பிரீமியம் ஸ்டோரி
ஆசை!
ஆசை!
ஆசை!
பார்கவி @ கண்ட்ரோல் ரூம்!
ரீ.சிவக்குமார்,ம.கா.செந்தில்குமார்,படங்கள்:'ப்ரீத்தி' கார்த்திக்
ஆசை!

" 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்குள் வைத்தே

படத்தைப் பரபரப்பாக நகர்த்தி இருப்பார்கள். எனக்கு கன்ட்ரோல் ரூம் நடவடிக் கைகளை நேரில் பார்க்க ஆசை!" என்று கேட்டவர் பார்கவி. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி.

உடனடியாக அனுமதி வாங்கினோம். அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்தார் பார்கவி.

சென்னை ஆணையர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு அதி தீவிரப் பரபரப்பில் இருந்தது மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறை. போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் ரவி பார்கவியை வரவேற்றார். "சென்னையின் தினசரி இயக்கத்துக்கும் இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கும் என்ன தொடர்பு?" என்பது பார்கவியின் முதல் கேள்வி!

ஆசை!

"சென்னை மாநகரம் மிகவும் சென்சிடிவ்வான தலைநகரம். தமிழகத்தின் மிக முக்கியமான மனிதர்கள் வசிப்பதும், பயணிப்பதும் சென்னையில்தான். இன்னொருபுறம் பல காரணங்களுக்காக சென்னைக்குத் தினமும் வந்து செல்லும் பொதுமக்கள். பிரபலமோ, பொதுஜனமோ... அனைவருக் கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை. அதற்கு சென்னை நகரின் முக்கியச் சாலைகள் 24 மணி நேரமும் எங்களின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். அதற்குத்தான் இந்தக் கட்டுப்பாட்டு அறை என்கிற கன்ட்ரோல் ரூம். இங்கே இருந்தே சென்னையின் அத்தனை சென்சிட்டிவ் பகுதிகளையும் 'லைவ்' ஆகக் கண்காணிக்க முடியும். சொல்லப் போனால், சென்னையின் ஒவ்வோர் அசைவையும் இங்கே பார்க்கலாம். நீங்கள் கமிஷனர் ஆபீஸ் வாசலுக்கு வந்து இறங்கி உள்ளே வந்தது உட்பட!" என்று சிரித்தார் ரவி.

ஆசை!

கொஞ்சம் ஜெர்க் ஆன பார்கவி, "மவுன்ட் ரோடில் நடப்பதை யார் ரெக்கார்ட் செய்வார்கள்? அங்கே இருந்து இங்கு வரை எவ்வளவு தூரத்துக்கு வயர் இழுப்பீர்கள்? சமயங்களில் முதல்வரும், ஜெயலலிதாவும் ஒரே பாதையில் செல்ல நேரிட்டால் அதை எப்படிச் சமாளிப்பீர்கள்?" என்று கேள்விகளை அடுக்கினார்.

வாய்விட்டுச் சிரித்த ரவி, "சிஸ்டர்... கொஞ்சம் பொறுமை. யாரும் வீடியோ கேமராவும் கையுமாகச் சாலைகளில் அலைய மாட்டார்கள். முக்கியமான சாலை சந்திப்புகளில் தேவைக்கேற்பப் பல இடங்களில் சர்வைலன்ஸ் கேமராக் களைப் பொருத்தி இருக்கிறோம். அவை அனைத்தும் வயர் லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்குபவை. அந்த கேமராக்களை இங்கே இருந்தே ஆன், ஆஃப், ஜூம் செய்ய முடியும். சில இடங்களில் சேட்டிலைட் உதவியுடனும் வேலைகள் நடக் கும். பாதுகாப்புக் காரணம் கருதி, இதற்கு மேல் டெக்னிக்கல் தகவல்களை விவரிக்க முடியாது பார்கவி. நீங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று பாருங்கள். உங்களுக்கே பல விஷயங்கள் புரியும்!" என்று வழி அனுப்பிவைத்தார்.

ஓவர் டு கன்ட்ரோல் ரூம்!

கரகரத்துக்கொண்டே இருக்கும் மைக்குகள், விடாமல் கதறும் தொலைபேசிகள் என்ற கற்பனையில் உள்ளே நுழைந்தால், ஆச்சர்யம்! பி.பி.ஓ நிறுவனம்போல மிக நவீனமாக இருக்கிறது கட்டுப்பாட்டு அறை. சுவர்களில் மெகா எல்.சி.டி ஸ்க்ரீனில் அண்ணா சாலை, கோட்டூர்புரம், தலைமைச் செயலக ஏரியா போக்குவரத்து நகர்ந்துகொண்டு இருந்தது. மேஜையில் இருக்கும் ஃப்ளாட் ஸ்க்ரீன் டி.வி-க்களில் முக்கியமான சிக்னலில் சட்டவிதிகளை மீறும் வாகனங்க ளின் எண்களை ஜூம் செய்து குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள் பெண் காவலர்கள்.

ஆசை!

கட்டுப்பாட்டு அறைக் காவலர்களுக்கு வெள்ளைச் சட்டை, பிரவுன் பேன்ட்தான் சீருடை. அனைவரிடமும் பொதுவான அறிமுகத்துக்குப் பிறகு ஒவ்வொரு பிரிவாகச் சென்று அதன் செயல்பாடுகளைக் கேட்டு அறிந்துகொள்ளத் துவங்கினார் பார்கவி. "சிக்னல் மீறுவது, நிறுத்தக் கோடு தாண்டி நிற்பது, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, அடுத்த வண்டியை இடித்துவிட்டுப் பறப்பது போன்றவை எல்லாம் யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களின் முகம், வண்டி எண் முதற்கொண்டு எல்லாமே இங்கே இருக்கும் வீடியோவில் பதிவாகும். விதிகள் மீறிய வண்டிகளின் எண்களை ஆர்.டி.ஓ. அலுவலகத் துக்கு அனுப்பிவிடுவோம். அவர் கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலிப்பார்கள்!" என்றார் பெண் காவலர் ராதை.

"முதல்வர் கோட்டைக்குச் செல்லும் வழி, கவர்னர் மாளிகை, எதிர்க் கட்சித் தலைவர் செல்லும் வழி எனக் கிட்டதட்ட 32 கேமராக்கள் மூலம் வி.ஐ.பி. நடமாட் டம் மிகுந்த பகுதிகளைக் கண் காணித்துக்கொண்டு இருப்போம். அந்த சாலைகளில் இருக்கும் வீட்டின் கதவு வரை ஜூம் செய்து பார்க்கக்கூடிய துல்லியமான கேமராக்கள்!" என்றார் செக்யூரிட்டி சிட்டி போலீஸின் எஸ்.ஐ பிரசன்னா.

கிட்டத்தட்ட சென்னையின் அனைத்துப் பகுதி இயக்கங்களும் அந்த ஒற்றை அறைக்குள் பிரதி பலிக்கும் ஆச்சர்யத்துடனே அடுத்த பகுதிக்கு நடந்தார் பார்கவி. "அரசுப் பேருந்து கள் போக்குவரத்து விதிகளை மீறினால் என்ன பண்ணு வீங்க?" என்று டிராஃபிக் இன்ஸ்பெக்டர் கபாலியி டம் கேட்டார் பார்கவி. "அவர்களுக்கும் அபராதம் தான். உடனே தகவல் அனுப்பி பேருந்தை நிறுத் தச் செய்து ஸ்பாட் ஃபைன் வசூலிக்கலாம். ஆனால், அது தேவை இல்லாமல் பயணிகளை அவதிக்குஉள் ளாக்கும் என்பதால், புகார் களை மாநகரப் பேருந்து எம்.டி-க்கு அனுப்பி விடு வோம். சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து அபராதத் தொகையை அவர்கள் செலுத்திவிடுவார்கள். அப்படி கடந்த ஆண்டு மட்டும் 11 லட்சம் ரூபாய் வசூலானது!" என்றார் கபாலி.

சின்னக் குழந்தைபோல ஒவ்வொரு டி.வி. ஸ்க்ரீன் அருகி லும் நின்று படம் எடுத்துக்கொண்ட பார்கவி, முழுதாக இரண்டு மணி நேரம் கழித்துதான் வெளியே வந்தார். "இப்போ போலீஸ் நினைச்சா நான் வீட்டுக்குப் போற வரைகூட என்னை வாட்ச் பண்ணலாம்தானே... உஷாரா இருக்கணும்!" என்று கண் சிமிட்டி டாட்டா காட்டினார் பார்கவி. மகா ஜனங்களே... நீங்களும் உஷாரா இருந்துக்கங்க!

ஆசை!
ஆசை!
ஆசை!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு