பிரீமியம் ஸ்டோரி
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

பீட்டர் அல்போன்ஸிடம்...

"காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி பலமாக இருக்கிறது என்று எதிர் முகாமில் உள்ள தா.பாண்டியன் கூறியுள்ளாரே?"

"காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், தா.பாண் டியனின் கம்யூனிஸ்ட் கட்சிதான் பாவம். மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பின்னர், எங்கு போவது, எந்த பஸ் ஏறுவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். அந்த பயத்தின், குழப்பத்தின் வெளிப்பாடுதான் இது!"

நாஞ்சில் சம்பத்திடம்...

"காங்கிரஸ் கூட்டணி மாறத் தயாராகிவிட்டது என்கிறீர்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால், அதை ம.தி.மு.க. ஏற்றுக்கொள்ளுமா?"

"பரவலாக வரக்கூடிய பத்திரிகைச் செய்திகளை மையமாக வைத்துத்தான் நான் அப்படிச் சொன்னேன். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம், யாரைச் சேர்ப்பது, சேர்க்கக் கூடாது என்பது கூட்ட ணிக்குத் தலைமை தாங்குகிற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடுக்க வேண்டிய முடிவு!"

5 கேள்விகள்

பழ.கருப்பையாவிடம்...

"மின் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் சென்னை நேப்பியர் பாலம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறதே?"

"நாடு முழுவதும் 2 முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமலில் இருக்கிறது. இந்த நேப்பியர் பாலம் போன்றே செம்மொழி மாநாட்டில் மின்சாரத்தைப் பாய்ச்சி கோவையின் இரவுகளைப் பகலாக்கினர். விவசாயி, விசைத்தறி, தொழிற்சாலை என நாட்டின் உற்பத்தி சார்ந்த யாருக்கும் மின்சாரம் இல்லை. ஆனால், ஃபோர்டு போன்ற பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்கு 24 மணி நேரமும் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏனென்றால், கார்களின் உற்பத்தியால் தான் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் அல்லவா? இந்த நிலையிலும் மின்கட் டணத்தை உயர்த்திவிட்டு, இதனால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிக்கைவிடுகிறார். இதுதான் மக்கள் நலன் அரசா?"

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம்...

"எந்த ஒரு பிரச்னையானாலும் அதைத் தூக்கிவைத்து அறிக்கைவிடும் தமிழக மார்க்சிஸ்ட்டுகள், 'அவர்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் மக்கள் வறுமையில் உள்ளனர் என்று உலகளாவிய ஆய்வு அறிக்கை சொல்வதுபற்றி எல்லாம் நினைத்தே பார்க்க மாட்டார்களா' என்கிறாரே கருணாநிதி?"

"பொதுவாக, நாடு தழுவிய அளவில் 50 சதவிகித மக்கள் வறுமையின் எல்லைக்கோட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இதையே டெண்டுல்கர் கமிட்டி அறிக்கையும், சக்சேனா அறிக்கையும் தெரிவிக்கிறது. ஆனால் நில விநியோகம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக சலுகைகள் என தமிழக அரசு உட்பட வேறு பல மாநிலங்களைவிட வறுமை ஒழிப்புக்காக மேற்கு வங்க அரசு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் சொல்வது தவறானது. உண்மைக்குப் புறம்பானது!"

வேல்முருகன் எம்.எல்.ஏ-விடம்...

"இடஒதுக்கீடு பிரச்னையில், ராமதாஸ் இருப்பதையும் இழந்துவிடக் கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளாரே?"

"நான் மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன் என்று சொல்கிற கலைஞரின் கருத்து, தான் பிறந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கும், சமூக நீதிக்கும் நேர் எதிராக உள்ளது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவின் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் இதுபோன்று ஒரு கருத்தை சமூக நீதி வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் வெளியிட்டிருக்க வேண்டியது இல்லை!"

5 கேள்விகள்
5 கேள்விகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு