பிரீமியம் ஸ்டோரி

முரளி வித்தை!
முரளி வித்தை!
முரளி வித்தை!
எஸ்.கலீல்ராஜா,சார்லஸ்
முரளி வித்தை!

முரளிதரன்... இனி எவரும் எட்டிப் பிடிக்க முடியாத அதிசயம் நிகழ்த்திய சாதனைத்

தமிழன்! டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் பறித்திருக்கும் உலகின் முதல் கிரிக்கெட் பௌலர். உலக சாதனை, மனைவி மதிமலரின் பிறந்த நாள் என இரட்டை சந்தோஷத்தில் இருந்தார் முரளிதரன்.

"வாழ்த்துகள்.. இந்த சாதனைக்குத் திட்டமிட்டீர்களா?"

"உண்மையில் எனக்கு எந்தத் திட்டமும் இல்லை. 800 விக்கெட் எடுப்பேன்னு நான் கனவில்கூட நினைச்சது இல்லை. நான் முதன்முதலில் வேகப்பந்து வீச்சாளராகத்தான் கிரிக்கெட்டைத் துவக்கினேன். பின்னாடிதான் ஸ்பின் பௌலர் ஆக மாறினேன். என் வாழ்க்கையில் நிறைய நல்ல காரியங்கள் நடந் தன. இப்போதும் அவை தொடர்கின்றன!"

முரளி வித்தை!

"இந்த சாதனையை யாருக்கு சமர்ப்பணம் பண்றீங்க?"

"நான் எமோஷனலான ஆள் இல்லை. சமர்ப்பணம்கிறது பெரிய வார்த்தை. இதை யாருக்கும் நான் சமர்ப்பணம் பண்ணலை. என் மனைவி, மகன், குடும்பம், நாட்டு மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் சந்தோஷப்படுறாங்க. அவங்களை சந்ஷோஷப்படுத்தும் ஒரு விஷயத்தை செஞ்சு இருக்கேன். அவ்வளவுதான்!"

"இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே ஸ்பின் பௌலிங்கில் நல்லா அடிச்சு விளையாடுவாங்க. எந்த டீமுக்கு பௌலிங் போடுறது கஷ்டமா இருக்கும்?"

"டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய முதல் விக்கெட் ஆஸ்திரேலியாவின் மெக் டர்மேட்தான். 800-வது விக்கெட் இந்தியாவின் ப்ரக்யான் ஓஜா. என்னைப் பொறுத்தவரைக்கும் இரண்டுமே நெருக்கடி கொடுக்கிற சிறந்த அணிகள்தான். இரண்டு அணியிலுமே திறமையான, அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்காங்க. இந்தியாவுக்கு எதிராக நான் 100 விக் கெட்டுகளுக்கு மேலே எடுத்திருக்கேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரா 59 விக்கெட்டுகள் எடுத்திருக்கேன். அதனால், என்னால குறிப்பா சொல்ல முடி யலை!"

முரளி வித்தை!

"உங்கள் பௌலிங் சர்சைக்கு உள்ளானபோது எப்படி உணர்ந்தீர்கள்? யார் மீதாவது கோபம் இருக்கிறதா?"

முரளி வித்தை!

"1995-ம் வருடம் என் கிரிக்கெட் கேரியரில் மறக்க முடியாத ஆண்டு. வெறும் கண்ணால் பார்த்து நான் பந்தை எறிவதாக நடுவர்கள் குற்றம் சொன்னாங்க. ஆனால், அந்தக் குற்றச் சாட்டை பயோமெக்கானிக்கல் டெஸ்ட் மூலம் உண்மை இல்லைன்னு நிரூபித் தேன். நடுவர்கள் அவங்க வேலையைச் செய்தாங்க. நான் என் வேலையைச் செய்தேன். இதில் கோபப்பட என்ன இருக்கு?"

"இப்போ டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச்கள் அதிகமாக விளையாடப்படுவது இல்லை. ட்வென்டி/20-குத்தான் மவுசு. இன்னும் ஸ்பின் பௌலிங்குக்கு ஸ்கோப் இருக்குதா?"

"இந்த வருஷம் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பல அணிகளுக்குஸ்பின் னர்கள்தான் வெற்றியைத் தேடித் தந் தாங்க. கிரிக்கெட் இருக்குற வரைக்கும் ஸ்பின் பௌவுலிங் இருக்கும்!"

முரளி வித்தை!

"உங்க மகன் நரன் இப்பவே ஸ்பின் பௌலிங் போட ஆரம்பிச்சிட்டானே?"

"அவனுக்கு இப்போ நாலு வயசு ஆகுது. என்னைப் பார்த்து பௌலிங் போடுறான். மட்டை அடிக்கிறான். போகப் போக இதே ஆர்வம் இருக்குமான்னு தெரியலை. அவனை கிரிக்கெட் ப்ளேயர் ஆக்கணும்னு எனக்கு கனவெல்லாம் கிடையாது. அவனுக்கு எது பிடிக்குதோ, அந்தத் துறையில் வளரட்டும்!"

"உங்க பொழுதுபோக்கு என்ன?"

"எனக்கு காமெடி பிடிக்கும். லாரல்-ஹார்டி, டாம் அண்ட் ஜெர்ரி, மிஸ்டர் பீன், வடிவேலு காமெடின்னு தனித்தனியா காமெடி கலெக்ஷனே வெச்சிருக்கேன்!"

ஸ்பின் மன்னன்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளே அரிதாகிக்கொண்டு இருக்கும் இந்தக் காலத்தில் முரளியின் 800 விக்கெட் சாதனையை முறிடிக்க எவராலும் நினைத்துகூடப் பார்க்க முடியாது. ஏனெனில், முரளிக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இருக்கும் 16 ப்ளேயர்கள் ஓய்வுபெற்றுவிட்டார்கள். தற்போது விளையாடிக்கொண்டு இருக்கும் ஹர்பஜன் எடுத்த விக் கெட்டுகளின் எண்ணிக்கை 355. முரளியின் சாதனையை முறியடிக்க, உண்மையாகவே இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும்!

முரளிதரனின் அப்பா முத்தையா 1956-ம் ஆண்டு முதல் இலங்கையில் லக்கி லேண்ட் பிஸ்கட்ஸ் நிறுவனத்தை நடத்திவந்தார். 1977-ம் ஆண்டு கலவரத்தின்போது இவரது நிறுவனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 'தமிழ்நாட்டுக்குப் போய்விடலாம்' என்று பலர் சொன்னபோது, விடாப்பிடியாக அங்கேயே இருந்து நகைகளை அடகுவைத்து மீண்டும் நிறுவனம் துவக்கி இன்று வரை அதை வெற்றிகரமாக இயக்கிக்கொண்டு இருக்கிறார். 'அப்பாபோலவேமகனும் அதிக மனஉறுதிகொண்டவர். அதனால்தான் அவரால் பௌலிங் சர்ச்சைகளில் இருந்து விடுபட முடிந்தது!' என்பார்கள் அவரது நண்பர்கள்.

1995-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இவர் பந்தை எறி கிறார் என நடுவர் டேரல் ஹேர் குற்றம் சாட்டினார். இதனை முறியடிப்பதற்காக நான்கு முறை அறிவியல் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்தி, தனது நேர்மையை நிரூபித்தார். முழங்கைகளை வளைக்கவிடாத பிரேஸ் எனும் கருவியை அணிந்து, தனது வழக்கமான அதே மாயாஜால திருப்பங்களுடன் பந்து வீசி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முரளி!

முரளி வித்தை!
முரளி வித்தை!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு