பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

அஜீத் - விஜய் இருவரின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்க இருக்கிறார் தயாநிதி அழகிரி. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத். லிங்குசாமி இயக்கத்தில் விஜய். அப்பாவை ஒரு படத்துல நடிக்கவைங்க நண்பா!

இன்பாக்ஸ்

அனில் கும்ப்ளேவும் முத்தையா முரளிதரனும் இணைந்து ஸ்பின் பௌலிங் பயிற்சி அகாடமியை ஆரம்பிக்க இருக்கிறார்கள். பெங்களூரில் ஆரம்பிக்கலாம் என்பது கும்ப்ளேவின் விருப்பம். 'பேஸ் ஃபவுண்டேஷன்'போல சென்னையிலேயே அகாடமி இருந்தால், இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறாராம் முரளி. சேர்ந்து சுழட்டுங்க!

இன்பாக்ஸ்

ஓவியங்கள் வரையும் பழக்கம்கொண்ட ஸ்ரீதேவி, மைக்கேல் ஜாக்சனை ஓவியமாகத் தீட்டியிருக்கிறாராம். அந்த ஓவியத்தைத் தனது தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் ஏலம் விட வேண்டும் என்று ஸ்ரீதேவிக்கு அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம் சல்மான் கான். ஓர் ஓவியமே... ஓவியம் வரைகிறதே... அடடே, ஆச்சர்யக்குறி!

இன்பாக்ஸ்

சரியான நேரத்துக்கு வந்து அலுவல்களை முடிக்கும் மத்திய அமைச்சர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். மம்தா பானர்ஜி, மு.க.அழகிரிக்கு அந்தப் பட்டியலில் கடைசி இடம். அவர், வேலை பார்த்தா... பிராப்ளம். இவர், வேலை பார்க்கலைன்னு... பிராப்ளம்!

இன்பாக்ஸ்

அனில் அம்பானி செய்திச் சேனல், வாரப் பத்திரிகை இரண்டையும் ஆரம்பிக்க இருக்கிறார். முதல் ஆளாக 'இந்தியா டுடே' ஆசிரியர் பிரபு சாவ்லாவை வளைத்துப் போட்டு இருக்கிறார். அம்பானி டுடே!

இன்பாக்ஸ்

இந்தி மார்க்கெட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் பரபரப்புப் பேட்டிகளைக் கொடுக்க வேண்டும் என்கிற சீனியர்களின் அட்வைஸ்படி, 'எனக்குத் திருமணம் நடந்தால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும். அசின் இலங்கை போனது தவறு' எனக் கொளுத்திப்போட ஆரம்பித்திருக்கிறார் த்ரிஷா. பிக்கப் பண்ணும்மா!

இன்பாக்ஸ்

இந்திய கிரிக்கெட்டின் ஸ்பீடு பௌலர் ஜாகீர் கானுக்குச் சீக்கிரமே டும், டும், டும். முன்னாள் காதலி இஷா ஷெர்வானியையே மணக்க இருக்கிறார். மூன்று வருடக் காதல் கம் லிவிங் டுகெதர் உறவுக்குப் பிறகு, கருத்து வேறுபாட்டால் பிரிந்த இந்த ஜோடி, இறுதியாக இணைந்துவிட்டது. காதல், ஊடல், கூடல்!

இன்பாக்ஸ்

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்தியப் புகழ் பரப்பும் பிராண்ட் அம்பாஸடராகவே மாறிவிட்டார் மல்லிகா ஷெராவத். ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் ஃபீல்டு மார்ஷலாகக் கொடி பிடிப்பது மல்லிதான். நம்ம ஊரு மல்லிடோய்!

எழுத்தாளர் ராஜேஷ்குமார் விரைவில் கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகலாம். உலக எழுத்தாளர்களிலேயே அதிகமாக, சுமார் 1,650-க்கும் அதிகமான நாவல்களை எழுதியவர் என்ற சாதனையை கின்னஸ் நிறுவனம் பரிசீலனையில் வைத்திருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, 'வாசகர்களின் விருப்பத்தையும் தேவையையும் அறிந்து, அதிக அளவில் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் சிலரே! அவர்களில் முக்கியமாக, ராஜேஷ்குமார் என்னும் தமிழ் எழுத்தாளர் 1,500-க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்களை எழுதியுள்ளார். ஆனால், 904 புத்தகங்களை எழுதிய கத்லீன் லிண்ட்ஸே பெயர்தான் கின்னஸ் புத்தகத்தில் காணப்படுகிறது!' என்று குறிப்பிட்டுள்ளது. வாழ்த்துக்கள் எழுத்தாளரே!

கேரள சினிமா தொடர்ந்து நஷ்டத்தில் தள்ளாடுகிறது. விளைவு, கடந்த 10 வருடங்களில் மட்டும் குறைந்தது 100 தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களாகவும் திருமண மண்டபங்களாகவும் உருமாறி இருக்கின்றனவாம். இந்தப் பிரச்னையையே தீம் லைனாக வைத்து 'டாக்கீஸ்' என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. தியேட்டர் ஓனராக நடிக்கிறார் மோகன்லால். பிடிச்சு பிக்-அப் பண்ணுங்க சேட்டா!

இன்பாக்ஸ்

"தி.மு.க. ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதற்காக ஒரு வருடத்துக்கு வட்டி மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் கட்ட வேண்டும். ஒரு நாளைக்கு 20 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டும். கருணாநிதியால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது" என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். கேப்டன் வாசனை அடிக்குதே!

இன்பாக்ஸ்

பிரபல வலைதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள ஏற்ற ஜோடி, நடிகை வித்யா பாலன் என்று பலர் வாக்களித்து இருக்கிறார்கள். "ராகுல் போலவே எனக்கும் இப்போது திருமண ஆசை இல்லை. பிறகு ஏன் இந்த கருத்துக்கணிப்பு?" என்று பூரிப்பில் இருக்கிறார் வித்யா. எனி ஐடியா பேபி?

இன்பாக்ஸ்

கேன்சர் நோயால் மனைவி ஜேன் இறந்த சோகத்தில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக்ராத்துக்கு விரைவில் இரண்டாம் திருமணம். சாரா லியோனர்டி என்னும் இத்தாலியப் பெண்ணை மணக்க இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு, முன்னாள் மனைவியின் பெயரில் மெக்ராத் நடத்திவரும் புற்றுநோய் விழிப்பு உணர்வுத் தொண்டு நிறுவனத்தை சாராவே கவனித்துக்கொள்வாராம். நல்ல விஷயம்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு