Published:Updated:

எனக்கு வேற வழி தெரியலை!

எனக்கு வேற வழி தெரியலை!

பிரீமியம் ஸ்டோரி

'வெள்ளி' சாந்தி இப்போது... "எனக்கு வேற வழி தெரியலை!"
எனக்கு வேற வழி தெரியலை!
எனக்கு வேற வழி தெரியலை!
ம.கா.செந்தில்குமார்
படங்கள்:கே.குணசீலன்
எனக்கு வேற வழி தெரியலை!

தொகுப்பு ஊதியமா மாசம் 5 ஆயிரம் ரூபா கொடுத்தாங்க. தினமும் என் கிராமத்துல

இருந்து 15 கி.மீ. தூரத்தில் இருக்கிற புதுக்கோட் டைக்குப் போய்த் திரும்பவே, அந்தப் பணம் பத்தாது. அப்புறம் எப்படி என் குடும்பத்தைக் கவனிக்க முடியும்? '15 ஆயிரம் சம்பளம் தர்றோம்... ஃபிட்னெஸ் டிரெயினரா சேர்ந்துடுங்க'னு பெங்களூரு, கொல்கத்தாவில் உள்ள ஜிம்களில் இருந்து அழைப்பு வந்திருக்கு. அதுல ஏதாவது ஒண்ணுல சேர்ந்துடலாம்னு முடிவு பண்ணேன். அதான் தொகுப்பு ஊதிய அடிப்படையில் தமிழக அரசு தந்த பயிற்சியாளர் பணியை ராஜினாமா பண்ணிட்டேன்" - சாந்தியின் பேச்சில் இயலாமையும் கோபமும் ஒருங்கே தெறிக்கின்றன.

2006-ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவையே தன் பக்கம் திரும்பச் செய்த வெள்ளிப் பெண். போட்டிக்குப் பிறகான பரிசோதனையில் ஆண் தன்மை அதிகம் இருப்பதாகக் கூறி அவரின் பதக்கத்தைப் பறித்தார்கள். கூனிக் குறுகியவரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அப்போது, தமிழக அரசு அவருக்கு 15 லட்ச ரூபாய் ஊக்கத் தொகையையும், தொகுப்பு ஊதிய அடிப்படையில் தடகளப் பயிற்சியாளர் பணியையும் வழங்கியது. இப்போது அந்தப் பணியைத்தான் உதறி இருக்கிறார் சாந்தி.

எனக்கு வேற வழி தெரியலை!

"உங்கள் பிரச்னையை அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றீர்களா?"

"பயிற்சியாளர் பதவியை நிரந்தரமாக்கச் சொல்லி ஒன்றரை வருஷமா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்குத் தொடர்ந்து கடிதம் எழுதினேன். ஆனா, ஒரு பிரயோஜனமும் இல்லை. 'பயிற்சியாளர் பணிக்கான கோர்ஸ் படித்து முடித்தால், உங்களுக்கு நிரந்தரப் பணி வழங்குவதுபற்றிப் பரிசீலிப்போம்' என்றார்கள். 'படித்தால் பணி' என்று தெளிவான உத்தரவாதமும் இல்லை. எதை நம்பி நான் படிப்பது?"

எனக்கு வேற வழி தெரியலை!

"முதல்வரைச் சென்று பார்த்தீர்களா?"

"நான் கூனிக் குறுகி நின்றபோது ஒரு தகப்பனைப்போல் எனக்கு ஆறுதல் தந்தார் முதல்வர். 15 லட்சரூபாய் ரொக்கப் பணம் கொடுத்து, என் வாழ்க்கையில் விளக்கேற்றினார். என் உயிர் இருக்கும் வரை அவரின் உதவியை மறக்க மாட்டேன். அவர் தந்த பணத்தை வைத்துதான் ஏழைக் குழந்தைகளுக்கான தடகள அகாடமியை என்னால் ஆரம்பிக்க முடிந்தது. பணி நிரந்தரம் குறித்த கோரிக்கையோடு முதல்வரைப் பார்க்க அவரது கோபாலபுரம் வீட்டுக்குப் பல முறை சென்றேன். ஆனால், அதிகாரிகள் அவரைப் பார்க்க அனுமதி கொடுக்கவில்லை. வாசலோடு திருப்பி அனுப்பிவிட்டார்கள். துணை முதல்வர் வீட்டுக்குச் சென்றபோதும் இதே அனுபவம்தான். விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன்கானையும் பார்த்தேன். ஒரு பலனும் இல்லை."

"நீங்கள் ஆரம்பித்த தடகள அகாடமி எப்படி இருக்கு?"

" 16-ல் இருந்து 18 வயதுக்குள் உள்ள பொண்ணுங்க, பசங்கன்னு மொத்தம் 68 பேருக்குப் பயிற்சி கொடுத்தேன். குப்பை பொறுக்கியவன், பேப்பர் போடுறவன், கூலிக்காரரோட மகன்னு எல்லோருமே சோத்துக்கே கஷ்டப்படுறவங்க. பல சிரமங்களுக்கு மத்தியில் அவங்களை ஒருமுகப்படுத்தி, கடுமையான பயிற்சி கொடுத்தேன். இதுவரைக்கும் அவங்க 40 பதக்கங்களுக்கு மேல் வாங்கி இருக்காங்க. ராணின்னு ஒரு பொண்ணு தேசிய அளவில் தங்கமும், முத்துக்குமார்னு ஒரு பையன் இரண்டு வெள்ளிப் பதக்கமும் வாங்கி இருக்காங்க. இவங்க ரெண்டு பேருமே சீனியர் லெவலில் நடந்த போட்டிகளில் கலந்து பதக்கங்களை வாங்கின ஜூனியர்ஸ். சென்னையில் சகல வசதிகளுடன் டிரெயினிங் எடுத்த அத்லெட் யாரும் செய்யாத சாதனை இது. ஆனா, நடத்த முடியாம இப்போ மூடிட்டேன்.

அந்தப் பசங்களை நினைச்சாதான் எனக்குக் கவலையா இருக்கு. 68 பேர்ல 10 பேரை என் சொந்தக் காசில் தங்கவெச்சு, பயிற்சி கொடுத்துட்டு இருக்கேன். இப்போகூட 'ஹில்ஸ் பிராக்டீஸு'க்காக 10 பேரை கொடைக்கானலுக்குக் கூட்டிப் போய் பயிற்சி கொடுத்தேன். இதுக்கு மேல் என்னால சமாளிக்க முடியாது. மனசைக் கல்லாக்கி 'வேற கோச் பார்த்து சேர்ந்துக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். நான் சொன்னது தப்புதான். ஆனா, எனக்கு வேற வழி தெரியலை!"

எனக்கு வேற வழி தெரியலை!
எனக்கு வேற வழி தெரியலை!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு