Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

வருங்காலத் தொழில்நுட்பம்

பிரீமியம் ஸ்டோரி

வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்

ந்தத் தொடரின் தொடக்க வாரங்களில் இணையத் தொழில்நுட்ப அடிப்படைகளை

அவ்வப்போது தொட்டுச் சென்றுஇருக்கிறேன். அதன் வருங்கால பலன்களைப் பார்ப்பதற்கு வேறு சில இணைய அடிப்படைகள் அவசியம்.

TLD,DNS,CNAME போன்ற வார்த்தை சுருக்குகளுக்கு அர்த்தம் தெரிந்திருக்கும் (முக்கியமாக விகடன்.com-ல் இந்தக் கட்டுரையைக் கண்களில் midnight oil படிக்கும் கணினித் துறை) வாசகர்கள், அடுத்த சில பாராக் களைத் தாராளமாகத் தாண்டலாம்.

கணினியிலோ அல்லது அலைபேசியிலோ வலை தள விலாசம் ஒன்றைக் கொடுத்ததும், அது குறிப் பிட்ட தளத்தின் பக்கத்தை எப்படிக் கொண்டுவருகிறது என்று தெரியுமா?

வருங்காலத் தொழில்நுட்பம்

கணினிகளையும் அலைபேசி போன்ற மொபைல் சாதனங்களையும் இணைத்துப் பிணைந்தபடி இருக் கும் இன்டர்நெட். இதில் இணைக்கப்பட்டு இருக்கும் அனைத்துச் சாதனங்களும் இன்டர்நெட் புரொடொக்கால் விலாசம் (IP Address) எனப்படும் எண் மூலமாகவே அறியப்படும். இன்டர்நெட்டின் தொழில்நுட்ப அடிப்படையான புரொடொக்கால் விலாசம் நான்கு எண்களின் தொகுப்பு. உங்கள் வீட் டில் இருக்கும் கணினியானாலும் அதிபர் ஒபாமா பயன்படுத்தும் கணினியானாலும் எல்லாவற்றுக்கும் நான்கு எண்களைத் தொகுப்பாகக்கொண்ட விலாசம் கொடுக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக, இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கும் கணினியின் புரொடோகால் விலாசம் 173.153.201.116. இந்த எண் தொகுப்பு முறையைப் பயன்படுத்தி 4 பில்லியனுக்கு மேற்பட்ட சாதனங்களுக்கு விலாசம் அளித்து இன் டர்நெட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இன்டர்நெட் இயங்கத் தொடங்கிய 70-களில் இந்த எண் மிக மிக மிகப் பிரமாண்டமானது. காரணம் பல் கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும், சில நாடுகளின் அரசாங்கங்களும் மட்டுமே இன்டர்நெட்டில் தங்களது கணினிகளை இணைத்து இருந்ததால், நாலு பில்லியன் என்பது நினைக்கவே முடியாத எண்ணாக இருந்தது. ஆனால், இன்டர்நெட் தனி மனிதனுக்கும் சொந்தமானது என்ற இன்றைய நிலையில் நாலு பில்லியன் போதாமல் போய்விடலாம் என்ற எண்ணத்தில் சில வருடங் களுக்கு முன்னால், IPV6 என்ற புதிய தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, சாதனத் தயாரிப்பாளர் களிடம் தாங்கள் தயாரிக்கும் கணினிகள் மற்றும் மொபைல் இன்டர்நெட் சாதனங்களும் IPV6 க்குப் பொருத்தமானதாக இருக்கும்படி கேட்டுக்கொண்டது, இதற்குப் பொறுப்பு வகிக்கும் Internet Engineering Task Force. (விக்கி உரலி - <http://en.wikipedia.org/wiki/Internet_Engineering_Task_Force>).. IPV6 மூலம் கிட்டத்தட்ட ஏழு பில்லியன் சாதனங்களை இன்டர்நெட்டில் இணைக்க இயலும். ஆனால், நான்கு எண் தொகுப்புகொண்ட இன்டர்நெட் புரொட்டொகால் விலாசமே இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்பது கூடு தல் தகவல்.

வருங்காலத் தொழில்நுட்பம்

சரி, இதற்கும் வலைதளத்தை உங்கள் கணினியில் வரவழைத்துப் பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்ற கேள்வி எழக்கூடும்.

மிகவும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. ஒரு வலைதளத்தை இயக்கும் பெருங்கணினிக்கும் (Computer Server) உங்களது கணினி போன்றே நான்கு எண் தொகுப்பான IP விலாசம் உண்டு. உதாரணமாக, விகடன் டாட் காமின் IP விலாசம் 209.235.193.1 (நம்பாதவர்கள் உங்கள் ப்ரவுசரில் இந்த எண்ணை, வலைதள விலாசம் கொடுக்கும் இடத்தில் கொடுத்துப் பாருங்கள்). இதுபோல, ஒவ்வொரு வலைதளத்துக்கும் அது நிறுவப்பட்டுள்ள கணினியின் IP விலாசம் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஆக, அண்டன் என்ற நான், விகடன் டாட் காம் தளத்தின் பக்கங்களை எனது கணினியில் வர வழைத்துப் பார்க்கிறேன் என்பதன் தொழில்நுட்பரீதியான விளக்கம்: எனது கணினியின் IP, விகடன் டாட் காம் கணினியின் IP ஐ அழைத்து 'ஹலோ, முதல் பக்கத்தை அனுப்புய்யா!' என்று கேட்டு முதல் பக்கம் வந்ததும், அதில் இருக்கும் லிங்க் எதிலாவது நான் கிளிக்கினால், 'சரி, இப்போ இந்தக் குறிப்பிட்ட பக்கத்தை அனுப்புறியா?' என்று எதிரும் புதிருமாகத் தொடர்புகொண்டபடி இருக்கும். பயனீட்டாளர் ஒரு வர் வலைதளம் ஒன்றின் பக்கங்களைப் படிப்பதற்குக் கீழ் இயந்திரங்களின் கை குலுக்கலும் பேச்சுவார்த்தையும் இன்டர் நெட் என்ற மாபெரும் தகவல் தொடர்பு நெடுஞ்சாலையில் நடந்தாக வேண்டும்.

வெயிட்... வெயிட் அண்டன். நாம் கொடுப்பது vikatan.com <http://vikatan.com/> என்ற வலைதளப் பெயர். இது எப்படிக் குறிப்பிட்ட IP எண்கொண்ட கணினிக்குச் சென்று தொடர்புகொள்ள முடியும் என்று அடுத்த கேள்வி எழுவது இயல்பு.

பதில்: Domain Name System (சுருக்கமாக DNS) என்ற தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியமாகிறது. DNS என்பதை ஒரு பிரமாண்டமான தொலைபேசி டைரக்டரியாக உருவகம் செய்துகொள்ளுங்கள். ஏதாவது, தொலைபேசி எண் வேண்டும் என்றால், அந்த நபர் அல்லது நிறுவனத்தின் பெயரை முதலில் தேடி, அது கிடைத்ததும் அதற்கு நேராகக் கொடுக்கப்பட்டு இருக்கும் எண்ணைக் கூப்பிடுவீர்கள்தானே? DNS என்ற டைரக்டரியில் வலைதள விலாசங்களின் பெயர்களும், அவற் றின் IP எண்களும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

சற்று மேலே நான் பயன்படுத்திய உதாரணத்தை உண்மை யில் இப்படி மாற்றியாக வேண்டும்:

வருங்காலத் தொழில்நுட்பம்

எனது கணினியின் IP முதலில் DNS டைரக்டரி கொண்ட கணினி ஒன்றைத் தொடர்புகொண்டு, vikatan.com<http://vikatan.com/> தளத்துக்குச் சமமான IP எண் என்ன என்பதைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு, விகடன் டாட் காம் கணினியின் IP ஐ அழைக்கும்.

இதில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து... இன்டர்நெட்டைத் தங்களது செயல்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கிரிமினல் ஆசாமிகளுக்கு உங்களது கணினியைத் தவறான DNS டைரக்டரியைப் பயன்படுத்தவைக்க முடிந்தால், என்ன ஆகும்? உதாரணத்துக்கு, vikatan.com<http://vikatan.com/> செல்ல எண்ணி, அதை ப்ரவுசரில் கொடுக்க, இந்தத் திருட்டு டைரக்டரி, கிரிமினல்களின் கட்டுப்பாட்டில் இருக் கும் கணினி ஒன்றின் IP எண்ணைத் தர, நீங்கள் அந்த IP எண்ணுடன் இயங்கும் கணினியில் இருந்து வரும் பக்கங்களைப் பார்ப்பீர்கள். vikatan.com<http://vikatan.com/> தளம்போலவே வேஷம் இட்ட பக்கங்களாக இருந்தால், விவரம் ஒன்றும் தெரியாமலே, உங்களது கடவுச்சொல் லைக் கொடுப்பீர்கள். விகடன் டாட் காம் என்பதை ஓர் உதாரணத்துக்குத் தான் இங்கே கொடுத்தேன். அதுவே, உங்கள் வங்கியின் வலைதளம் என்றால், உங்களை அறியாமலேயே கிரிமினல்களின் வசம் உங்களது வங்கிக் கணக்கு இருக் கும்.

இதைத் தவிர்க்கப் பல வழிமுறைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சென்ற வாரம் வரை 'man in the middle attack' என்று சொல்லப்படும் இந்த பிரச்னைக்கு புல் லட் துளைக்க முடியாத தீர்வு எதுவும் இல்லாமல் இருந்து வந்தது.

வருங்காலத் தொழில்நுட்பம்

DNS-ஐ உறுதியாக்கும் விதத்தில் DNS SEC(Domain Name System Security Extensions) என்ற தொழில்நுட்பம் இன்டர்நெட்டில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இன்டர்நெட்டில் 13 கணினிகளை DNS தகவல்களை அதிகாரபூர்வமாகக்கொண்டு இருக்கும் கணினி களாக ஏற்றுக்கொள்வதுடன், இந்த 13 கணினிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு டைரக்டரி தகவல்கள் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளும். அதோடு, public-key cryptography உதவியுடன் IP விலாசங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் உங்களை ஏமாற்றி உங்கள் விவரங்களைத் திருடுவதன் சாத்தியக்கூறுகள் வெகுவாக அடக்கப்பட்டு இருப் பது மிகவும் பாஸிட்டிவ்வான விஷயம்.

public-key cryptography? அதை அடுத்த வாரம் பார்க்கலாம்!

வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
LOG OFF                             
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு