Published:Updated:

மின்மினி கண்மணிகள்!

மின்மினி கண்மணிகள்!

மின்மினி கண்மணிகள்!
மின்மினி கண்மணிகள்!
மின்மினி கண்மணிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இர.ப்ரீத்தி
மின்மினி கண்மணிகள்!

சூப்பர் டூப்பர் ஸ்டார்கள், கிளாமர் கில்லர் ஹீரோயின்கள் படபடக்கும்

விளம்பரங்களைக் காட்டிலும் குட்டிச் சுட்டிக் குழந்தைகள் மழலை முகம் காட்டும் விளம்பரங்கள், நம்மை புன்னகை பூக்கவைக்கும். தேசிய அளவில் அப்படிக் கலகலக்கவைக்கும் சில புன்னகைப் பூக்கள் இங்கே...

தியா சோனச்சா

பார்பி டாலுக்கு வயது: 6

நடிப்பு அனுபவம்: 21/2 வருடம்

முத்திரை விளம்பரங்கள்: கிஸ்ஸான் ஜாம், ஏர்டெல், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பீட்ஸா ஹட், சக்தி மசாலா, கோல்டு வின்னர் என 120-க்கும் மேல்.

மின்மினி கண்மணிகள்!

பாப்பா பேட்டி: "நான் ஆறு மாச பாப்பாவா இருக்கும்போதே ஒரு இந்தி சீரியலில் சின்ன வயது கிருஷ்ணனா நடிச்சேனாம். அந்த சீரியல் டி.வி.டி ப்ளே பண்ணித்தான், அப்பவே எங்க அம்மா எனக்கு புவ்வா ஊட்டுவாங்களாம். மிஸ்கிட்ட திட்டு வாங்கக் கூடாதுன்னு விளம்பர பிரேக்லயே ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுருவேனே! இந்தியில் 'கஜினி', 'ஹர்பல்', 'வீ ஆர் ஃபேமிலி'ன்னு மூணு படத்துலயும் நடிச்சிருக்கேன். 'வீ ஆர் ஃபேமிலி' படத்துல நடிச்சப்போ, கஜோல் ஆன்ட்டிகூட ரொம்ப க்ளோஸ் ஆகிட்டேனே. ஆன்ட்டி எனக்கு ஐஸ்க்ரீம், சாக்லேட்லாம் வாங்கித் தருவாங்க. எனக்கு எங்க அம்மா நெட்டி எப்பவும் என்கூடவே இருக்கணும்னு ஆசை. ஆனா, இப்பக் கொஞ்ச நாளா அவங்க என்கூட அவ்வளவா விளையாட மாட்றாங்க. கேட்டா 'இன்னும் கொஞ்ச நாள்ல உன்கூட விளையாட ஒரு தம்பிப் பாப்பா வந்திரும்'னு சொல்றாங்க. எனக்கு எதுவும் புரியலை. ஆனா, ஐ மிஸ் மை மம்மா!"

கரிஷ்மா
பெங்களூரு ரோஸின்

மின்மினி கண்மணிகள்!

வயது: 6

விளம்பரப் பயணம்: 'பியர்ஸ் ஜெர்மி ஷீல்டு' தொடங்கி ஆர்.எம்.கேவி, போத்தீஸ் என, கடந்த இரண்டு வருடங்களில் ஒரு டஜன் விளம்பரங்கள்.

கரிஷ்மாவின் கவலை: "நான் விளம்பரம் நடிக்கிறது தவிர, பரதநாட்டியம், கர்னாடக சங்கீதம், டிராயிங் கிளாஸ்லாம் போறேன். அதனால, ரெஸ்ட்டே இல்லாம நான் சுத்திட்டே இருக்கிறதைப் பார்த்துட்டு, எங்க சொந்தக்காரங்க நிறைய சாக்லேட்ஸ் வாங்கிக் கொடுப்பாங்க. ஜாலியா இருக்கும். சினிமாவில் நடிக்க நிறையப் பேர் கூப்பிட்டாங்க. ஆனா, அப்பா வேண்டாம்னு சொன்னாரா, அதனால 'எனக்கு நிறைய வேலை இருக்கு'ன்னு சொல்லி நோ சொல்லிட்டேன். சூப்பர்ல!"

ஸ்ரேயா ஷர்மா

மின்மினி கண்மணிகள்!

ரீ-என்ட்ரி தேவதை: 'ஜில்லுனு ஒரு காதல்' ஜோதிகா பாப்பா. 13 வயதில் குறும்புச் சிறுமியாக மீண்டும் விளம்பரங்களில் ரீ-என்ட்ரி.

சமீப சந்தோஷம்: 'எந்திரன்' க்ளைமாக் ஸில் நடித்தது!

ஸ்ரேயா மேடம் ஆர்டர்: "எய்த் படிக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்னு எல்லாத்துலயும் அக்கவுன்ட் வெச்சிருக்கேன். 'உனக்கு எதுக்கு இப்பவே அதெல்லாம்... காலேஜ் போனதும் பார்த்துக்கலாம்'னு சொல்றாங்க. அப்பெல்லாம் இது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிடும்னு அவங்களுக்குப் புரியலை.தெரியாத மொழிப் படங்கள், விளம்பரங்களில் நடிச்சாலும்கூட, சிச்சுவேஷன் சொல்லச் சொல்லுவேன். 'ஹீரோயினே சிச்சுவேஷன் கேக்கலை. இந்த மேடம் ஆர்டர் போடுறாங்க'ளேன்னு சொல்வாங்க. ஆமா, ஸ்ரேயா மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவங்க சொன்னதை யார் கேக்கலைன்னாலும் கொன்னு... கொன்னு!"

விரேஜ் வினோத் தர்ஷானி

மின்மினி கண்மணிகள்!

'குட்நைட்' க்யூட் பையனின் வயது: 6

முதல் கேமரா தரிசனம்: ஆறு மாதக் குழந்தையாக 'ஷெர்லாக்' விளம்பரத்தில்!

பெருமை: 'சைல்டு' பத்திரிகையின் அட்டையை அலங்கரித்தது.

மின்மினி கண்மணிகள்!

ையனின் அனுபவம்: "'அம்மா என்னைத் திட்டிட்டே இருக்காங்க... சீக்கிரம் வீட்டுக்கு வாங்கப்பா'ன்னு நான் ஏர்டெல் விளம்பரத்துல பேசின டயலாக் ரொம்ப ஃபேமஸ் தெரியுமா? சில அண்ணாக்கள், 'என்ன விரேஜ், உங்க அப்பா வீட்டுக்கு வந்துட்டாங்களா?'ன்னு கேட்டு என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. 'ஊஊஊஊ'ன்னு அழுதுட்டே நான் கண்ணை மூடிட்டு அம்மாகிட்ட ஓடிருவேன். அமிதாப் அங்கிள்கூட ஒரு விளம்பரத்துல நடிச்சதுல இருந்து, நாங்க ரெண்டு பேரும் தோஸ்த். எனக்கு பாஸ்தா டிஷ் ரொம்பப் பிடிக்கும். ஆனா, அம்மா அதை அடிக்கடி சாப்பிட விட மாட்டாங்க. நான் சமத்தா கிளாஸ் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தா, அம்மாவே பாஸ்தா செஞ்சு தருவாங்க. அதுக்காகவே நான் கிளாஸ் ஃபர்ஸ்ட் எடுப்பேனே... உங்களுக்குலாம் கொடுக்க மாட்டேன். வெவ்வவெவ்வவே!"

ஜியா, ஜாய்னா

மின்மினி கண்மணிகள்!

உள்ளம் கொள்ளைகொள்ளும் இரட்டையர்களின் வயது: 7

ஹிட் அடையாளம்: 'மிச்ச ரெண்டு ரூபாய்க்கு உங்களுக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்தோம்' என்று பெப்சோடென்ட் விளம்பரத்தில் குறும்பு செய்த குட்டிகள் எட்டு மாதப் பாப்பாக்களாக இருக்கும்போது நடிக்க வந்தவர்கள்.

பாப்பாக்கள் பேட்டி: "ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கிறதால, எல்லாரும் பயங்கரமா குழம்புவாங்க. ஜியா, ப்ரியதர்ஷன் அங்கிள் படம் 'பம் பம் போலே'ல நடிச்சா. ஜாய்னா 'ப்ரேக் கி பாத்' படத்துல சின்ன வயசு தீபிகா படுகோனா நடிச்சா. ஆனா, ஜியாகிட்ட வந்து 'தீபிகா படுகோன் மாதிரி நீங்க சிரிக்கணும்'னு சொல்வாங்க யூனிட்ல. அவ கரீனா கபூர் மாதிரி சிரிப்பா. எல்லாரும் குழம்புவாங்க. நாங்க மம்மிகிட்ட சொல்லிச் சொல்லி சிரிப்போம். நீங்களாவது சரியாச் சொல்லுங்க... எங்க ரெண்டு பேர்ல யாரு ஜாய்னா, ஜியானு?"

மின்மினி கண்மணிகள்!
மின்மினி கண்மணிகள்!