Published:Updated:

ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்

ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்

ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்
ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்
ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ம.கா.செந்தில்குமார்
படம்:சு.குமரேசன்
ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்

"அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளன். பிறகு, சினிமாவுக்கு வந்துவிட்டேன்.

இன்றைய சூழலில், ஒரு தடகள வீரர், வீராங்கனை உருவாவது எவ்வளவு பெரிய போராட்டம் என்பதை நான் அறிவேன். வறுமையில் வாடும் ஒரு சிறுமி, சென்னைக்கு வந்து தன்னுடன் படித்த ஒரு மாணவனின் உதவியோடு எவ்வாறு தடகள வீராங்கனையாக ஜெயிக்கிறாள் என்பதை ஒரு கதையாக உருவாக்கினேன். இந்தக் கதையில், ஒரு நிஜ தடகள வீராங்கனையையே நடிக்கவைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 'யார் பொருத்தமாக இருப்பார்கள்?' என்று யோசனையில் இருந்தபோது, கண்ணில்பட்டது அந்த வார ஆனந்த விகடன். அதில் பிரபலங்கள் எடுத்த ப்ளஸ்-டூ மார்க்கை அவர்களுடைய படங்களுடன் பிரசுரித்து இருந்தீர்கள். பட்டியலில் தடகள வீராங்கனை காயத்ரியும் ஒருவர். எங்கள் கதைக்கு நாயகி கிடைத்த கதை இதுதான்!" - மென்மையாகப் பேசுகிறார் பாலு மணிவண்ணன். தடை தாண்டும் ஓட்டத்தில் தேசிய சாம்பியனாக இருக்கும் காயத்ரி கதாநாயகியாக நடிக்கும் படத்தின் இயக்குநர். படத்தின் பெயர் 'ஆசைப்படுகிறேன்'!

ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்

"நல்ல விஷயம்... ஆனால், இப்போது உள்ள கமர்ஷியல் சினிமா சூழலில் 'ஆசைப்படுகிறேன்' படத்துக்கு என்ன இடம் கிடைக்கும்?"

"உண்மைதான். நல்ல படமா, கெட்ட படமா என்பதை... பாட்டு, ஃபைட், ஸ்டார் அந்தஸ்து போன்றவை தீர்மானிப்பது இல்லை. 'களவாணி'போல லோ பட்ஜெட் டில் இயல்பாக எடுக்கப்படும் படங்களும் பெரும் வெற்றி பெறுகின்றன. நல்ல கதை, இயல்பான, தெளிவான திரைக்கதை இருந்தால் போதும். அதை ரசிகர்கள் கமர்ஷியல் ஹிட் படமாக்குவார்கள். அந்த நம்பிக்கையில்தான் நண்பர்களுடன் இணைந்து 'மக்கள் கலைக்கூடம்' என்ற அமைப்பின் மூலம் இந்தப் படத்தை நாங்களே தயாரிக்கிறோம்!"

"தடகள வீராங்கனையான காயத்ரி, ஒரு சினிமா ஹீரோயினாகத் தாக்குப்பிடிப்பாரா?"

ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்

"காயத்ரி, தடகளமும் தன்னம்பிக்கையும் வெவ்வேறு அல்ல என்பதை நிரூபித்தவர். முதல் சந்திப்பிலேயே அவர்தான் நிச்சயம் என் கதைக்கு செட் ஆவார் என்று என்னால் நம்ப முடிந்தது. 'முடியாது' என்ற வார்த்தையை அவரி டம் இருந்து இதுவரை நான் கேட்டதே இல்லை. காயத்ரி இப்போது தொட்டு இருக்கும் உயரத்துக்கும், தொடப்போகும் உச்சத்துக்கும் அவரின் போராட்டக் குணமே காரணம்!"

கொஞ்சம் கூச்சம், நிறையப் புன்னகையோடு நின்று இருந்த காயத்ரியிடம் சில கேள்விகள்...

"உங்க நண்பர்கள் என்ன சொல்றாங்க?"

"யாருக்கும் இதுவரைக்கும் தெரியாது. விகடன் இன்டர்வியூ பார்த்துதான் தெரிஞ்சுக்குவாங்க. 'ஏய்... நீயா ஹீரோயின்?'னு நிச்சயம் ஆச்சர்யப்படுவாங்க... செமத்தியாக் கலாய்ப்பாங்க. 'நான் படிச்சது சர்ச் பார்க் ஸ்கூல்ல. அங்கே என் சூப்பர் சீனியர் த்ரிஷா. 'நானும் அவங்களை மாதிரியே ஸ்டார் ஆகிருவேன். அப்போ அப்பாயின்மென்ட் வாங்கினாத்தான் பேச முடியும். எதுவா இருந்தாலும் இப்பவே பேசிடுங்க'ன்னு நானும் திரும்பக் கலாய்ப்பேன்!"

ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்

"சினிமாவில் தொடர விருப்பமா?"

"இந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைச்சா, தொடர்ந்து நடிப்பேன். அப்பவும் லவ், டூயட்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது. நல்ல விஷயங்களைச் சொல்கிற படமாக இருந்தால்தான் நடிப்பேன். எப்பவும் எனக்கு 'ரன்னிங்'தான் ஃபர்ஸ்ட். மத்த எல்லாமே நெக்ஸ்ட்தான்!"

"காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லையே. ஏன்?"

"இந்த காமன்வெல்த் எனக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையையும் அனுபவத்தையும் கொடுத்தது. என்னோடு ஓடியவர்கள் அனை வருமே ஒலிம்பிக், ஏசியன் கேம்ஸ் போன்றவற்றில் பதக்கம் வென்ற வர்கள். அனுபவம் மிக்கவர்கள். 30 ப்ளஸ் வயதுக்காரர்கள். அவர்களுடன் ஓடி இறுதிப் போட்டியை எட்டியதற்கே என்னை சக இந்திய வீராங் கனைகள் கொண்டாடி னார்கள். எனக்கு இப்போ 19 வயதுதான் ஆகுது. இன்னும் சாதிக்க வாய்ப்பும் வயதும் நிறைய இருக்கிறது. நிச்சயம் சாதிப்பேன்!"

ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்
ஒன்..டூ...த்ரீ... காயத்ரி! ஒரு நாயகி உருவாகிறாள்