1970-ம் ஆண்டு ஆந்திராவில் போலீஸால் கொல்லப்பட்டவர் வர்கீஸ் என்ற நக்சலைட். வர்கீஸைக் கொல்வது என்று போலீஸ் முடிவெடுத்தது. நடுக்காட்டில் வைத்து, 'யார் வர்கீஸைக் கொல்லப்போகிறீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அப்போது அங்கே இருந்த ராமச்சந்திரன் நாயர் என்ற கான்ஸ்டபிள் மட்டும் கையை உயர்த்தவில்லை. 'சரி, வர்கீஸைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். நாளை செய்தித்தாளில் இப்படி செய்தி வர வேண்டும். 'போலீஸ் - தீவிரவாதி மோதல். வர்கீஸ் சுட்டுக் கொலை, மோதலில் ஒரு போலீஸும் மரணமடைந்தார்.' இதைக் கேட்டு பதறிப்போன ராமச்சந்திரன் நாயரும் என்கவுன்ட்டருக்கு உடன்பட்டார். பிறகு, தனது மனசாட்சி உறுத்த, வேலையில் இருந்து ஓய்வுபெற்ற ராமச்சந்திரன் நாயர் எழுதிப் புகழ்பெற்ற புத்தகம், 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி'. இப்போது அந்த வழக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. நடைபெற்றது போலி மோதல் என்றும், வர்கீஸின் மரணம் ஒரு கொலை என்றும் தீர்ப்பு அளித்துள்ள சி.பி.ஐ நீதிமன்றம், என்கவுன்ட்டருக்கு உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இப்போது வர்கீஸும் இல்லை, ராமச்சந்திரன் நாயரும் இல்லை. ஆனால், நீதி இருக்கிறது!"

- வி.கி.சுந்தர், திருப்பூர்.

"ஒரே விஷயம் பாராட்டுக்கும் கண்டனத்துக்கும் உரியது ஆகுமா?"

"சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 175-வது ஆண்டு விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவர்களான துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உட்பட பலர் பங்கு பெற்றனர். அப்போது ஸ்டாலின் பேசியது, 'சென்னை கிறிஸ்துவக் கல்லூரிப் பள்ளியில் என் அண்ணன்கள் முத்து, அழகிரி இருவரும் படித்தனர். அதனால், நானும் இந்தப் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால், அதில் ஃபெயிலாகிவிட்டேன். அப்போது, முரசொலி மாறன் என்னை சென்னை மேயராக இருந்த குசேலரிடம் அழைத்துச் சென்றார். மேயர் எங்களை அவரது பிரத்யேக காரில் ஏற்றிக்கொண்டு, பள்ளிக்கு வந்து சிபாரிசு செய்தார். அதன் பேரில், என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டனர். நான் இந்தப் பள்ளியால் உருவாக்கப்பட்டு, பின் சென்னை மாநகர மேயராகவும் பொறுப்பேற்றேன்!' மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக இதைச் சொன்னதற்காகப் பாராட்டுவதா, தவறான முன் உதாரணம் என்று கண்டிப்பதா?"

- கே.சுதா, சேலம்.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!