Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் வரவேற்பறை

தமிழகத்தில் மனித உரிமைகள் - 2008

வெளியீடு: மக்கள் கண்காணிப்பகம், 6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை - 2. பக்கம்: 215 விலை:

விகடன் வரவேற்பறை

175

விகடன் வரவேற்பறை

2008-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை 'வகுப்பறை வன்முறை, பெண்கள் மீதான வன்முறை, தலித்துகளுக்கு எதிரான வன்முறை, காவல் துறை வன் முறை' என வகை பிரித்துத் தொகுத்துள்ளனர். பெண்கள் மீதான வன்முறைகளில் முன்னுக்கு நிற்கிறது பாலியல் அத்துமீறல். சாதி ஆதிக்கத்தில், பெண்களின் பங்கையும் இந்த ஆவணம் பல இடங்களில் அம்பலப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் சாதி பிரச்னை இருப்பது போலவும், குறிப்பிட்ட சில சாதிகள்தான் வன்கொடுமை செய்வதுபோலவும் இருக்கும் தோற்றம் பொய் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று!

ஓவிய உலகம்! www.paintingsilove.com

விகடன் வரவேற்பறை

உலகம் முழுக்க இருக்கும் ஓவியர்கள் வரைந்த விதவிதமான ஓவியங்கள் இந்தத் தளத்தில் காட்சிக்கு உள்ளன. காடுகள், மனிதர்கள், விலங்குகள் என விதவிதமான தலைப்புகளில் பிரித்துவைக்கப்பட்டு இருக்கும் ஓவியங்களைக் கண்டு ரசிக்கலாம். அவற்றுக்கு மார்க் போட்டு கருத்து தெரிவிக்கலாம். பளீர் சுளீர் ஐடியாக்களில் வரையப்பட்டு இருக்கும் சுவாரஸ்யமான ஓவியங்களும் உண்டு. பார்க்க... ரசிக்க... நல்ல இணையதளம்!

ஒன்னுக்கு வீரன் இயக்கம்:எஸ்.முருகானந்தம்

விகடன் வரவேற்பறை

மைலானுக்கு பால் ஊற்றிய பின்னரும் உயிர் அடங்காமல் இழுத்துக்கொண்டு இருக்கிறது மூச்சு. அவரது நிறைவேறாத ஆசை புரியாமல் குழம்பி நிற்கின்றன சொந்த பந்தங்கள். பள்ளிப் பருவத்தில் ஒன் பாத்ரூமில் யார் அதிக நேரம் தாக்குப்பிடிப்பது, காலி பாட்டிலை யார் முதலில் நிரப்புவது என துடுக்கு சேட்டை கோஷ்டிக்குத் தலைவன் மைலான். பாதை, கூரை, காரை மண் வீடு, வரட்டி எதுவும் மைலானின் அபிஷேகத்துக்குத் தப்பவில்லை. இளைஞனான பிறகும் தண்ணீர் தொட்டியில் ஏறி கூரையை நனைக்கும் அளவுக்குத் தொடர்கிறது அந்தப் பழக்கம். வயதாகி, யூரின் பை மாட்டி படுக்கையில் விழுகிறார் மைலான். இறுதியில் மைலானின் நெஞ்சில் குழந்தை ஒன்று சுச்சா விட, அவரது உயிர் பிரிகிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் முருகானந்தம்!

கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் www.vannathasan.wordpress.com

விகடன் வரவேற்பறை

கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகளையும் வண்ணதாசன் என்கிற பெயரில் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதும் தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமை குறித்த வலைப்பூ. 'சின்னு என்னும் சங்கீதம்' என்ற தலைப்பிலும் 'உள்ளங்கை எழுத்து' என்னும் தலைப்பிலும் வண்ணதாசனின் எழுத்துக்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு கட்டுரைகள் படைப்பிலக்கியத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஆராய்கின்றன. நம் அன்றாட வாழ்க்கையில் கண் முன்னே காணத் தவறுகிற விஷயங்கள், வாழ்வின் வேகத்தில் அடிபடும் மானுட அன்பு எனப் பல பரிமாணங்களில் நகரும் வண்ணதாசனின் எழுத்துக்களை அறியவும் புரியவும் இந்த வலைப்பூவைப் படிக்கலாம்!

ஆக்ஸிஜன் வெளியீடு:கர்னாடிகா விலை: 150

விகடன் வரவேற்பறை

எட்டு இளைஞர்களின் கூட்டு முயற்சி. டீன் ஏஜர்களுக்கே உரிய உணர்ச்சிக் கொந்தளிப்பில், மேற்கத்திய இசைக் கருவிகளுடன் நம் ஊர் மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோலை இணையவிட்டு 'சப்த ஜாலம்' செய்திருக்கிறார்கள். ஆரம்ப 'வாதாபி கணபதிம்'-ல் கே.என்.சசிகிரணின் குரல் துணையோடு ஹம்ஸத்வனி பிசிறு இல்லாமல் ஒலிக்கிறது. தொடரும் எட்டு அயிட்டங்களில், மேற்கின் டாமினேஷன். Path of Life -ல் கீ-போர்டுகள் தனியாக ஜோடி சேர்ந்திருப்பது ஜோர்.
25:75 என்ற விகிதத்தில் கிழக்கும் மேற்கும் இணைந்து இருக்கின்றன. மேற்கை மோகிப்பவர்களுக்கு ஃப்ரெஷ் பிராண வாயு!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை