பிரீமியம் ஸ்டோரி
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகத்திடம்...

"சென்னைப் பல்கலைக்கழகச் சான்றிதழ்களும் போலியாக அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்களே?"

"நீங்கள் குறிப்பிடும் விவகாரத்தில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. வெளியில் சில விஷமிகள் அச்சடித்து விற்பதுபற்றி காவல் துறையினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, தனியார் துறைகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சமர்பிக்கப்படும் எங்கள் பல்கலைக்கழகச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய எங்களைத் தொடர்புகொள்ளலாம். சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம்!"

நடிகர் கருணாஸிடம்...

"10 லட்சம் ரூபாய் சன்மானம் என்பதால்தான் இலங்கை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அங்கு செல்வதாகச் சொல்கிறார்களே!"

"சிலர் திட்டமிட்டு எனக்கு தமிழ் உணர்வு இல்லா ததுபோலச் சித்திரிக்கிறார்கள். என்னைப்பற்றி அவதூறுகளைப் பரப்புவர்களைவிட, அதிகமான இன உணர்வு மிக்கவன் நான்!"

5 கேள்விகள்

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையனிடம்...

"வணிகர் சங்கங்களின் பேரவையில் விழுந்த விரிசலின் பின்னணி என்ன?"

"அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை எதிர்க்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எங்கள் அமைப்பில் பிளவை ஏற்படுத்த நினைக்கிறார்கள். உயர்நிலைக் குழு என்ற பேரவையிலேயே இல்லாத ஒரு குழுவைக் கூட்டி, என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால், பேரவையில் உள்ள 36 மாவட்ட அமைப்புகளில் எந்த மாவட்டமும் அவர்களை ஆதரிக்கவில்லை!"

5 கேள்விகள்

நடிகை இலியானாவிடம்...

"விக்ரமுடன் நீங்கள் 'வெடி' படத்தில் நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையா?"

"ஆமாம்.. உண்மைதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போதுதான் தமிழில் நடிக்க நேரம் கிடைத்தது. விக்ரமுடன் ஜோடி என்றதும் உடனே ஓ.கே சொல்லி விட்டேன்!"

ம.நடராஜனிடம்...

"வெளிநாட்டுக் காரினை இறக்குமதி செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. உங்கள் அடுத்த நடவடிக்கை என்ன?"

"அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வேண்டும் என்றே இப்படி ஒரு வழக்கு எங்கள் மீது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேல் முறையீடு செய்து நாங்கள் நிரபராதி என நிருபிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!"

5 கேள்விகள்
5 கேள்விகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு