Published:Updated:

எட்எட்டு!

எட்எட்டு!

எட்எட்டு!
எட்எட்டு!
எட்எட்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் டீம்
எட்எட்டு!

சென்ற இடம் ஆவுடையப்பன், சபாநாயகர்.

எட்எட்டு!

"காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்துக்காக ஏதென்ஸ், ஸ்பெயின், கனடா, நைஜீரியா ஆகிய நாடுகளுக்குச் சமீபத்தில் சென்றுவந்தேன். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் சபாநாயகர்கள் வந்திருந்தார்கள். இந்தியாவின் சார்பாக நானும் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமாரும் சென்றோம். நீர்ப் பிரச்னை, உணவுப் பிரச்னைபற்றி நான் பேசினேன். கென்யாவின் தலைநகர் நைரோபி என்னை ஆச்சர்யப்படுத்தியது. அது அந்த நாட்டின் தலைநகரம். ஆனால், இப்போதும் அங்கு விவசாயம்தான் பிரதான தொழில். விவசாயத் தைத் தொழிலாகக்கொண்ட ஒரு நாட்டின் தலைநகரத்தை அங்குதான் முதன்முதலில் பார்த்தேன்!"

சந்தித்த நபர் வாசுகி பாஸ்கர்
ஆடை வடிவமைப்பாளர்.

எட்எட்டு!

"சமீபத்தில் 'ஈசன்' படத்தின் ஒரு பாடலுக்காக அதில் நடிக்கும் அபிநயாவுக்கு ஆடை வடிவமைத்தேன். கேட்கவும், பேசவும் இயலாத அந்தப் பெண்ணிடம் அத்தனை பிரமாதமான எனர்ஜி. ஒரு தடவைகூட சைகையால் பேசாமல், எல்லோரையும்போல நார்மலாகத்தான் அபிநயாவிடம் பேசினேன். சாதாரணமானவர்களைவிட மிக எளிமையாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொன்றையும் செய்தார். சசிகுமாரைச் சந்தித்தபோது, அபிநயாபற்றி 15 நிமிடங்கள் பேசினேன். அவரோ அபிநயாபற்றி அரை மணி நேரம் பேசினார். அந்தப் பெண் மிகப் பெரிய வெற்றிபெற வேண்டும் என இந்த நிமிடம் வரை மனதார வேண்டிக்கொண்டே இருக்கிறேன்!"

பார்த்த படம் பிரபு சாலமன், இயக்குநர்.

எட்எட்டு!

"ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லீன் படங்களுக்கு நான் ரசிகன். அவருடைய Doctor Zhivago என்ற படத்தை மீண்டும் சமீபத்தில் பார்த்தேன். அதே பெயரில் வெளியான நாவலை மையமாகவைத்து எடுக்கப்பட்ட படம் இது. முதல் உலகப் போர், ரஷ்யப் புரட்சி... இவற்றைப் பின்னணியாகக்கொண்டு விரியும் கதையில் துளிகூட ஆர்ப்பாட்டம் கிடையாது. பிரிந்துபோன காதலர்கள் மீண்டும் சேரும்போது ஏற்படும் மன உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் கதை. ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கிரீட்டிங் கார்டுபோல இருக்கிறது. அந்தக் காலத்திலேயே 'மாஸ்கோ' நகரத்தை ஸ்பெயினில் செட்டாக உருவாக்கி எடுக்கப்பட்ட படம் இது!"

வாங்கிய பொருள் பெனிட்டா, ஓவியர்

எட்எட்டு!

"சமீபத்தில் என் நண்பர் வீட்டுக்குச் சென்றபோது, 'Handmade in India' என்ற புத்தகத்தைப் பார்த்தேன். சிலைக்கு சுவாமிமலை பிரசித்தி என்பதுபோல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பூர்வீகம் இருக்கும். அப்படி இந்தியா முழுக்கவும் பாரம்பரிய முக்கியத்துவம் உள்ள பொருட்களை, அந்தப் பொருட்களுக்கான பூர்வீக இடங்களில் எப்படித் தயாரிக்கிறார்கள், அவை எங்கெங்கு கிடைக்கும் என்ற வரைபடங்களுடன் அந்தப் புத்தகத்தில் இருந்தது.

எட்எட்டு!

3,700 விலை உள்ள அந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கிப் படித்த பிறகுதான், அடுத்த வேலையைப் பார்க்க முடிந்தது!"

கலந்துகொண்ட நிகழ்ச்சி பர்வீன் சுல்தானா, பேராசிரியை.

எட்எட்டு!

"மலேசிய கம்பன் கழகம் நடத்திய விழாவுக்குப் போய் இருந்தேன். வழக்கமாக, அங்கு ராமாயணம்பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், இங்கு பேச்சாளர்கள் ஒவ்வொருவருக்கும் ராமன், லட்சுமணன், சீதா, அனுமன் என ஒரு பாத்திரத்தை ஒதுக்கிவிட்டனர். ஒவ்வொரு பாத்திரத்தைப்பற்றிப் பேசும் போதும், அதேபோன்ற வேடம் அணிந்த ஒருவர் எங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். இப்படி பரிசு வழங்கிய ராமாயண கதாபாத்திரங்கள் எல்லாம், அதே வேஷத்துடன் மேடையில் அமர்ந்து இருந்தபோது, ஏதோ மன்னர் கால அரசவையில் பேசுவதுபோன்ற லயிப்பு ஏற்பட்டது!"

கேட்ட இசை த்ரிஷா, நடிகை.

எட்எட்டு!

"ஷூட்டிங் பரபரப்புகளுக்கு இடையே, பிடித்த பாடல்களைக் கேட்டுதான் என்னை ரிலாக்ஸ் பண்ணிக்கொள்வேன். அப்படி சமீபத்தில் அடிக்கடி நான் கேட்ட பாட்டு, 'எந்திரன்' படத்தில் வரும் 'புதிய மனிதா பூமிக்கு வா'. ரஹ்மான் சாரின் மியூஸிக் ஒரு பக்கம் மிரட்டுதுன்னா, கிராஃபிக்ஸ் ரோபோவோட ஸ்டைல் இன்னொரு பக்கம் ஈர்க்குது. வெறும் ஆடியோ கேட்பதைவிட, இந்தப் பாட்டை வீடியோவுடன் சேர்த்துப் பார்க்கும்போது... சிம்ப்ளி சூப்பர்ப்!"

பாதித்த சம்பவம் பாரதி கிருஷ்ணகுமார்,
ஆவணப் பட இயக்குநர்.

எட்எட்டு!

"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வைத்தியநாதபுரம் என்ற கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளி ஒன்று இயங்குகிறது. வெறும் பத்துக்குப் பத்து அறையில் ஒன்று முதல் ஆறு வகுப்பு வரையிலும் 25 மாணவர்கள் படிக்கின்றனர். எல்லோரும் ஒரே அறையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு மேசை, நாற்காலிகூடக் கிடையாது. மிக மிகக் குறைந்த சம்பளத்தில் அந்தப் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார். 'ஒரே அறையில் ஆறு வகுப்பு மாணவர்களையும் எப்படிச் சமாளிப்பீர்கள்?' என்று அவரிடம் கேட்டேன். 'ஒன்று, இரண்டாம் வகுப்பினருக்கு போர்டில் எழுதிப்போட்டு எழுதச் சொல்வேன். மூன்று, நான்காம் வகுப்பினரை எதிர் திசையில் திரும்பி அமர்ந்து படிக்கச் சொல்வேன். ஐந்து, ஆறாம் வகுப்பு மாணவர்களை மற்ற திசையில் திரும்பி அமரச் சொல்லி நான் பாடம் நடத்துவேன்' என்றார். கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்?"

படித்த புத்தகம்
எஸ்.சரவணன், இயக்குநர்.

எட்எட்டு!

"நான் எழுதிக்கொண்டு இருக்கும் கதைக்கு இலங்கை வட்டார வழக்கு தேவையாக இருந்ததால், செங்கை ஆழியான் எழுதிய 'மரணங்கள் மலிந்த பூமி' என்ற நூலை வாசித்தேன். 1995-ம் ஆண்டு யாழ்ப்பாணம் 'வலி' கிராமத்து மக்கள் யுத்த நெருக்கடியில் அகதிகளாக இடம் பெயர்வதும், பிறகு அதே இடத்துக்குத் திரும்பி வந்து வாழ்வதுமான இடர்ப்பாடுகளை விவரிக்கும் நூல். உழுத வயலையும் தொழுத கோயிலையும் விட்டு விலகி, உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடும் கொடுமையான வாழ்க்கை யாருக்கும் நேரக் கூடாத அவலம். இதை ஈழத்துக்கே உரிய தூய தமிழ்ச் சொற்கள் அடங்கிய வட்டார வழக்கில் வாசிக்கும்போது மனதில் அப்படியே பதிந்துபோகிறது!"

எட்எட்டு!
எட்எட்டு!