Published:Updated:

மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!

மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!

பிரீமியம் ஸ்டோரி
மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!
மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!
மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!
ப.திருமாவேலன்.படம்:கே.கார்த்திகேயன்
மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!

"நீங்க உங்க பேரை எழுத வேண்டாம். எந்தக் கல்லூரியில படிக்கிறீங்க, எந்த

ஊருன்னுகூடச் சொல்ல வேண்டாம். ஆனா, மனசாட்சிக்கு விரோதம் இல்லாம உண்மையை மட்டும் எழுதினாப் போதும்!" கல்லூரி மாணவ - மாணவியர் முன்னால் நின்று சொல்கிறார் டாக்டர் வி.பழனிச்சாமி.

குழப்பத்துடன் அந்தத் தாளை வாங்கும் மாணவ - மாணவிகள் வாசிக்க ஆரம்பித்ததும் அதிர்கிறார்கள். அத்தனையும் செக்ஸ் தொடர்பான பாலியல் கேள்விகள். 'எய்ட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?' என்பதில் தொடங்கி, 'திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்திருக்கிறீர்களா?' என்பதில் முடிகின்றன கேள்விகள். "ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது மிகப் பெரிய 'ஸ்லீப்பிங் சோஷியல் பாம்' ஒன்று எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்!" என்கிறார் பழனிச்சாமி. சென்னை வானொலியின் செய்திப் பிரிவு இயக்குநரும் சென்சார் போர்டின் தற்காலிகப் பொறுப்பாளராகவும் இருக்கும் இவர், தமிழகத்தில் உள்ள 56 கல்லூரிகளுக்குச் சென்று 5,150 மாணவ - மாணவியரைச் சந்தித்து அவர்களது நடத்தை, மனோபாவங்களை ஆய்வுசெய்து வந்திருக்கிறார்.

மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வதைத் தவறு என்பவர்கள்தான் அதிகம். ஆனால், தங்களது ஆண்/பெண் நண்பர்களு

மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!

டனோ அல்லது பாலியல் தொழிலாளிகளுடனோ செக்ஸ் வைத்திருப்பது வழக்கமான செயல்தான் என்பதை 29 சதவிகிதத்தினர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலான நண்பர்களின் பேசுபொருள் செக்ஸ்தான். பெண் பிள்ளைகள் தங்களது அம்மாவிடமும் சகோதரியிடமும் இதுபற்றிப் பேசுகிறார்கள். ஆனால், பையன்கள் தனது அப்பாவிடமோ, சகோதரனிடமோ, இதுபற்றி வாயே திறப்பது இல்லையாம். திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. அதை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டியது இல்லை. அது ஒருவிதத்தில் மரியாதைக்குரியது... ஆண்மையின் அடையாளம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கு உடன்பட்டு உறவு வைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட சறுக்கல்களையும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரங்களை நம் முன் பரப்பிய பழனிச்சாமி அமைதியாகப் பேச ஆரம்பித்தார்...

மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!

"பெங்களூரில் இருக்கும் இந்திய மேலாண்மை நிறுவனத்துக்காக எய்ட்ஸ் மற்றும் விழிப்பு உணர்வு, தமிழ்ச் சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதற்கான ஆய்வாகத்தான் இதை ஆரம்பித்தேன். ஆனால், கிடைத்திருக்கும் தகவல்கள் நம்மை உடனடியாக உஷார் ஆகச் சொல்கின்றன. நமது மாணவர்களின் செக்ஸ் மனநிலை ஒரு கலக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதற்குக் காரணம் நீலப் படங்கள். தற்போதைய மாணவர்களில் நீலப் படங்கள் பார்க்காதவர்களே இல்லை என்கிற அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது. அவற்றை விற்கும் கும்பலிடமும் பேசினோம். 'முந்திலாம் பசங்க எங்ககிட்ட வந்து சி.டி. வாங்கிட்டுப் போவாங்க. ஆனா, இப்ப அவங்களே எங்களுக்கு க்ளிப்பிங்ஸ் சப்ளை பண்றாங்க. செல்போன் கேமரா, ஹேண்டி கேமரான்னு விதவிதமான வீடியோக்களைக் கொண்டுவந்து கொட்டிப் பணம் வாங்கிட்டுப் போறாங்க!' என்று ஒரு கடைக்காரர் சொன்னது ஆர்.டி.எக்ஸ் அதிர்ச்சி!

மாணவிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு சினிமா மிகப் பெரிய தூண்டுதலாக இருக்கிறது. தன்னைக் காதலிக்கும் இளைஞனுக்குத் தன்னை முழுக்க ஒப்படைப்பதுதான் காதலின் உன்னத நிலை என்று கருதுகிறார்கள். இப்படி ஒப்படைத்த பெண்கள், தங்களது தவறை உணர்ந்து எழுதியிருந்தார்கள். ஒரு மாணவன், தனது தங்கை வழி

மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!

தவறிப் போன தகவலை எழுதி மனம் வருத்தப்பட்டு இருந்தார். இவர்கள் அனைவருமே தங்களது மன வருத்தங்களைப் பகிர்ந்துகொள்ள ஆள் கிடைக்காத நிலையில் இருப்பதையே உணர முடிந்தது!

இதைப் பெற்றோர்கள் உணர்ந்து, தங்களது பிள்ளைகளை வளர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்காகச் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். பாலியல் கல்வியானது இன்று அவசியம். அனைத்துக்கும் மேலாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மனம், பாலியல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதற்கான வல்லுநர்களை நியமித்தாக வேண்டும்!" என்கிறார்.

ஓர் அபாயச் சங்கு ஊதப்பட்டுள்ளது!

மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!
மாணவர்களின் பெற்றோர்களே... உஷார்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு