பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

'விருது கிடைக்கும் அளவுக்கு ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும்' என்பது ஜெனிலியாவின் ஆசை. அதற்காக சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 'உருமி' படத்தில் களறி வீராங்கனையாக நடிக்கவிருக்கிறார். களறிப் பயிற்சியில் இப்போ ஜெனிலியா பிஸி. விருது விருது... வருது வருது!

இன்பாக்ஸ்

'ஃபயர்', 'வாட்டர்' பட புகழ் தீபா மேத்தா தயாரிப்பில் ஸ்ரேயா நடித்துள்ள படம் 'குக்கிங் வித் ஸ்டெல்லா'. தீபா மேத்தாவின் முந்தைய படங்கள்போல இதில் சர்ச்சைக் களமோ, கவர்ச்சிப் பலமோ இல்லை என்பதால் படம் போணி ஆவதில் சிக்கல். பரபர பப்ளிசிட்டிக்காக ஸ்ரேயாவின் முத்தக் காட்சிகளை இணையத்தில் உலவ விட்டிருக்கிறது மேத்தா தரப்பு. கிஸ்ஸிங் வித் ஸ்டெல்லா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மீண்டும் அஜீத் - விஜய் கூட்டணி! 'மதராசபட்டினம்' இயக்குநர் விஜய் இயக்கிய முதல் படம் அஜீத் நடித்த 'கிரீடம்'. "மதராசபட்டினம்'
மாதிரியே ஒரு ஹிஸ்டாரிக்கல் சப்ஜெக்ட் ரெடி பண்ணுங்க!" என்று விஜய்யிடம் சொல்லி இருக்கிறாராம். 'வரலாறு' ரிட்டன்ஸ்!

இன்பாக்ஸ்

"எனக்கு சென்னை ரொம்பப் பிடிக்கும். ஆனால், சென்னை ஏர்போர்ட் இப்போது மகா மட்டமாக இருக்கிறது. எப்போதுதான் இந்த நிலைமை மாறுமோ?" என்று வேதனை தெரிவித்திருப்பவர்... ஸ்ருதி ஹாசன். கோயம்பேடு பக்கமும் கொஞ்சம் வந்து போங்க!

மகாத்மா காந்தியின் அந்தரங்க வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கும் படம் 'காந்தி கி ஷாதி'. காந்தி - கஸ்தூரிபாய் இடையே யான காதலை ஆழமாக விவரிக்க இருக்கிறதாம் படம். கதர் பார்ட்டிகள் இப்போதே எதிர்ப்புக் காட்ட முஷ்டி முறுக்கித் தயாராகிவிட்டார்கள். காந்திய வழியில் போராடுங்கப்பா!

இன்பாக்ஸ்

'What the Great Ate' என்ற புத்தகம் இப்போது அமெரிக்காவில் பெஸ்ட் செல்லர். ஹாலிவுட் பிரபலங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள்தான் புத்தகம் முழுக்க. மெலிந்த உடல் அழகுக்காக, ஏஞ்சலினா ஜோலி கம்போடியாவில் இருந்து ஸ்பெஷலாக வரவழைத்துச் சாப்பிடும் உணவு என்ன தெரியுமா? கரப்பான் பூச்சி. ஐயே ச்சீ!

இன்பாக்ஸ்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் 100-வது படம் 'ஜோகய்யா'. அதில் நடிக்க ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க முன்வந்தும், 'நோ' சொல்லிவிட்டார் நயன்தாரா. பிரபுதேவாதான் அதற்குக் காரணம் என்று கடுப்பில் இருக்கிறது சிவராஜ்குமார் தரப்பு. ஹோகையா!

இன்பாக்ஸ்

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அன்னா சாப்மன் என்ற பெண்ணை நாட்டைவிட்டு வெளியேற்றியது அமெரிக்கா. இதற்கிடையில், உளவு நடவடிக்கைகளுக்காக அன்னா உலவவிட்டு இருந்த அரைகுறைப் படங்கள் ஏக பரபரப்பைக் கிளப்ப, அமெரிக்காவின் பிரபல பலான படத் தயாரிப்பு நிறுவனம், அன்னாவின் கால்ஷீட்டுக்காக லோலோவென்று அலைந்துகொண்டு இருக்கிறது. கால்ஷீட் கிடைச்சா பெட்ஷீட்தான் காஸ்ட்யூம்!

இன்பாக்ஸ்

'வம்சம்' படத்தில் நடிக்கும்போது முதல்வர் கருணாநிதி பேரன் அருள்நிதிக்கு மேக்கப் முதல் நடனம் வரை ஏகப்பட்ட டிப்ஸ்கள் அள்ளி வழங்கியிருக்கிறார் சுனைனா. குருதட்சணையாக சுனைனாவுக்கு வைர டாலர் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தாராம் அருள்நிதி. பதிலுக்கு சுனைனா இன்னாபா கொடுத்தார்?

இந்தியப் பிரபலங்களைக்கொண்டு இலங்கை சுற்றுலாத் துறையை வளப்படுத்தத் திட்டமிட்ட இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பாலிவுட் நடிகர் சல்மான் கானை வளைத்துப் போட்டார். அடுத்ததாக சச்சினுக்குக் குறிவைத்து அணுக, ஆரம்பத்திலேயே 'நோ' சொல்லி மறுத்துவிட்டாராம் மாஸ்டர் பிளாஸ்டர். வி லவ் யூ சச்சின்!

இன்பாக்ஸ்

'போராடாத மான் வாழ்ந்தது இல்லை!' என்று கர்ஜித்துச் சிறை சென்றிருக்கும் சீமான், சிறைவாச காலத்துக்குள் ஒரு புத்தகம் எழுதி முடிக்க முடிவெடுத்து இருக்கிறார். புத்தகத்தின் தலைப்பு... 'வென்றது ஆரியம்... துணை நின்றது திராவிடம்'. அதிரடி ரெடி!

இன்பாக்ஸ்

இந்தியத் தேர்தல்போல மின்னணு வாக்குப் பதிவு முறையைப் பின்பற்ற இருக்கிறார்கள் நைஜீரியாவில். அதன் பொருட்டு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் நவீன் சாவ்லாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரோ தன் பிரதிநிதியாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை அனுப்பிவைத்திருக்கிறார். 'துட்டுக்கு ஓட்டு' மேட்டரைச் சொல்லிக் கொடுத்துராதீங்க!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு