பிரீமியம் ஸ்டோரி
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

எந்தப் புத்தகமும் வாசிக்க! new.readanybook.com

விகடன் வரவேற்பறை

ஆங்கில நாவல்களை அறிமுகப்படுத்தும் அருமையான தளம். ஹாரிபாட்டர், அல்கெமிஸ்ட், டாவின் சி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் என உலகப் புகழ்பெற்ற அறிவியல், புனைவு நாவல்கள் இங்கே வரிசைப் படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு கிளிக் செய்து படிக்க ஆரம்பித்து விடலாம். இதுபோக ஜெஃப்ரி ஆர்ச்சர் போன்ற புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் படைப்புகள் நூலகம் போல தனித்தனியாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது. பக்கம் பக்கமாக, பெரிய எழுத்துக்களில் படிக்க முடிவதால், அலுப்பு தட்டுவதுஇல்லை!

சென்னையின் கதை (1921),நூல் ஆசிரியர்: கிளின் பார்லோ,தமிழில்: ப்ரியாராஜ்,
வெளியீட்டாளர்: சந்தியா பதிப்பகம், 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83.

விகடன் வரவேற்பறை

'கிழக்கிந்திய கம்பெனி'யின் வலிமையான இந்திய வியாபார ஸ்தலம், சென்னை. அவர்கள் துணி சார்ந்த வியாபாரத்தில் அதிகக் கவனம் செலுத்தியதால், துணிகளைத் துவைத்து அழுக்கு நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட இடம்தான் வண்ணாரப்பேட்டை. உலகம் முழுக்க வியாபாரத்தில் ஜொலித்த யூதர்கள் சென்னையில் வியாபாரம் செய்த செட்டியார்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தோல்வியுடன் திரும்பிப்போனார்கள். சென்னையின் உருவாக்கம்பற்றிய வரலாற்றுத் தகவல்களைக் கொண்
டது என்ற அடிப்படையில் இந்நூல் முக்கியத்துவம் வாய்ந்தது!

தேவை ஒரு தாகம் இயக்கம்: என்.ரங்கராஜ்

விகடன் வரவேற்பறை

மூன்று சக்கர வண்டியைத் தாகத்தோடு அழுத்தி அலையும் முதியவரின் கால்களில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. மொத்தம் மூன்றே நிமிடங்கள்தான் படம். பாக்கெட் தண்ணீர் வாங்கிக் குடித்த பின்னும் தாகம் தணியாத நிலையில் நிழல் தேடி அலைகிறார் அந்தப் பெரியவர். ஒதுங்க ஒரு மரம் இல்லாத வெட்டவெளியில் துவண்டு விழுகிறார். அந்த மூன்று சக்கர வண்டியில் மரக்கட்டைகள் லோடு இருப்பதைக் காட்டுவதோடு படம் முடிகிறது. இருக்கும் மரங்களைக் காப்பாற்ற, புதிய மரங்களை வளர்க்கத் தேவை ஒரு தாகம் என்று செய்தி சொல்கிறார்கள்!

நான் மகான் அல்ல, இசை: யுவன்ஷங்கர் ராஜா வெளியீடு: திங்க் மியூஸிக் விலை: ரூ.99/-

விகடன் வரவேற்பறை

அன்பும் அரவணைப்புமாகத் தழுவும் பாசப் பாடல் 'வா வா நிலவைப் புடிச்சுத் தரவா?' தென்றல் வசீகரம். 'கூட வந்து நீ நிற்பதும், கூடு விட்டு நான் செல்வதும்', 'பாதி மட்டும் சொல்வதும்... மீதி நெஞ்சிலே என்பதும்' என யுகபாரதியின் ஹைக்கூ வரிகளுக்கு டிஸ்கொதே சாயல் இசை இதமாக இணைகிறது 'இறகைப் போலே' பாடலில். யுவனின் குரலில் எக்ஸ்ட்ரா மின்சாரம். காதல் மொழிகளுடன் காற்றில் கலக்கும் 'ஒரு மாலை நேரம் வந்தது' பாடல் பழகிய, அழகிய மெலடி. 'தெய்வம் இல்லை எனும்போது' என்று மது பாலகிருஷ்ணன் குரல் உருகும்போது மெஸ்மரிச மென்மை!

வழக்கமான இளமைத் துள்ளல் இல்லாத பரிசோதனைப் பரிணாமம் காட்டும் யுவன் இசை!

தமிழறிஞர்கள் new.kalapathy.blogspot.com

விகடன் வரவேற்பறை

பண்டைய தமிழ் அறிஞர்களான பரிதிமாற்கலைஞர், சிங்காரவேலர், ம.லெ.தங்கப்பா, அ.சிவலிங்கம் போன்ற பல தமிழ் அறிஞர்கள் குறித்த விரிவான அறிமுகங்களும் அவர்களது பணிகள் குறித்த விளக்கக் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கன. குறிப்பாக, 'வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் தமிழ் மீதுள்ள பற்றினால் 'பரிதிமாற்கலைஞர்' என்று பெயரை மாற்றிக்கொண்டார் என்பது தவறு, அவர் தனிப்பாசுரத்தொகை என்னும் ஒரே ஒரு நூலில் மட்டுமே அந்தப் புனைபெயரைப் பயன்படுத்தினார்' என்ற தகவல் புதியது. நமது வேர்களைக் குறித்து விரிவாக ஆராய உதவும் வலைப்பூ.

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு