பிரீமியம் ஸ்டோரி
நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
ரைட்டர்
படங்கள்:ராஜசேகரன்,கார்த்திக்,செந்தில்குமார்,தனசேகரன்
நோட்டீஸ் போர்டு!

ஹார்லிக்ஸ் குஸ்தி!

நோட்டீஸ் போர்டு!

'தி.மு.க. சார்பில் ஆண்டிபட்டி மருத்துவ முகாமில் வழங்கப்பட்ட ஹார் லிக்ஸ் பாட்டில்கள் சோழவந்தான் அருகே ஹார்லிக்ஸ் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி, அதில் இருந்து திருடப்பட்டவை!' என்ற ஜெயலலிதாவின் அதிரடிக்கு கலைஞரிடம் இருந்து அறிக்கையோ, கவிதையோ வரும் எனப் பார்த்தால் அழகிரியிடம் இருந்து சீற்றமாக வந்தது பதில். தூத்துக்குடி விழா வில் பேசிய அழகிரி, "ஆண்டிபட்டியில் நாங்கள் கொடுத்த அத்தனை ஹார் லிக்ஸ் பாட்டில்களும் தேனியில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவருடைய கடையில் இருந்து வாங்கப்பட்டவை. இதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. லாரியை நிறுத்தித் திருடினோம் என ஒரு கேவலமான குற்றச்சாட்டை ஜெய லலிதா சொல்கிறார். சொன்ன பொய்யை ஜெயலலிதாவால் நிரூபிக்க முடி யுமா? மேடையில் நேருக்கு நேர் சந்திக்கத் தயாரா?" என்று உறுமிப் பொருமிஇருக்கிறார் அழகிரி!

வேட்டைய மஹாராஜா!

நோட்டீஸ் போர்டு!

வன்னியர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பாக தமிழகம் முழுக்கக் கண்டனப் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் கடந்த 28-ம் தேதி நடந்தது. அதில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் தாரமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. கண்ணையன் நடத்திய பேரணி காமெடியின் உச்சம். தலையில் கிரீடம், மன்னர் காலத்து உடை, இடுப்பில் ஒரு வாள், கையில் ஒரு நாய் என சந்திரமுகி வேட்டையன் கெட்-அப்பில் ஸ்கார்பியோ காரில் வந்து இறங்கினார் கண்ணையன். அரசர் வந்துவிட்ட உற்சாகத்தில் கட்சிக்காரர்கள் பட்டாசைக் கொளுத்திப் போட, எம்.எல்.ஏ. கையில் பிடித்திருந்த நாய் கயிற்றைப் பிடுங்கிக்கொண்டு எடுத்தது ஓட்டம். பக்கத்திலேயே அலங்கரிக்கப்பட்ட குதிரை தயாராக நின்றது. அதில் ஏறும் முன்பு கட்சிக்காரர்களை அழைத்த கண்ணையன், "குதிரையில ஏறினதும் எவனாச்சும் ஆர்வக் கோளாறுல வெடி வெச்சுடப் போறான். நாய் ஓடினா, பரவாயில்லை... குதிரை ஓடினா... நான் அவ்வளவுதான்!" என்று ஜாக்கிரதையாக எச்சரித்துவிட்டுக் குதிரை ஏறினார். ஆனாலும், மூன்று கி.மீ. தூரம் நகர்வலத்தை முடித்து குதிரையில் இருந்து இறங்கும் வரை கண்ணையன் முகத்தில் அச்ச ரேகை நீங்கவே இல்லை!

இந்த மாடலைக் கொஞ்சம் மாத்தக் கூடாதா?

நோட்டீஸ் போர்டு!

புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் என தாவித் தாவி வலம் வந்த செல்வப்பெருந்தகை இப்போது சத்தியமூர்த்தி பவனுக்குள் தஞ்சம். அவருடைய க்ரைம் ரெக்கார்டு களைப் பார்த்து முதலில் அரண்ட காங்கிரஸ், அப்புறம் ஏதோகணக் குப் போட்டு அரவணைத்துக்கொண்டது. பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தபோது மாயாவதியை அழைத்து, சென்னை தி.நகரில் மாநாடு போட்டார் செல்வம். மாயாவதிக்கு ரோஜா பூக்களால் ஆன ஆளுயர ராட்சச மாலையைப் போட்டதோடு, பெரிய வாள் ஒன்றையும் பரிசளித்தார். செல்வப்பெருந்தகையின் மகள் அட்சயப்பிரியா 10 லட்ச ரூபாயை மாயாவதிக்கு நிதியாகக் கொடுத்தார். இப்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோதும் பழைய மாதிரியே ஆளுயர மாலைகளும் வாள்களும் மீண்டும் வந்துவிட்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தபோதும் இப்படியான மாலை, வாள் காட்சிகள் அரங்கேறின. கட்சி தாவும்போது எல்லாம் இப்படி அசத்து வது செல்வத்தின் ஸ்டைல். எத்தனை கட்சி மாறினாலும், அவருடைய எம்.எல்.ஏ. பதவியை மட்டும் யாரும் அசைக்க முடியவில்லை!

தீ... தீ... தீபிகா!

நோட்டீஸ் போர்டு!

துணை முதல்வர் ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி ஆசிரியராக இருக்கும் 'இன்பாக்ஸ் 1305' பத்திரிகையின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா. ஆர்யாவும் மிர்ச்சி சிவாவும் ராம்ப் வாக்கில் அழகிகளுடன் நடை போட, கையில் ஒரு குட்டி டாட்டூவுடன் அமை தியாக அமர்ந்திருந்தார் த்ரிஷா. மாடல் அழகி களையும் தாண்டி ஒட்டுமொத்தக் கூட்டத்தின் கவனத்தையும் கலைத்தவர் 'ஸ்குவாஷ்' தீபிகா. மயக்கும் அழகு, கவர்ச்சி உடை, ஒயில் நடை என தீபிகா புன்னகை சிந்திய போது எல்லாம் முத்தெடுத்தது மொத்தக் கூட்ட மும். கௌதம் மேனனின் ஹீரோயின் பட்டிய லில் விரைவில் தீபிகாவும் இடம் பிடிக்க லாம்!

வெளியே வந்த பூனைக் குட்டி!

நோட்டீஸ் போர்டு!

'தி கேட் இஸ் அவுட்!' ஒருவழியாக போனி வர்மாவைத் தன் சிநேகிதி என்று உலகத்துக்கு அறிமுகப்படுத்திவிட்டார் பிரகாஷ்ராஜ். அவர் தயாரித்து நடித் திருக்கும் 'இனிது இனிது' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் "இந்தப் படத் தில் இவங்கதான் எல்லாப் பாடல்களுக்கும் டான்ஸ் மாஸ்டர்... போனி வர்மா!" என்று அணைத்துக்கொண்டு அவரை அறிமுகப்படுத்தினார் பிரகாஷ்ராஜ். உடனே, மிகுந்த உற்சாகத்துடன் க்ளிக்கித் தள்ளின ஃப்ளாஷ்கள். "அவங்க உங்களுக்கு என்ன உறவு?" என்று முற்றுகையிட்ட கேள்விக் கணைகளுக்கு, "என் சிநேகிதி!" என்றதோடு நிறுத்திக்கொண்டார் பிரகாஷ். போனி வர்மா அதைக் காட்டிலும் கெட்டி. பிரகாஷ்ராஜைப்பற்றி எந்தக் கேள்வி கேட்டாலும், "இந்தப் படத்தில் ஒவ்வொரு டான்ஸும் வித்தியாசமா இருக்கும். ஃப்யூஷனும் ட்ரை பண்ணி இருக்கோம்" என்று சின்ஸியராக 'மட்டுமே' பேசிக்கொண்டு இருந்தார். வாழ்க வளமுடன்!

அதே அடக்கம், அதே அமைதி!

நோட்டீஸ் போர்டு!

முதலமைச்சர் கருணாநிதியின் 'தனக்குத்தானே' கேள்வி-பதிலில் 'இடம்பெற்றாலும்' அசராமல் அவரையே அசரடித்தவர் நரேஷ்குப்தா. அவருக்குப் பின் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பதவி ஏற்றுள்ளவர் பிரவீண் குமார். 'சபாஷ்! நரேஷ§க்குச் சரியான வாரிசுதான்!' என்று பெயர் வாங்கும் அளவுக்கு அதே அமைதி, அதே அடக்கம். ஜார்கண்ட் மாநிலம் ஹசரிபாத்தைச் சேர்ந்தவர். கான்பூர் ஐ.ஐ.டி-யில் உலோகவியல் துறையில் எம்.டெக்., முடித்தவர். இவருடைய மனைவி அனிதா பிரவீண், கோட்டையிலேயே பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர்களின் ஒரே மகள் நான்காவது படிக்கிறாள்!

இதைப் படிக்காதீங்க!

மெகா சொத்தை அபகரிக்கும் நில விவகாரத்தில் சாந்தமான தனது மருமகன் இறங்கியதைப் பார்த்து துடித்துப்போனாராம் உயர் பதவி மாமனார். ஆனாலும், ஏனோ அவரைக் கண்டிக்கமனம் வரவில்லை!

மதுரை கதர் மீட்டிங்கில் கொந்தளித்த மந்திரிகளைப் பெரிய தலைவர் அழைத்து 'செல்லமாக'க் கடிந்துகொண்டாராம். அவர்களும் சமாதான வார்த்தைகளை உதிர்த்தபடியே சிரித்தார்களாம்!

சைரன் ஒலி, அரசுக் கொடி பறக்க, நம்பர் பிளேட் இல்லாத வெளி நாட்டு காரில் கடற்கரை நகர் விடுதிக்கு வந்து திரும்புகிறார் அந்தப் பெண். வாரத்தில் ஒருநாள் பழக்கமாக இருந்த இது, இப்போது மூன்று நாட்களாக உயர்ந்திருக்கிறது.

'அந்த அதிகாரி மீது தேர்தல் சமயத்தில் ஏன் கை வைத்தோம்!' என்று மேலிடத்தில் யோசிக்கிறார்களாம். குறிப்பிட்ட பிரிவினரின் வாக்கு வங்கி அப்படி!

நோட்டீஸ் போர்டு!
நோட்டீஸ் போர்டு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு