Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

பிரீமியம் ஸ்டோரி

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
எவ்வோ அடிச்சாலும் தாங்கறான் டா!
நானே கேள்வி... நானே பதில்!

"கவித்துவமான சிந்தனைக்கு ஓர் உதாரணம்?"

"நார்வே பெண் கவிஞர் செல்மாவின் வரி இது... 'பனிக்கட்டி என்பது தண்ணீரின் சோம்பேறித்தனம்!"'

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

"தமிழனின் அடையாளம் வீரமும் காதலும், அது இன்னமும் இருக்கிறதா?"

"இருக்கிறதே! தமிழனின் காதல்... எஸ்.எம்.எஸ்ஸாகவும், வீரம்... கூலிப் படையாகவும்!"

- க.பழனிச்சாமி, திருப்பூர்.

"ஒரு மனிதனுக்கு அதிகபட்சம் எத்தனை நண்பர்கள் இருக்கலாம்?"

நானே கேள்வி... நானே பதில்!

"கிரேக்கத் தத்துவ மேதை சாக்ரடீஸ் ஒரு வீடு கட்டினார். அதைப் பார்க்க வந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக விமர்சனம் செய்தனர். ஒருவர் வீட்டின் முகப்பு சரியில்லை என்றார். இன்னொருவர் 'அறைகள் சிறியதாக இருக்கின்றன' என்றார். எல்லா விமர்சனங்களையும் கேட்ட சாக்ரடீஸ் சொன்னாராம்... 'அறை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. அந்தச் சின்ன அறை நிறையவாவது உண்மையான நண்பர்கள் இருந்தால்போதும்!"'

- ஜி.எஸ்.கார்த்திக், கோபிச்செட்டிபாளையம்.

"ஒருவருக்கு ஒரு விஷயம் சரியாக இருக்கும்போது இன்னொ ருவருக்கு அதே விஷயம் தவறாகத் தெரிவது எப்படி?"

"இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்தில் சந்தித்தார்கள். ராதாகிருஷ்ணன் கை கழுவிவிட்டுச் சாப்பிட அமர்ந் தார். சர்ச்சினோ ஸ்பூனைப் பயன்படுத்திச் சாப்பிட ஆரம்பித்தார். கையினால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனை ஏளனமாகப் பார்த்த சர்ச்சில், 'ஸ்பூனைப் பயன்படுத்துங்கள். ஸ்பூனைப் பயன்படுத்திச் சாப்பிடுவதுதான் சுகாதாரமானது' என்றார். அதற்கு ராதாகிருஷ்ணன் சொன்ன பதில், 'என்னுடைய கைகளை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. ஆனால், ஸ்பூன் அப்படி இல்லையே. அப்படியானால், எது சுகாதாரமானது?' என்று கேட்டாராம். சர்ச்சிலுக்கு சுகாதாரமானதாகத் தெரிந்தது ராதாகிருஷ்ணனுக்கு சுகாதாரக் குறைவாகத் தெரியவில்லையா?"

- சி.ரகுபதி, போளூர்.

"கமிஷனுக்கும் விசாரணை கமிஷனுக்கும் என்ன வித்தியாசம்?"

"எந்தக் காலத்தில சார் நீங்க இருக்கீங்க? ஒரு விஷ யம் சீக்கிரம் முடிய வேண்டும் என்பதற்காகக் 'கண்டு பிடிக்கப்பட்டது' கமிஷன். ஒரு விஷயம் சீக்கிரம் முடியக் கூடாது என்பதற்காகக் கண்டுபிடிக்கப் பட்டது விசாரணை கமிஷன்!"

- தா.மு.இக்பால், தஞ்சாவூர்.

"எப்போது விலைவாசி உயர்ந்தாலும் 'மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது' என்று மத்திய அரசும் மாநில அரசும் பல்லவி பாடுகிறார்களே, அது என்ன வாங்கும் சக்தி?"

"ஒருவேளை 'எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான்டா' என்பதைப்போல இவ்வளவு அடிகளையும் வாங்குகிறோமே, அதுதான் வாங்கும் சக்தி போலும்!"

- ஆர்.தீபா, நாகப்பட்டினம்.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு