Published:Updated:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

பிரீமியம் ஸ்டோரி
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
பாரதிதம்பி
படங்கள்:பொன்.காசிராஜன்,என்.விவேக்
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

புதிய உற்சாகத்துடன் களம் இறங்கியிருக்கிறது 2010-11ம் ஆண்டுக்கான விகடன்

மாணவ நிருபர் படை. பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 52 மாணவப் பத்திரிகையாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஜூலை 24, 25 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. புதிய மாணவர் பட்டாளத்துக்கு அறிவூட்டவும் வழிகாட்டவும் பல்வேறு துறை வல்லுநர்கள் வந்துஇருந்தனர்.

கோபிநாத், நிகழ்ச்சித் தொகுப்பாளர்:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

"ஒரு பத்திரிகையாளனுக்கு விசாலமான பார்வைதான் மிக முக்கியத் தேவை. 'இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டது' என்று மட்டும் சொல்வது வெறும் தகவல் பகிர்தல். அதற்கு மூன்றாம் வகுப்பு சிறுமி போதும். அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவது ஏன் என்பது முதல், இந்திராகாந்தி, 'ராஜஸ்தானில் பெட்ரோல் தேடல்' என்ற போர்வையில் அணு ஆயுத சோதனை நடத்தியது வரை பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து இருந்தால் நீங்கள் நல்ல பத்திரிகையாளர்!"

கவிதா முரளிதரன், பத்திரிகையாளர், தி வீக்:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

"பொதுவாக ஆண் ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் போனால், 'பாவம் அவனால முடியலை' என்பார்கள். அதுவே அந்த விஷயத்தை ஒரு பெண் ணால் செய்ய முடியாமல் போனால் 'இதை எல்லாம் பெண்களால் செய்ய முடியாது' என்பார்கள். அதனால் பத்தி ரிகை உள்பட அனைத்துத் துறைகளி லும் ஓர் ஆணைவிட, பெண் பல மடங்கு உழைப்பை செலுத்த வேண்டி இருக்கிறது!"

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

நா.முத்துக்குமார், பாடலாசிரியர்:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

"நானும் பத்திரிகையாளனாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். 'ஜென்டில்மேன்' படம் பற்றியத் தகவல்களை ஷங்கர் ரகசியமாக வைத்திருந்த சமயம். ஷங்கரை பேட்டி எடுத்து வந் தால் வேலை தருவதாக சொன்னது ஒரு பத்திரிகை. ஒருநாள் காலை 6 மணிக்கு ஷங்கர் வீட்டுக்குப் போனேன். விசிட்டிங் கார்டு கேட்டார்கள். 17 வயது பையனிடம் ஏது விசிட்டிங் கார்டு? என் கவிதைப் புத்தகத்தின் தலைப்பான 'பட்டாம்பூச்சி விற்பவன்' என்பதை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தேன். ஷங்கர் எழுந்து வெளியே வந்து பேசினார். அதன் பின் அவரது தயாரிப்பிலும், இயக்கத்திலும் எத்த னையோ பாடல்கள் எழுதிவிட்டேன். ஆனால், அன்று அவரிடம் பட்டாம் பூச்சி விற்றவன் நான்தான் என்பது இன்றுவரை அவருக்குத் தெரியாது!"

உதயச்சந்திரன், ஐ.ஏ.எஸ்:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

"நானும் 'விகடன் மாணவர் நிருபர்' ஆக முயற்சித்தேன். ஆனால், கல்லூரி இறுதியாண்டில் விண்ணப்பித்ததால், நான் தேர்வாகவில்லை. என்னால் முடியாத ஒன்றை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். என்னை மக்களுக்கு நெருக்கமான அதிகாரி என்பார்கள். அதேபோல மக்களுடன் மிக நேரடியாகப் பழகும் வாய்ப்பு இந்தப் பத்திரிகை வேலையில்தான் சாத்தியம்!"

'தேனி' ஈஸ்வர், ஒளிப்பதிவாளர்:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

"ஒரு முறை நமீதாவை போட்டோ எடுக்க பொள்ளாச்சி போனேன். நான் போன நேரம் ஷூட்டிங் முடிஞ்சு பேக்-அப் பண்ணிட்டாங்க. நமீதாவிடம் கெஞ்சிப் பார்த்தும் முடியவில்லை. ஆனால், சென்னை வந்து சில நாட்கள் கழித்து நமீதாவே அழைத்தார். ஒரு ஸ்டுடியோவில் நல்ல செட் போட்டு, நல்ல லைட்டிங்கில் நமீதாவை போட்டோ ஷூட் பண்ணினேன். நமீதாவுக்கு மிகவும் பிடித்த போட்டோ ஷூட் அது. வாய்ப்பு ஒருமுறை தப்பிப் போகலாம். ஆனால், உண்மையான ஆர்வத்துடன் முயற்சித்தால், அதே வாய்ப்பு மறுபடி நம்மைத் தேடி வரும்!"

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

2009-10'ம் ஆண்டு 'விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்'தில் தேர்வாகி தங்கள் முழு முனைப்பையும் திறமையையும் வெளிப்படுத்தியவர்களுள் து.மாரியப்பன், இர.ப்ரீத்தி, இரா.கோகுல்ரமணன், ஜெ.தான்யராஜு, பா.ஜெயவேல், ந.வினோத்குமார் ஆகிய ஆறு பேரும் 'மிகச் சிறப்புத் தகுதி'யுடன் தேர்வானார்கள். இவர்களுக்கு விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் சான்றிதழும் சிறப்புப் பரிசும் வழங்கினார்.

செ.மனோ, பா.பரத்வாஜ், யா.நபீசா, ச.தமிழ்க்குமரன், ஆ.கிஷோர்குமார், சண்.சரவணக்குமார், கோ.மணிவண்ணன், ஈ.ஜெ.நந்தகுமார், எம்.ஜி.பாஸ்கர ராஜன், இ.கார்த்திகேயன், வே.கிருஷ்ணவேணி, ஆதித்யன் அசோகன் ஆகிய 12 பேரும் சிறப்புத் தகுதியுடன் தேர்வானார்கள். விகடன் வாசகர் பா.சத்தியநாராயணன் ஒவ்வொரு வருடமும் மாணவ நிருபர்களின் பணிகளை மதிப்பிட்டு பேனா பரிசு வழங்குவார். அவரது மதிப்பீடும் விகடனின் அளவுகோலோடு பொருந்தியிருந்தது வாசகர் ரசனைக்கான அங்கீகாரம்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு