Published:Updated:

ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!

ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!

பிரீமியம் ஸ்டோரி
ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!
ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!
ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!
ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!
ம.கா.செந்தில்குமார்,படங்கள்:உசேன்
ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!

நான் ஃபிரான்ஸில் வசிக்கிற தமிழன். ஒரு தடவை கலை நிகழ்ச்சிக்காக நமீதா

ஃபிரான்ஸ் வந்திருந்தாங்க. 'பிரபல நடிகை'ன்னு எந்தப் பந்தா வும் இல்லாம ரொம்ப இயல்பாப் பழகினாங்க நமீதா. நிகழ்ச்சி நேரம் முடிஞ்ச பிறகும் ஜாலியா அரட்டை அடிச்சுட்டு இருந்தாங்க. அப்ப இருந்து நமீதாவைப்பத்தி இருந்த 'கிளாமர் டால்' இமேஜ் சுத்தமா அழிஞ்சது. அந்தச் சமயம் எனக்குப் பிறந்த இரண்டாவது பெண் குழந்தைக்கு 'நிமேதா'ன்னு பேர் வெச்சேன். இப்ப நான் பாண்டிச்சேரி வந்தி ருக்கேன். ஆகஸ்ட் ஒண்ணாம் தேதி நிமேதா வுக்கு இரண்டாவது பிறந்தநாள். அதை நண்பர்களோடு கொண்டாடத் திட்டம். அப்போ நமீதா வந்து நிமேதாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவோம். இந்த என் ஆசையை விகடன் நிறைவேற்றிவைக்குமா?"- இவ்வாறாக விகடன் அலுவலகத்தைத் தொடர்புகொண்டார் குகானந்த்.

ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!
ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!

நமீயிடம் தொடர்புகொண்டு விவரம் சொல்லி யதும் "மச்சான், தப்பா நினைச்சுக்காதே. பாரீஸ் குகானந்த்னு எனக்கு யாரும் நினைவில் இல்லை. ஆனா, என் மேல இவ்வளவு அன்பும், ரெஸ்பெக்ட்டும் வெச்சிருக்குற அவருக்கு நிச்சயம் நானும் ரெஸ்பெக்ட் செய்யுது. பாண்டிச்சேரி கிளம்புது!" என்று சொல்லி ஆச்சர்யப்படவைத்தார் நமீதா. தகவல் சொன்னதும், "நிஜமாவா சொல்றீங்க?" என்று திரில் ஆகி விட்டார் குகா.

மாலை 6 மணிக்கு பாண்டிச்சேரி அடைந்து காரில் இருந்து இறங்கி யதும் ஓடோடி வந்து தடபுடலாக நமீதாவை வரவேற்றது குகானந்த் குடும்பம். "ஓ! நீங்களா அது? இப்போ எனக்கு ரிமம்பர். எனிவே, கங்கிராட்ஸ்!" என்று பொக்கேவைப் பெற்றுக்கொண்டு, புன்ன கைப் பூங்கொத்து வீசினார் நமீ.

"இவர் என் நண்பர் சிவசித்தானந்த குமரன். பாண்டிச்சேரிக்காரர். இவரும் நானும் சேர்ந்துதான் ஃபிரான்ஸில் ஜெனரல் ஸ்டோர்ஸ் நடத்தி வருகிறோம். இது என் மனைவி கௌசிகா. அது என் முதல் குழந்தை கிருத்திகா!" என்று நீண்ட அறிமுகப்படலத்தை ஆரம்பித்தார் குகானந்த். இரு கைகளையும் கூப்பி பாரபட்சமின்றி "எல்லோருக்கும் வணக்கம்!" என்றார் நமீதா. 'நீ என்ன செய்யுது?', 'ஃபிரான்ஸ்ல வீடு எங்கே இருக்குது?' என்ற 'நமீங்கில தமிழின்' ஒவ்வொரு வார்த்தைக்கும் ரசித்துச் சிரித்துக் குமித்தனர்.

கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த 'பார்ட்டி ஹாலுக்கு' நகர்ந்தார்கள் விருந்தினர்கள். 'பார்ட்டி டிரெஸ்' மாற்றச் சென்ற நமீதா, பிறந்தநாள் பாப்பாவைவிடக் குட்டியாக ஆடை அணிந்து வந்து நின்றார். அறைக்குள் நமீ என்ட்ரி கொடுக்கவும், 'டப்பு டுப்பு' என்று வண்ண வண்ணக் காகிதங்கள் வெடித்துச் சிதற... ஹால் முழுவதும் ஜிகினாக் காகித மழை.

ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!

அம்மாவிடம் இருந்த குழந்தை நிமேதா, நமீதாவின் கைக்கு மாறியது. பின்னணியில், 'ஹேப்பி பர்த் டே டு யூ' ஒலிக்க... பாரிஸ் ஈஃபில் டவர் வடிவில் இருந்த பிறந்த நாள் கேக்கை நிமேதாவின் கையைப் பிடித்து நமீயே வெட்ட... குகானந்த் குடும்பத்தினரின் முகங்களில் மகிழ்ச்சிப் பிரகாசம். "எனக்கு மோதிரம்னா ரொம்பவே பிடிக்கும். நமீ லைக்... நிமேதாவும் லைக்தானே! அதனால இந்த மோதிரம் நிமேதாவுக்காக!" என்று குட்டி தங்க மோதிரம் ஒன்றை நிமேதாவுக்கு அணிவித்தார் நமீ. "ம்ஹ்ம்!" என்று மறுத்த நிமேதா, வேகமாகத் தன்னை விடுவித்துக்கொண்டு கேக்கில் இருந்து கொஞ்சம் க்ரீமைக் கைகளால் எடுத்து நமீதாவுக்கு ஊட்டுவதற்கு வந்தாள். "ஹைய்யோ செல்லம்... ஸோ க்யூட்!" என்று கண்கள் மின்ன நிமேதாவைத் தூக்கி அணைத்து முத்த மழை பொழிந்தார் நமீதா. மழலைக் குரலில் நிமேதா ஏதேதோ சொல்ல... மடியில் அமரவைத்துக்கொண்டு அதைக் கேட்டு ரசித்து மகிழத் துவங்கிவிட்டார்.

பரிசளிப்பு, போட்டோக்கள், உணவு உபசரிப்பு முடிந்து, குகானந்த் குடும்பத்தினரிடம் ரிலாக்ஸாக "நான் நடிச்ச படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படம் எது?" என்று கேட்டார் நமீதா.

'எங்கள் அண்ணா'வில் ஆரம்பித்து, 'பில்லா' வரை பட்டியலிடத் தொடங்கினார் குகானந்த்.

"ஓ... ஓ.கே. நீங்களும் என் மச்சான்களில் ஒருத்தர்தான். என் எல்லாப் படங்களையும் பார்த்திருக் கீங்க. ரொம்ப ரொம்ப ஹாப்பி. கலைஞர் சார் ரைட்டிங்ல 'இளைஞன்' படத்தில் நான் ஒரு நெகடிவ் கேரக்டர் பண்ணி இருக்கு. பாருங்க... ஆனா, ரியல் லைஃப்ல நான் வில்லி கிடையாதுன்னு இப்போ உங்களுக்கே தெரியும்" என்று நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறார் நமீ.

ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!

"நீங்க திரும்ப ஃபிரான்ஸ் வந்தா, நிச்சயம் எங்க வீட்டுக்கு வரணும்!" என்று குகானந்த் அழைப்பு விடுக்க... "கண்டிப்பா மச்சான். நிமேதா கல்யாணத்துக் குக் கூப்பிடுங்க. அது வரை என்னை ஞாபகம் வெச்சிருப்பீங்கதானே!?" என்று அட்டகாசச் சிரிப்புடன் டாட்டா காட்டி விடைபெற்றார். குகானந்த் குடும்பத் தினர் முகங்களில் திருப்தியான மன நிறைவு!

ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!
ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!
ஆசை : நிமேதா வீட்டில் நமீதா!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு