பிரீமியம் ஸ்டோரி
எட்எட்டு!
எட்எட்டு!
எட்எட்டு!
விகடன் டீம்
எட்எட்டு!

சென்ற இடம்

செழியன்,ஒளிப்பதிவாளர்

எட்எட்டு!

"சகமனிதனைக் கவனிக்க நேரம் இல்லாமல் பரபரக்கும் நகரத்தின் இரைச்சலில் இருந்து விடுபட்டு, சமீபத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோக மையம் சென்றிருந்தேன். அங்கு நடக்கும் பாவ ஸ்பந்தனா எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கே இருந்த துறவிகள், குழந்தைகள், தன்னார்வத் தொண்டர்கள் என ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் கற்றுக்கொள்ள ஆச்சர்யமான விஷயங்கள் இருந்தன. அன்பு, ஒழுங்கு, நேரம் தவறாமை, சுற்றுச்சூழல் பராமரிப்பு, உடலினைப் பேணுதல், உணவுப் பழக்கம் என ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இயங்கும் பல புதிய மனிதர்களைச் சந்தித்தேன்!"

வாங்கிய பொருள்

எட்எட்டு!

சமந்தா, நடிகை

"நான் ஒரு பெர்ஃப்யூம் பிரியை. எங்கே போய் வந்தாலும் என் டிராவல் பேக்ல புதுசா ஒரு பெர்ஃப்யூம் இருக்கும். இப்போ சென்னையில் சீ.ஷி.லி-னு ஒரு பெர்ஃப்யூம் வாங்கினேன். பென்டாஸ்டிக்!"

பார்த்த படம்

எட்எட்டு!

சமுத்திரக்கனி இயக்குநர்

"அகிரா குரோசோவாவின் 'ட்ரீம்ஸ்' இப்போதுதான் பார்த்தேன். 'இப்படி வாழணும், இப்படி எல்லாம் இருக்கணும்'னு எல்லாருக்கும் இருக்கும் கனவுகளைப்பற்றிய படம். ஐந்து வகையான கனவுகளைக்கொண்ட ஐந்து சிறுகதைகளை ஒண்ணு சேர்த்துப் படமா பண்ணி இருக்கார். திரைக்கதை இப்பவும் ரொம்பப் புதுசா இருந்தது. அதில் ஒரு கதையில் ஓவியர் வான்காவைப் பற்றியும் வரும். குறிப்பாக வான்கா பகுதி என்னை ரொம்பவும் பாதித்தது!"

கேட்ட இசை

ரம்யா,நிகழ்ச்சித் தொகுப்பாளர்

எட்எட்டு!

" 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வரும் 'அழகாய் பூக்குதே' பாட்டுதான் என் ஆல்டைம் ஃபேவரைட். இதுதான் என் காலர் டியூன். என் கார்ல எப்பவும் இந்தப் பாட்டுதான் ஒலிக்கும். பாடல் வரிகளும் பிரமாதமா இருக்கும். சமீபத்தில் அப்பா-அம்மாவுடன் காரில் திருப்பதி போகும்போது 'அழகாய் பூக்குதே' மறுபடியும் மறுபடியும் காரில் பாடிட்டே இருந்தது. 'சி.டி-யே தேய்ஞ்சு போயிருக்குன்னு அம்மா கிண்டல் பண்ணாங்க!"

சந்தித்த நபர்

யுவராஜ்,இளைஞர் காங்கிரஸ் தமிழக தலைவர்

எட்எட்டு!

"சமீபத்தில் டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்தேன். ஒன்றரை மணி நேரம் என்னுடன் தனியாகப் பேசிக்கொண்டு இருந்தார். தமிழ்நாட்டு அரசியல் நிலவரத்தை என்னை முந்திக்கொண்டு அவர் சொல்கிறார். இங்கு எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது. எந்தெந்த மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கிறது என்பதைப்பற்றிகூட தெளிவாகப் பேசுகிறார். ராகுல் காந்தி தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், இங்கு அவருக்கு வலுவான நெட்வொர்க் இருக்கிறது!"

பாதித்த சம்பவம்

சுகிர்தராணி கவிஞர்

எட்எட்டு!

"விருதுநகர் மாவட்டம் வா.புதுப்பட்டி கிராமத்தில் இரு தலித் பிரிவினருக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்த பகை இப்போது ஒரு கொலையில் முடிந்திருக்கிறது. அந்த ஊரைப் பொறுத்தவரை கல்வி, பொருளாதாரம் இரண்டிலும் மேற்சொன்ன இரு தலித் பிரிவினரும் சமமாக இல்லை. இதுதான் அடிப்படையான பின்னணி. இங்கு தலித் அரசியலைப் பேசும் அரசியல் கட்சிகள் இந்த வேறுபாடுகளை நீக்க எந்தக் காலத்திலும் முயற்சித்ததே இல்லை. தலித்களை ஒருங்கிணைக்காமல், பூசல்களை அதிகப்படுத்தி தங்களது ஓட்டுக் கட்சி அரசியல் லாபங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதுதான் வேதனை!"

படித்த புத்தகம்

பவா செல்லதுரை எழுத்தாளர்.

எட்எட்டு!

"மசானபு அபுகோகா எழுதி தமிழில் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு பல பதிப்புகள் கண்ட புத்தகம் சமீபத்திய என் வாசிப்பில் முக்கியம் எனக் கருதுகிறேன். சமீப நாட்களில் வாசிப்பையும் எழுத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முழு நேரமும் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் என் ஜீவனைப் பற்றி இழுத்த புத்தகம். வாழ்வின் ஒரு பகுதியை இன்னொன்றில் இருந்து தனியே பிரிக்க முடியாது என்பதை அபுகோகாவும் புரிந்திருக்கிறார். நாம் நம் உணவுப் பயிர்களை வளர்க்கும் முறையை மாற்றும்போது, நமது உணவுப் பழகத்தையும், நம் சமூகத்தையும் மாற்றுகிறோம். அதன் மூலம் நமது மதிப்பீடுகளும் மாறுகின்றன என சங்கிலித் தொடராக ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு நம்மைக் கடத்திச் செல்கிறது ஒற்றை வைக்கோல் புரட்சி. 'எதுவுமே செய்யத் தேவை இல்லை' என இந்தப் புத்தகம் முன்வைக்கும் வேளாண்மை முறை, முதல் வாசிப்பில் அதிர்ச்சிப்படுத்தும். ஆனால், இறுதியில் 'காட்டு புஷ்பங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதும் இல்லை' என்ற பைபிளின் புகழ்பெற்ற வரிகள் நம்மைக் கொண்டுசெல்லும்!"

கலந்துகொண்ட நிகழ்ச்சி

சின்னப்பொண்ணு ,நாட்டுப்புறப் பாடகி

எட்எட்டு!

"திருவிழா மேடைகளில் கச்சேரி பண்ணிட்டு இருந்த நான் சினிமாவில் பாட ஆரம்பிச்ச பிறகு பிரபலம் ஆகிவிட்டேன். அன்னிக்கு பிச்சாவரம் பக்கத்தில் 'முழுக்குத் துறை'ங்கிற மீனவர் கிராமத்தில் கச்சேரி. கடற்கரை ஓரமா மேடை போட்டு இருந்தாங்க. ஊருக்குள்ளே பார்த்தா எண்ணுற அளவுலதான் வீடுகள் இருந்துச்சு. ஆனா, கச்சேரி ஆரம்பிக்கிறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திமுதிமுன்னு அவ்வளவு கூட்டம் வந்துட்டாங்க. 'நாக்கமுக்க பாடுங்க, ரீக ரீக பாடுங்க'ன்னு ஆளாளுக்கு விருப்பப் பாடல் கேட்டுக் கேட்டுப் பாடவெச்சாங்க!"

எட்எட்டு!
எட்எட்டு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு