Published:Updated:

சாய்னாசின் இரண்டு கனவுகள்!

சாய்னாசின் இரண்டு கனவுகள்!

பிரீமியம் ஸ்டோரி

சாய்னாவின் இரண்டு கனவுகள்!
சாய்னாசின் இரண்டு கனவுகள்!
சாய்னாசின் இரண்டு கனவுகள்!
சார்லஸ்
சாய்னாசின் இரண்டு கனவுகள்!

வெற்றிகளில் மட்டுமல்ல... விருதுகளி லும் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் சாய்னா

நெஹ்வால். ஒரு வருட இடைவெளியில் அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா என இந்தியாவின் முக்கியமான மூன்று விருதுகளை சாய்னா அள்ளி இருப்பது... ஆச்சர்ய அதிசயம். ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் பேட்மிட்டன் அகாடமியில் உலகக் கோப்பைப் போட்டிகளுக்காக கடுமை யான பயிற்சியில் இருந்த சாய்னாவிடம் பேசிய தில் இருந்து...

"வாழ்த்துக்கள்... உலகத் தர வரிசையில் இரண்டாவது இடம். வெற்றிகளும் விருதுகளும் உங்களைத் தொடர்கின்றனவே... இதற்கு யார் காரணம்?"

சாய்னாசின் இரண்டு கனவுகள்!

"என் அப்பா ஹர்வீர் சிங் ஒரு பேட்மிட்டன் ப்ளேயர். அதனால் எனக்கும் சிறு வயதிலேயே பேட்மிட்டன் ஆர்வம். நானி பிரசாத் என்னும் பயிற்சியாளரிடம் என்னைச் சேர்த்துவிட்டார் அப்பா. எங்கள் வீட்டில் இருந்து பயிற்சி மையம் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து, அங்கே என்னைக் கூட்டிச் செல்வார். பயிற்சி முடிந்ததும் திரும்பக் கூட்டி வருவார். சாப்பிட்டதும் என்னைப் பள்ளி யில் விட்டுவிட்டு, அவருடைய அலுவலகத்துக்குக் கிளம்புவார். அவர் மத்திய அரசின் எண்ணெய் வித்துக்கள் துறையில் பயிர் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார். பதவி உயர்வு வேண்டும் என்றால் வேறு மாநிலத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆக வேண்டும். என்னுடைய எதிர்காலத்தை மனதில்வைத்துப் பதவி உயர்வுகளைத் தியாகம் செய்தார். இந்த வெற்றிகள் முழுக்க முழுக்க என் அப்பாவின் உழைப்பால் எனக்குக் கிடைத் தவை. இதை நான் என் அப்பாவுக்குச் சமர்ப் பிக்கிறேன்!"

"ஒரு வருட இடைவெளியில் நாட்டின் மூன்று உயரிய விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள். இதை எதிர்பார்த்தீர்களா?"

"இப்போதுதான் அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகள் கிடைத்தன என்பதால், 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் எந்தப் போட்டியும் இல்லாமல் இந்த விருதுக்குத் தனி ஆளாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன் என்பதைக் கேட்டபோது சந்தோஷமாக இருந் தது. நிச்சயம் இந்த விருதுக்குத் தகுதியானவளாக இருக்க வேண்டும். நான் தொடர்ந்து வெற்றிகள் பெற முயற்சி செய்வேன்!"

"இப்போது இளைஞர்களுக்கு பேட்மிட்டன் விளையாட்டின் மேல் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இதைத் தூண்டியது நீங்கள்தானே?"

"நான் மட்டுமல்ல; என் சீனியர்கள் பிரகாஷ் படுகோன், புலேலோ கோபிசந்த் என இதன் பின்னணியில் பலர் இருக்கிறார்கள். இப்போது 'பேட்மிட்டன் ப்ளேயர் ஆக வேண்டும்' என்று நிறையப் பேர் பயிற்சியில் சேர்கிறார்கள். பேட்மிட்டன் போட்டிகளைப் பார்ப்பதற்கும் நிறையக் கூட்டம் வர ஆரம்பித்திருக்கிறது. கிரிக்கெட் போலவே மற்ற விளையாட் டுக்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம்!"

சாய்னாசின் இரண்டு கனவுகள்!

"எப்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக வருவீர்கள்?"

"இப்போது முதல் இடத்தில் 'யிஹான் வாங்' என்னும் சீன வீராங்கனை இருக்கிறார். சீனாவில் எங்கே பார்த்தாலும் பேட்மிட்டன் பயிற்சி மையங்கள் இருக்கும். அங்கே சிறு வயதில்இருந்தே ஒலிம்பிக்கைக் குறிவைத்து பேட்மிட் டன் சாம்பியன்களை உருவாக்குகிறார்கள். தங்கப் பதக்கம் பெற்ற பல உலக சாம்பியன்கள், அங்கே கோச் ஆக இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னொரு பலமும் உண்டு. அவர்களின் உடல்

சாய்னாசின் இரண்டு கனவுகள்!

உறுதி அபாரமானது. கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடுவார்கள். யிஹானோடு போட்டி போடத்தான் நான் தயாராகிக்கொண்டு இருக்கிறேன். வர இருக்கும் உலகக் கோப்பைப் போட்டி யில் நல்ல செய்தி சொல்ல முயற்சிக் கிறேன்!"

"சாய்னாவின் கனவு?"

"இரண்டு கனவுகள் இருக்கின்றன. இப்போது ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். படிப்பை நல்லபடியாக முடிக்க வேண்டும். இன்னொன்று, 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வுக்காக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும்!"

சாய்னாசின் இரண்டு கனவுகள்!
சாய்னாசின் இரண்டு கனவுகள்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு