Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

வருங்காலத் தொழில்நுட்பம்

பிரீமியம் ஸ்டோரி

வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்

ன்றைய நாளில் இணைய இண்டஸ்ட்ரியில் தலைமை பீடத்தை அலங்கரிக்கும்

நிறுவனங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் இருக் குமா என்பதை அலசலாம். ஆப்பிளில் ஆரம்பிப்போம்.

ஐ-போனின் ஆன்டெனா பிரச்னைக்கு விளக்கம்அளிக்க, சென்ற வாரம் ஆப்பிள் தலைமையகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, 'ஆப்பிள் ஏன் இப்படிக் கொடிகட்டிப் பறக்கிறது?' என்பதை விளக்குவதாக அமைந்தது.

"We are not perfect. Phones aren't perfect" என்பது கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்ட ஸ்டைலில் இருந்து தொடங்கிய ஜாப்ஸ், ஐ-போன் உரிமையாளர்களுக்கு இலவச கவர் (case) ஒன்றைக் கொடுக்கிறோம்; அதைப் பயன்படுத்தினால் ஆன்டெனா பிரச்னை வராது என்ற வர், ஐ-போன் மட்டுமல்ல; ப்ளாக்பெர்ரி உள்ளிட்ட பல போன்களில் இதே பிரச்னை உண்டுதான் என்று பல போன்களில் இருந்து ஆன்டெனா பிரச்னையை டெமோ செய்துகாட்ட, ஆப்பிள் மோகிகளுக்கு மிக்க மகிழ்ச்சிதான் என்றாலும், 'உங்க பிரச்னையிலே எங்களை ஏன் சார் இழுக்கிறீங்க? இது உங்களுக்கே நல்லா இருக்கா? எங்க ஆன்டெனா டெக்னாலஜி அப்படி எல்லாம் கிடையாது!' பாணியில் ப்ளாக்பெரி தயாரிக்கும் RIM நிறுவனம் அடுத்த நாள் அறிக்கை வெளியிட வேண்டி இருந்ததைப் பார்க்கும்போது பாவமாக இருந்தது. (உரலி : http://crackberry.com/rim-official-statment-response-apples-iphone-4-antenna-propaganda)

வருங்காலத் தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்துக்கு இன்று ஐ.டி இண்டஸ்ட்ரியில் அவ்வளவு முக்கியத்துவம். அது தொடர்ந்து வேகமாகப் பணம் குவித்து வருவதை மலைப்பாகப் பார்க்கிறார்கள் ஐ.டி. இண்டஸ்ட்ரி நிபுணர்கள். பங்குச் சந்தையில் தங்களது பங்குகளை விற்றபடி இருக்கும் எந்த நிறுவனமும், தாங்கள் முந்தைய காலாண்டில் எவ்வளவு வருவாய் ஈட்டப்போகிறார்கள் என்பதை அறிவித்துவிட வேண்டும் என்பது நியதி.Earnings Estimation என்றழைக்கப்படும் இந்த வருமான எதிர்பார்ப்பு எண்ணை மிகக் கவனமாக அவ தானிப்பது வால் ஸ்டீரிட் மக்களின் முக்கியப் பணி. குறைவான வருமான எதிர்பார்ப்பை வெளியிடும் நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்களுக்கு அத்தனை நம்பிக்கை வராது. அதே நேரத்தில், பெரிய அளவில் வருமான எதிர்பார்ப்பைக் கொடுத்துவிட்டு, அதை அடைய முடியாத நிறுவனங்களின் பங்கு மதிப்பு அன்றே மட்டமாக சரியும் என்பதால், பங்குச்சந்தையில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்கள் மிகவும் கவனமாக இருக்க முயலும். ஆனால், இதிலும் ஆப்பிள் வித்தியாச மான நிறுவனம்தான். அவர்கள் கொடுக்கும் வருமான எதிர்பார்ப்பு எண் மிகச் சிறியதாகவும், ஆனால், காலாண்டு முடிந்து வெளியிடும் நிஜ வருமானம் மிகப் பெரிதாக இருப்பதையும் ஒரு வாடிக்கையாகவே செய்துவருகிறது ஆப்பிள். 2009 கடைசிக் காலாண்டில் அவர்களது வருமான எதிர்பார்ப்பு 10 பில்லியன் டாலர்கள். வரும் வாரத்தில் வெளியாகப்போகும் நிஜ வருமான அறிவிப்பு 20 பில்லியன்களைத் தாண்டலாம்.

'ஆனால், இந்தக் காலாண்டு வருமான எதிர்பார்ப்புகளைத் தாண்டி, தங்களது நிறுவனத்தைப் பிரமாண்ட வெற்றியடைய வைக்க வேண்டும் என்ற அழுத்தமே முற்றிலும் சோதனைக்கு உட்படாத தொழில்நுட்பங்களை நுகர்வோரிடம் விற்றுவிட வழிவகுக்கிறது!' என்று இ-மெயில் ஒன்றை அனுப்பியிருந்தார் திலீப் ராமச்சந்திரன். சிலிகான் வேலியில் பல டாட் நிறுவனங்களை நிறுவி நடத்தியிருக்கும் திலீப்பின் இ-மெயில், "இந்த ஆன்டெனா பிரச்னையில், அதன் முதன்மை டிசைனராகப் பணிபுரிந்த பொறியாளர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், ஆப்பிள் வருமானக் காரணங்களுக்காக வெளியிட்டு மாட்டிக்கொண்டது" என்கிறது.

மாட்டிக்கொண்டாலும், ஆப்பிள் மீண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்று நிச்சயம், 20 வருடங்களுக்குப் பின் விகடன் பொக்கிஷத்தில் இதைப் படிக்கப்போகும், நாளை பிறக்கப்போகிற மகேஸ்வரியின் 20-வது பிறந்த நாளன்றும் ஆப்பிள் இருக்கும். அவர்களது சாதனங்கள் தொடர்ந்து இணையத்தில் உருவாக்கியபடி வரும் Ecosystem இந்த நிறுவனத்தை வாழவைக்கும்.

வருங்காலத் தொழில்நுட்பம்

மற்றொரு சூப்பர் ஸ்டாரான கூகுளின் நிலைமை அத்தனை பிரகாசமானதாக இல்லை. தேடல் இயந்திர மென்பொருள் என்பதை வேறு எவருமே இதைவிட சிறப்பாக உருவாக்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், அதைத் தவிர வேறு எதையும் வியக்கத்தக்க முறையில் செய்ய முடியவில்லை என்பது கூகுளின் பெரும் குறைபாடு. புதுமைகளை முயற்சிக்க சற்றும் தளராத நிறுவனம் கூகுள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உதாரணத்துக்கு, சான்பிரான்சிஸ்கோவில் கூகுள் நடத்திய 'கூகுள் படங்கள்'பற்றிய அறிவிப்புக் கூட்டம். கூகுளைப் பயன்படுத்தும் நீங்கள் new.google.com தளத்தில் விவரங்களைத் தேடி இருக்கலாம். ஆனால், images.google.com தளத்தில் விவரங்களைத் தேடினால், வலைப்பக்கங்களுக்கு நிகராக கூகுள், தளம் தளமாகப் படங்களை தேடி, பொறுக்கி வந்து வகைப்படுத்தியிருப்பது தெரியும். ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் படங்கள் பார்க்கப்படுகின்றன என்று கூகுள் நபர் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. இது மட்டுமல்ல; கூகுள் தேடல் தளத்தைப் பல விதங்களில் நவீனமாகப் பயன்படுத்தலாம்: சிலவற்றைப் பார்ப்போம்:

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செய்ய கால்குலேட்டர் கைவசம் இல்லையா? கவலையைவிடுங்கள். new.google.com சென்று உங்களது கணக்கைக் கொடுங்கள். கூகுள் கணக்கிட்டு பதிலைத் தரும்.

சென்னையில் தலையைப் பிளக்கும் வெயில் எவ்வளவு என்றுதெரிந்து கொள்ள வேண்டுமா? 'Weather Chennai' எனத் தேடிப் பார்த்தால் போதும்.

மச்சான் இருக்கிற மஸ்கட்டில் இப்போது என்ன நேரமாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள அவருக்கு போன் செய்து எழுப்ப வேண்டியதுஇல்லை. Time Oman என்பதைத் தேடவும்.

கோயம்புத்தூரில் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஓடுகிறது என்பதைத் தெரிய 'Movies Coimbatore' என்று தேடலாம்.

இந்த விவரங்களைப் பளீரென உங்களுக்குப் பதிலாக தர கூகுள் செய்ய வேண்டிய கணினி உள்கட்டமைப்பு, தகவல் சேமிப்புத் திறன் போன்றவை மலைக்கவைத்தாலும், இதைக்கொண்டே இந்த நிறுவனம் இன்னும் 20 ஆண்டுகள் வாழ்ந்து விடுமா என்றால், சந்தேகமாக இருக்கிறது. விரைவில் வரப்போகும் Google Me சர்வீஸ் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்த்து இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் சொல்லிவிடலாம் என்று நினைக் கிறேன்.

வருங்காலத் தொழில்நுட்பம்

Last but not least - ஃபேஸ்புக்.

பரபரப்பாகப் பார்க்கப்பட்டு வரும் இந்த நிறுவனத்துக்கு இந்தக் கட்டுரை எழுதப்படும் நாளில் வெளியாகியிருக்கும் வருடாந்திர நுகர்வோர் திருப்தி ரிப்போர்ட் நறுக்கெனக் குட்டுவைத்து இருக்கிறது.ஆண்டுதோறும் வெளியாகும் இந்த ரிப்போர்ட் பல தரப்பட்ட சேவைகளை மக்கள் எப்படித் திருப்தியுடன் நுகர்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டு சொல்லும். ஏர்லைன்ஸ், டி.வி. போன்றவை தராசில் இட்டு நிறுக்கப்படும் இந்த ரிப்போர்ட்டில் இந்த வருடம் சமூக மீடியா இடம் பெற்றுள்ளது ஆச்சர்யமல்ல. 200-க்கும் மேற்பட்ட சமூக நெட்வொர்க்கிங் தளங்களைக்கொண்ட சமூக மீடியாவுக்கு 77 மதிப்பெண்களை வழங்கியிருக்கும் நுகர்வோர் ஃபேஸ்புக்குக்கு 64 மதிப்பெண்களே வழங்கியிருப்பது, 'எனக்கு உன்னைப் பிடிக்கலே. ஆனால், உன்கூடப் பழகித்தான் ஆகணும்; வேற வழியில்ல!" என்று தர்மசங்கடமாக சொல்வதாகத் தெரிகிறது.

ஃபேஸ்புக் 20 ஆண்டு காலம் வாழுமா? பதில் தெரியவில்லை!

வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
-Log off                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு