Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

டைரக்டர் டு நடிகர் லிஸ்ட்டில் அடுத்த நல்வரவு... கௌதம் வாசுதேவ் மேனன். தான் இயக்கும் எல்லா படங்களிலும் ஒரு ஸீனில் தலைகாட்டுவது அவரின் பழக்கம். சிம்புவின் 'போடா போடி' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு கௌதமைக் கூப்பிட, லண்டனுக்குப் பறந்து சென்று நடித்துக் கொடுத்தாராம். அடுத்ததா ஹீரோதானே?

இன்பாக்ஸ்

சமீபத்தில், மும்பையில் தனது Being Human தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஃபேஷன் ஷோ நடத்தினார் சல்மான். ராம்ப் வாக்கில் சல்மானோடு... ப்ரீத்தி ஜிந்தா, கேத்ரீனா கைஃப், ராணி முகர்ஜி, பிபாஷா பாசு, சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கரிஷ்மா கபூர் என எட்டு நடிகைகளும் ஒரே நேரத்தில் நடந்து வர... அரங்கமே அதிர்ந்தது. எட்டு லட்டு!

மெக்சிகோவின் 'குவாடலுப் பிராவோ' நகரம்தான் சர்வதேச போதை மாஃபியாக்களின் தலைநகரம். இந்த நகரத்துக்கு காவல் துறைத் தலைவராக வருபவர்கள், சீக்கிரத்தில் கொல்லப்படுவார்கள் என்பது நடைமுறை விதி. அதனால், இங்கே அந்தப் பதவிக்கு யாரும் விண்ணப்பிப்பதே கிடையாது. தில்லாக விண்ணப்பித்து, காவல் துறைத் தலைவராக வந்திருக்கிறார் 20 வயது குற்றவியல் துறை மாணவி மாரிசால் வாலஸ்கார்சியா. பதவியேற்றதும், மண்ணில் அமைதி வேண்டி மாஃபியாக்களுக்கு மாரிசால் எழுதியிருக்கும் ஓப்பன் லெட்டருக்கு நல்ல வரவேற்பு. தில்லு ராணி!

இன்பாக்ஸ்

டென்னிஸ் புயல் மரியா ஷரபோவாவுக்கு டும்...டும்...டும்! அமெரிக்காவின் கூடைப் பந்தாட்ட வீரர் சாஷா வுஜாசிக்கைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் மரியா. கையில் மின்னும் புது மோதிரத்தைப்பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மரியா மௌனம் காக்க, 'ஆமாம்... நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. விரைவில் திருமணம்!' என ரகசியத்தை உடைத்து இருக்கிறார் சாஷா. ஆம்பளை பொய் சொல்ல மாட்டாங்க!

இன்பாக்ஸ்

தாக்கரே குடும்பத்தின் அடுத்த அதிரடி வாரிசு ரெடி. புனே கல்லூரியில் வரலாறு படிக்கும் பால் தாக்கரேவின் பேரன் ஆதித்யாதான், சிவசேனாவின் புதிய புயல். சிவசேனாவில் இளைஞர்களுக்கு என சிறப்பு சேனையை உருவாக்கினார் தாக்கரே. அதற்கு ஆதித்யாவைத் தலைவராக்கி, தசரா விழாவில் கட்சியினருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்... போட்டுத் தாக்கரே!

100-வது பிறந்த நாளைக் கொண்டாடி முடித்ததும், கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்திருக்கிறார், அஸ்ஸாமின் பிரபல சுதந்திரப் போராட்ட வீரரான போலாராம் தாஸ். அவருக்கு டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்பது சிறு வயது ஆசை. சமூகப் பணிகளிலேயே வாழ்க்கை கழிந்துவிட, தனது 100-வது வயதில் லட்சியத்தை நிறைவேற்ற கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் போலாராம். கங்கிராட்ஸ் டாக்டர்!

இன்பாக்ஸ்

கலாமந்திர் அறக்கட்டளை நிறுவியவர் 'என்ஃபீல்ட்' விஸ்வநாதன். முத்துச்சாமி தீட்சிதர் பஞ்சபூதங்களைப் பற்றி ஐந்து ஊர்களில் பாடிய கீர்த்தனைகளை இசைத் தகடு வடிவில் கொண்டுவர வேண்டும் என்பதே இவரது நிறைவேறாத ஆசை. 15 ஆண்டுகளுக்கு முன் மறைந்த விஸ்வநாதனின் இசை ஆசை, அவரது 75-ம் ஆண்டு பிறந்த நாளில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட ஆறு பேர் அந்தக் கீர்த்தனைகளைப் பாடியிருக்கும் இசைத் தகடின் பெயர் 'ஏக்கம்'. இசையில் தொடங்குதம்மா!

தமிழக சட்டசபைத் தேர்தலில் பணம் புரள்வதைத் தடுக்கப் பலவழிகளிலும் முயற்சி எடுக்க இருக்கிறது தேர்தல் ஆணையம். ஹெலிகாப்டர் மற்றும் சொந்த விமானங்கள் மூலம், தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களுக்குப் பணம் கொண்டுசெல்லப்படலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தனியார் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களைச் சோதனை செய்யும் திட்டத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம். தடுத்தாலும் கொடுப்பவனே... தமிழா தமிழா!

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேசப் போர் உரிமை மீறல் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால், அவற்றைப் பொதுமக்கள் அனுப்பலாம் என அறிவித்து இருக்கிறது ஐ.நா. panelofexpertsregistry@un.org என்கிற இ-மெயில் முகவரிக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஆதாரங்களை அனுப்புபவர்கள் தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். அவை மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என அறிவித்து இருக்கிறது ஐ.நா. உண்மை உறங்கிவிடாது!

இன்பாக்ஸ்

'ரா-1' படம் முடிந்ததும் 'டான்-2' படத்தில் நடிக்க இருக்கிறார் ஷாரூக் கான். இதில் பிரியங்கா சோப்ராவும் லாரா தத்தாவும் நடிக்கிறார்கள். தவிர, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னுக்கு கெஸ்ட் ரோலாம். இதனால் அறியப்படும் செய்தி, நான்கு உலக அழகிகளுடன் ஒரே படத்தில் ஜாலி பண்ணுகிறார் ஷாரூக். சாதிச்சுட்டீங்க பாய்!

இன்பாக்ஸ்

மம்தா பானர்ஜி பயங்கரமான இசைப் பிரியர். தேர்தல் நெருங்குவதால், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நட்பு பாராட்டி வரும் மம்தா, சமீபத்தில் அவர் வீட்டுக்குச் சென்று, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்கள் அடங்கிய சி.டி ஒன்றை அன்புப் பரிசாகக் கொடுத்தாராம். சி.டி கொடுத்ததோடு இல்லாமல், அதில் உள்ள பாடல்களைப் பாடிக் காட்டியும் பிரணாப்புக்கு ஆச்சர்யம் கொடுத்திருக்கிறார். என்னது, பிரணாப்புக்கு ஃபீவரா?

இப்போது எல்லாம் ஹோட்டல் பார்ட்டிகளில் தலைகாட்டுவது இல்லை த்ரிஷா. அதற்குப் பதில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ரம்யா கிருஷ்ணனின் வீட்டில் சங்கமிக்கிறார்கள் த்ரிஷா அண்ட் கோ. இரவு முழுக்க நடக்கும் பார்ட்டிகளுக்கு இப்போது புது விருந்தினர் சோனியா அகர்வால். யூ டூ சோனியா?

பெங்களூரில், அக்டோபர் 29-ம் தேதி விவேக் ஓபராய்க்கும் பிரியங்கா ஆல்வாவுக்கும் கல்யாணம். பொதுவாக, திருமணத்துக்கு வந்தவர்களுக்குத்தான் பரிசு கொடுப்பார்கள். ஆனால், விவேக் ஓபராய் பத்திரிகை கொடுக்கும்போதே அழகான போன்சாய் மரத்தைப் பரிசாகக் கொடுத்து, வியப்பூட்டி இருக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கு பத்திரிகை வெச்சீங்களா?

இன்பாக்ஸ்

பிகினி, டூ-பீஸ் எனக் கவர்ச்சியில் கலங்கடிக்கும் தீபிகா படுகோன், புதிய படம் ஒன்றில் முழுக்கச் சேலை அணிந்தே நடிக்க இருக்கிறார். அஷ§தோஷ் இயக்கத்தில் பீரியட் ஃபிலிம் கதையில், சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக நடிக்கிறார் தீபிகா. ஹீரோ அபிஷேக் பச்சன். ரா...ரா...தீபிகா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்