Published:Updated:

ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!

ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!

ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!
ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!
ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!
ம.கா.செந்தில்குமார், படம்:வி.செந்தில்குமார்
ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!

'ஹாய்! என் பெயர் ரேஷிகா. நான் சென்னைப் பொண்ணு. மாடர்ன் டிரெஸ்தான்

பிடிக்கும். இருந்தாலும், சேலை மேல் எனக்கு அவ்வளவு பிரியம். டூ வீலர், எலெக்ட்ரிக் டிரெயின், எஸ்கலேட்டர்னு பரபரப்பா ஓடிட்டு இருக்கும்போது, சேலை செட் ஆகாது. ஆனா, ஸ்வரோவ்ஸ்கி கல் பதிச்சு, ஜமிக்கி வேலைப்பாடுகளுடன் இருக்கும் பட்டுச் சேலை கட்டிக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, 'வருஷத்துல ஒருநாள் சேலை கட்டுறவ நீ? உனக்கெல்லாம் எதுக்கு அவ்வளவு காஸ்ட்லி சாரி?'ன்னு வீட்ல திட்டிட்டாங்க. எனக்குக் கோபம் கோபமா வந்துருச்சு. 'சென்னையிலேயே காஸ்ட்லியான சேலையை நான் கட்டிக் காட்டுறேன்'னு எனக்கு நானே ஒரு சவால் விட்டுக்கிட்டேன். என் பகீர் பட்டுக் கனவை விகடன் நிறைவேத்துமா?' - ஸ்மைலியுடன் வந்தது ரேஷிகாவின் இ-மெயில். தீபாவளி டாபிக்கல் ஆசை என்று உடனடியாக ரத கஜ துரக பதாதிகளைத் துரத்தி விரட்டினோம்.

ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!

சென்னை போத்தீஸ் உரிமையாளர் ரமேஷி டம் விவரம் சொல்லவும், "மோஸ்ட் வெல்கம்!" என்று வரவேற்றார். ஒரு ஞாயிற்றுக் கிழமை, ரேஷிகாவுடன் தி.நகர் ஜனப் பெருங் கடலில் நீந்தி, போத்தீஸ் அடைந்தோம். பட்டுச் சேலை பிரிவின் இன்சார்ஜ் ஜெயராமன் உற்சாகமாக வரவேற்றார். கண்கள் ஆர்வத்தில் ஜொலிக்க, "கடையிலேயே காஸ்ட்லி சேலை எவ்வளவு... ஒரு லட்ச ரூபாய் இருக்குமா?" என்று கேட்டார் ரேஷிகா. "ஸ்பெஷல் டிசைனர் பட்டு சேலைகளில் அதுதான் குறைந்தபட்ச விலையே. உங்களுக்காக நான் நாலு சேலைகள் எடுத்துவெச்சிருக்கேன்!" என்று நாலு சேலை களை ரேஷிகா முன் பரப்பினார் ஜெயராமன். ஆசை ஆசையாக அவற்றைப் புரட்டிய ரேஷிகா, சேலைகளின் விலை அட்டையைப் பார்த்ததும் 'யம்மாடியோவ்!' என்றார். ஒவ்வொன்றிலும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை!

"ஒரு புது கார் வாங்குற பணம்!" என்று ஆச்சர்ய அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் ரேஷிகா. ஒருவாறு தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு கையோடு கொண்டு வந்திருந்த பச்சை கலர் பிளவுஸுக்குப் பொருந்தி வந்த ஒரு புடவையைக் கையில் எடுத்துக்கொண்டார் ரேஷிகா. விலை

ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!

4 லட்சத்து 65 ஆயிரத்து, 322.

உடை மாற்றும் அறைக்குள் சென்றார். முழுதாக 30 நிமிடங்கள் கரைந்த பிறகு, கதவு திறந்தது. தரையோடு தவழ்ந்த முந்தானையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, 'ஜொலி ஜொலி' தேவதையாக வெளியே வந்தார் ரேஷிகா. பட்டுப் புடவையின் ஸ்வரோவ்ஸ்கி கற்களைக் காட்டிலும் ரேஷிகாவின் முகம்கொள்ளாத பூரிப்பு அதிகமாக டாலடித்தது. ஷோ ரூமின் பிரகாச விளக்குகள் தந்த கூடுதல் மினுமினுப்பில் இன்னும் பிரகாசமாக, தழையத் தழையப் புடவையுடன் ரேஷிகா நடந்து வந்தது மற்ற வாடிக்கையாளர்களின் கவனத்தை ஏகமாகவே கவர்ந்தது.

ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!

மடக்கிப் பிடித்திருந்த முந்தானையைக் கீழேவிட்டால் அதில் இணைக்கப்பட்டு இருந்த பிளவுஸ் பிட்டின் நீள அகலம் காரணமாகத் தரையோடு புரண்டது. அதீத ஆர்வத்தில், "அந்த பிளவுஸ் பிட்டைக் கட் பண்ணிடலாமா?" என்று கேட்டார் ரேஷிகா. "கேஷ் கொடுத்தா... இப்பவே கட் பண்ணிரலாம்!" என்றார் பட்டுப் பிரிவின் உதவி மேலாளர் டேவிட்.

ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!

"இருக்கட்டும்... இருக்கட்டும்... அதுபாட்டுக்கு இருக்கட்டும்" என்று சைடு வாங்கினார் ரேஷ். "இது போத்தீஸ் ஸ்பெஷல் சாமுத்ரிகா பட்டு. ஸ்டோன், ஜமிக்கி வேலைப்பாடுகள் நிறைந்தது. அதிலும் சுத்தமான ஒரிஜினல் ஸ்வரோவ்ஸ்கி வகைக் கற்கள் எக்கச்சக்கமா பயன்படுத்தி நெய்யப்பட்டது. விலை அதிகம் இருந்தாலும் அதிகமா விற்பனையாகும் பட்டு வகை! பொதுவா, இந்த மாதிரி சேலைகளை புக் பண்ணித்தான் டெலிவரி வாங்கிக்கணும். இது தீபாவளி சமயம் என்பதால், இத்தனை சேலைகள் ரெடியா இருக்கு. நீங்க கொஞ்சம் லக்கி!" என்றார் டேவிட்.

கண்ணாடி முன் நின்று முன்னும் பின்னும் தன் அழகைத் தானே ரசித்துக்கொண்டு இருந்த ரேஷிகாவை, ஷோகேஸ் பொம்மையைப் பார்ப்பதுபோல வேடிக்கை பார்த்தார்கள் சில வாடிக்கையாளர்கள்.

ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!

ஒருவழியாக மனதே இல்லாமல் புடவையை மாற்றி மீண்டும் இயல்புக்குத் திரும்பினார் ரேஷிகா. கடை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகள் பகிர்ந்துவிட்டு, நம் பக்கம் திரும்பி இறுதியாகச் சொன்னதுதான் ஃபினிஷிங் பஞ்ச். "நான் ஒரு லூஸு... 'காஸ்ட்லி சேலையைக் கட்டிப் பார்க்கணும்'னு மெயில் அனுப்பினதுக்குப் பதிலா, 'காஸ்ட்லி சேலையை வாங்கிக் கொடுங்க'ன்னு விகடனுக்கு மெயில் அனுப்பிச்சு இருக்கணும்!"

ஆஹா!

ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!
ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!
ஆசை : ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ஆசை!