Published:Updated:

நாரில் பூத்த மலர்கள்!

நாரில் பூத்த மலர்கள்!

நாரில் பூத்த மலர்கள்!
நாரில் பூத்த மலர்கள்!
நாரில் பூத்த மலர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அப்துல் ரகுமான்
நாரில் பூத்த மலர்கள்!

ன் மனைவியிடம் மனைவிக்கு உரிய இலக்கணங்கள் இருந்தது இல்லை.

எங்கள் 46 ஆண்டு இல்லற வாழ்க்கையில் நாங்கள் சண்டை போட்டுக்கொண்டதே இல்லை. நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால், அதுதான் உண்மை. இந்தப் பெருமை என்னைச் சாராது; அவளையே சாரும்.

நான் சில நேரத்தில் கோபத்தில் நெருப்பை உமிழ்ந்தாலும், அவள் அமைதியாக இருந்துவிடுவாள். இது என்னைச் செருப்பால் அடித்ததுபோல் இருக்கும். 'இவளைப் போய்த் திட்டிவிட்டோமே!' என்று நான் இரண்டு நாள் வருத்தப்படுவேன்.

கோபத்தில்கூட நான் அவள் மீது கை வைத்தது இல்லை. இந்தப் பெருமையும் அவளையே சாரும். அவளுடைய கனிவான முகத்தைக் கண்டால், யாருக்கும் அடிக்கத் தோன்றாது.

பூ வேண்டும், புடவை வேண்டும், நகை வேண்டும் என்று அவள் ஒருநாள்கூடக் கேட்டதே இல்லை.

நாரில் பூத்த மலர்கள்!

பாலைவனத்துக்கென்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்ட ஒட்டகம்போல எனக்குஎன்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்டவள் என் மனைவி. அவள் போய்விட்டாள்; நான் வெறும் பாலைவனமாய் நிற்கிறேன்.

தனி மரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால், என் மனைவி தோப்பாக இருந்தாள். வெயிற் பொழுதுகளில் அவள் நிழல் கொடுத்தாள். பசித்த பொழுது பழம் கொடுத்தாள். எப்போதும் என் மீது மலர் மாரி பெய்துகொண்டு இருப்பாள்.

என் மனைவி எனக்குக் கிடைத்த பிறகு நான் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.

அவள் நான் கேளாமலே கிடைத்த வரம். அவள் மூலம் இறைவன் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டான். அவளைத் தவிர, வேறு யாரும் என்னோடு வாழ்ந்திருக்க முடியாது. அவளைத் தவிர, வேறு யாராவது எனக்கு மனைவியாய் வாய்த்துஇருந்தால், பெரும்பாலும் நான் சந்நியாசி ஆகி இருப்பேன்.

'மஹ்பூபா' என்றால் காதலி. என் மனைவியின் பெயர் மஹ்பூப் பேகம்.

நான் ஒருத்தியைக் காதலித்தேன். அவளும் என்னைக் காதலித்தாள். எம் திருமணத்துக்கு எதுவும் தடையாக இருக்கவில்லை. ஆனால், என் தன்மான உணர்வால் என் காதலியை நான் இழந் தேன். இறைவன் திருமணத்தின் மூலம் 'காதலி' ஒருத்தியை எனக்கு அளித்தான்.

நார், மலர்களை இணைக்கிறது. நானும் என் மனைவியும் நாரில் பூத்த மலர்களாக இருந்தோம்.

மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. ஆனால், நமக்குத் தேவைப்படும்போது விளக்கை எரிக்கிறது; விசிறியைச் சுழற்றுகிறது. என் மனைவி மின்சாரமாக இருந்தாள்.

என் மனைவி இளமையில் மதுவாக இருந்தாள்; நடுமையில் பாலாக இருந்தாள்; முதுமையில் மருந்தாக இருந்தாள்.

என் படிப்புக்கும் எழுத்துக்கும் அவள் எப்போதும் இடையூறாக இருந்தது இல்லை. அதனால்தான் நான் நிறையப் படிக்கவும் எழுதவும் முடிந்தது.

என்னை நேசித்த ஆத்துமாவை ஆத்துமா நோய் நேசித்தது. அவள் தன் சுவாசப் பையை அதற்கு உணவாகப் பரிமாறினாள். மூச்சுவிடச் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தவள், கடைசியில் மூச்சை விட்டு விட்டாள்.

என்னதான் உயிர் உடலோடு ஒட்டி உறவாடிக்கொண்டு இருந்தாலும், ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுகிறது.

அப்படித்தான் அவள் போய்விட்டாள்!

நாரில் பூத்த மலர்கள்!
நாரில் பூத்த மலர்கள்!