Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் வரவேற்பறை

நெடுஞ்சாலை-கண்மணி குணசேகரன்
வெளியீடு: தமிழினி பதிப்பகம், 67,பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. பக்கம்: 384 விலை:

230

விகடன் வரவேற்பறை

புறக்கணிக்கப்பட்ட மத்திய தமிழகத்தின் வட்டார வழக்கைத் தேர்ந்த மொழியில் சொல்வதில் கண்மணி குணசேகரன் கெட்டிக்காரர். 'நெடுஞ்சாலை' என்ற அவரது புதிய நாவல், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பாடுகளைப் பேசுகிறது. முந்திரிக்கொட்டை விற்ற காசை முதலாகப் போட்டு தற்காலிக டிரைவர் ஆவது, டிராக்டர் ஓட்டியவர் திடீரென பேருந்து ஓட்டுநராக மாறுவது என்பதில் தொடங்கி, தினம் தினம் ஆயிரமாயிரம் மக்களுடன் பழகும் போக்குவரத்து ஊழியர்களின் அன்றாட வாழ்க்கையை உணர்ச்சியுள்ள கதையின் வழியே பதிவு செய்திருக்கிறார்!

ஒரு ஊர்ல... இயக்கம்: க.பொன்ராஜ்

விகடன் வரவேற்பறை

ங்கே நீர்நிலை பார்த்தாலும் தூண்டிலைத் தூக்கிக்கொண்டு மீன் பிடிக்கக் கிளம்புகிறார் தாத்தா.அவரைப்போலவே மீன் பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறான் அவரது பேரன். ஆனால், ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல், வறண்டுகிடக்கின்றன நீர்நிலைகள். இறுதியில், ஒரு கண்மாயில் கொஞ்சமாகத் தேங்கிக்கிடக்கும் நீரில் தூண்டில் போடுகிறான் பேரன். தனது பிரமாண்டத் தொழிற்சாலை மூலம் அங்கு நீர் உறிஞ்சிக்கொண்டு இருக்கும் பன்னாட்டு குளிர்பான கம்பெனியின் பாட்டில் தூண்டிலில் சிக்குகிறது! நூற்றாண்டு முடிவில், பேரனின் தூண்டிலில் மீன்கள் சிக்காது என்கிற தாத்தாவின் கவலையோடு முடிகிறது படம். சிறிய படம்தான்... ஆனால், அதன் மூலம் இயக்குநர் பொன்ராஜ் சொல்லும் செய்தி ரொம்பவே பெரிது!

தமிழகழ்வன் www.thamizhagazhvan.blogspot.com.

விகடன் வரவேற்பறை

கரத்துக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் குழந்தைப் பருவப் பாடல்களை சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கும் வலைப்பூ. 'ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம், திங்கட் கிழமை திருடன் கிடைத்தான்' என்று தொடரும் பாடல், பருவத்தின் பால்ய நினைவுகளைக் கிளறுகின்றன. 'அமிழ்தினும் ஆற்ற இனிதே' என்ற தலைப்பில் உள்ள பதிவுகள், பள்ளிப் பருவத்து நினைவுகளை நகைச்சுவையுடன் மீளச் செய்கின்றன. 'பந்தலிலே பாவக்காய்' போன்ற ஒப்பாரிப் பாடல்கள் தொடங்கி, சிறு வயது விளையாட்டின்போது பாடப்படும் பாடல்கள் என்று, பதியப்படாத பாடல்களைப் பதியும் வலைப்பூ!

அக்டோபர் விழிப்பு உணர்ச்சி! www.nbcam.org/

விகடன் வரவேற்பறை

'உலகில் ஒரு வருடத்தில் ஏற்படும் மனித உயிரிழப்புகளில், ஒரு சதவிகிதம் மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகிறது' என்கிறது ஓர் ஆய்வு. 'மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு அதிகமாக வரும். ஆண்களுக்கும் அரிதாக வரும்'. கொழுப்பு உணவுகள், சிகரெட் பழக்கம், ஹார்மோன் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் மார்பகப் புற்றுநோய் வரும் என்பதில் இருந்து... அதன் வெவ்வேறு வகைகள், ஒவ்வொன்றின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள்பற்றி விலாவாரியாக விளக்குகிறது இந்தத் தளம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அக்டோபரில் நாமும் கொஞ்சம் விழிப்பு உணர்வு பெறுவோம்!

மந்திரப் புன்னகை
இசை: வித்யாசாகர் வெளியீடு: ஜங்லீ மியூஸிக் விலை:

75

விகடன் வரவேற்பறை

துள்ளல், துடிப்பு, பரபரப்பு, பரவசம் கடந்த பக்குவக் காதலர்களுக்கான மியூஸிக்கல் க்ரீட்டிங் கார்டு ஆல்பம் வழங்கி இருக்கிறார் வித்யாசாகர். 'சட்டச் சடசட' பாடல் முழுக்கத் தவழ்கிறது காது மடல் வருடும் இசை. 'இந்த மௌனத்தை நான் உணர எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்!' என்ற கவிஞர் அறிவுமதியின் வரிகளில் காதலின் தகிப்பும் தவிப்பும் உருகுகிறது. 'என்ன குறையோ என்ன நிறையோ' பாடலில் சுதா ரகுநாதனின் குரலுக்கு ஏற்ப நெகிழ்ந்து மகிழ்கிறது இசை. காதலின் இயல்புகளை அடுக்குகிறது 'மேகம் வந்து போகும்' பாடல். நதியலைகளில் மிதக்கும் இலைபோல இசைக் கோர்வைகளுக்கு இடையில் மிதக்கிறது அன்வேஷாவின் குரல். கிளாஸிக்! காதல் என்றால் துக்கம், துயரம், சோகம் இல்லாமலா? டாஸ்மாக் டேபிள் தாளமாகத் தடதடக்கிறது 'தண்ணி போட வாப்பா' பாடல். குழறல் உளறல் கானாவாக ரசிக்கவைக்கின்றன விவேகாவின் வரிகள்!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை