Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

"திராவிட இயக்க சினிமா?"

" 'பராசக்தி'யில் ஆரம்பித்து... 'குவார்ட்டர் கட்டிங்'கில் தொடர்கிறது!"

- ஆ.தமிழ்ச்செல்வி, மதுரை.

" 'நினைத்த மாத்திரத்தில் நான் கலைஞரைத் தொடர்புகொள்ள முடியும்' என்கிறாரே ராமதாஸ்?"

"நண்பேன்டா!"

- பாலாசரவணன், சென்னை-122.

"ஜனநாயகம் என்றால் என்ன?"

"இவ்வளவு அப்புராணியா இருக்கீங்களேஅண்ணே! ஆயிரமாயிரம் கோடி ஊழல் செய்தவர் அமைச்சராக உலா வருவது; 30 ரூபாய்க்குத் திருட்டு வி.சி.டி விற்றவன் கைதாகி அடி வாங்குவது!"

- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

நானே கேள்வி... நானே பதில்!

"கருணாநிதியை இந்த வாங்கு வாங்குகிறாரே, உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறதா?"

"ஜெயா டி.வி-யில் ஒரு விளம்பரம் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. மைனாரிட்டி தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து, குடும்ப ஆட்சியை எதிர்த்து, சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை வன்மையாகக் கண்டித்து, என்று தொடர்ச்சியாக ஜெயலலிதா பேசும் கூட்டங்களுக்கான அழைப்பு விளம்பரம். ஆனால், டாஸ்மாக் பற்றியோ, மது குறித்தோ, அதில் ஒரு வார்த்தைகூட இல்லை.ஏன் என்றால், டாஸ்மாக்கைத் திறந்து தமிழகத்தைத் தழைக்கவைத்ததே ஜெயலலிதாதான்!"

- ச.ஜான்பிரிட்டோ, திண்டுக்கல்.

"பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட படைப்புகள் தற்காலச் சூழலுக்குப் பொருந்திப்போவது உண்டா?"

"ஜலாலுத்தீன் ரூமி என்பவர் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெர்சியக் கவிஞர். இவருடைய கவிதை ஒன்றைப் படித்தபோது, தற்போதைய இலங்கைச் சூழலை நினைவுபடுத்தியது.

'நாங்கள் சிங்கங்கள்தாம்

ஆனால்,

கொடியில் பொறிக்கப்பட்ட

சிங்கங்கள்.

கணத்துக்குக் கணம்

பாய்ந்துகொண்டே இருப்போம்

எல்லாம்

காற்றின் தயவில்தான்!'

இந்தக் கவிதையைப் படித்து முடித்ததும் இலங்கையின் தேசியக் கொடியும் சிங்கக் கொடிதான் என்பது நினைவுக்கு வந்தது. பல நாடுகளின் ஆயுத, ஆதரவுக் காற்றின் உதவியோடு தமிழர்களுக்கு எதிரான ஒரு யுத்தத்தை இலங்கை அரசு நடத்தி, ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஹூம்!"

- தஜ்மல் முகமது, சென்னை-68.

"நமது முதல்வர் ஓர் உறுதியான அரசியல்வாதியா?"

"நிச்சயமாக! சென்னை வந்த சோனியா காந்தியை நேரடியாகச் சந்தித்தபோதும், 'இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்' என்று கடிதம் கொடுத்திருக்கிறாரே! இலங்கைத் தமிழர் பிரச்னைக்குக் 'கடிதம் மட்டுமே எழுதுவது' என்கிற தன்னுடைய கொள்கையை அவர் விட்டுக்கொடுக்கவில்லையே!"

- அன்புமணி, ஈரோடு.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!