பிரீமியம் ஸ்டோரி
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

அத்திமரச் சாலை - என்.ஸ்ரீராம்
வெளியீடு: தோழமை, 5டி, பொன்னம்பலம் சாலை,
கே.கே.நகர், சென்னை-78 பக்கம் 144 விலை ரூ.100

விகடன் வரவேற்பறை

குட்டிக் குட்டி வாக்கியங்களில் வாசிப்பு சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வித்தை என்.ஸ்ரீராமுக்கு கை வந்திருக்கிறது. ஒரு குறுநாவலும் இரண்டு சிறுகதைகளும் அடங்கிய இந்தத் தொகுப்பு, கொங்கு வட்டாரத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை நெருங்கிச் சென்று பார்க்கிறது. ஓர் அப்பாவிச் சிறுவன், வாழ்க்கையின் ஓட்டத்தில் குற்றவாளியாகச் சித்திரிக்கப்படுவதும், போலீஸ் நிகழ்த்தும் என்கவுன்ட்டர் நாடகத்தையும் 'அத்திமரச் சாலை' வலியுடன் பேசுகிறது!

பூசணிக்கா இயக்கம்: ப.முருகன்

விகடன் வரவேற்பறை

'ராசா மகளுக்குக் கல்யாணம். போய் ஒரு பூசணிக்கா வாங்கி வா' என்று ஒரு சிறுமி உத்தரவிடுகிறாள். விதை விதைப்பதில் இருந்து பூ பூப்பது வரை பூசணியை விளையாட்டுப் பொருளாக்கி விளையாடுகிறார்கள் கிராமத்துச் சிறுவர்கள். இன்னொருபுறம் காற்றாலைக்கு நிலத்தைப் பறிகொடுத்து அலைந்துகொண்டு இருக் கிறார் ஒரு முதியவர். கிராமங்களின் வாழ்வாதாரமான விவசாயம் வழக்கொழிந்து கொண்டு இருப்பதைச் சுருக்கமாக, சுருக்கெனக் குத்துவதுபோலச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளின் விளையாட்டை அள்ளிக் கொடுத்திருக்கும் ஸ்மைல் ஜெகதீஸின் ஒளிப்பதிவு அழகு!

கொடலு... மெடலு! new.chudachuda.blogspot.com

விகடன் வரவேற்பறை

பத்திரிகையாளர் எம்.பி.உதயசூரியனின் வலைப்பூ. 'தோத்துப்புட்டா மாட்டோட கொம்புல அவனோட கொடலு, ஜெயிக்கிற வீரனுக்கு கொமரிக சிரிப்புதான் மெடலு' என ஜல்லிக்கட்டு குறித்த ஒரு கட்டுரை. தனுஷ்கோடி தீவின் ஒற்றை வியாபாரியான பாக்யராஜின் வாழ்க்கை தொடங்கி கலைஞர், புஷ்பா தங்கதுரை, சத்யராஜ் என பல்துறைப் பிரபலங்களைப்பற்றிய நெகிழ்ச்சியும் குதூகலமும் கலந்த கட்டுரைகள் நிறைய. அத்தனையும் வார்த்தை விளையாட்டு!

உலகம் இன்று! http://new.z9tech.com/

விகடன் வரவேற்பறை

உலகத் தொழில்நுட்ப முன்னேற்றங்களை செம்மொழித் தமிழில் படிக்க வேண்டுமா? மொபைல் போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் என டெக்னாலஜி உலகில் தினம் தினம் நடக்கும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் அனைத்தும் அழகு தமிழில் வாசிக்கக் கிடைக்கிறது. 'ஐ-போன் துவங்கி நிலவுக்குச் செல்லவிருக்கும் ஜப்பான் ரோபாட், கம்ப்யூட்டர்களை ஆட்டிப்படைக்கும் வைரஸ்கள், விண்வெளி அறிவியல் என நம்மைச் சுற்றி சுழன்றுகொண்டு இருக்கும் அறிவியல் உலகம் விளக்கங்களுடன் விரிகிறது இங்கே!

நந்தி
இசை: பரத்வாஜ் ஜங்லீ மியூஸிக் விலை ரூ.75

விகடன் வரவேற்பறை

சமீபத்தில் இத்தனை மென்மையும் இயல்பும் நிரம்பிய சினிமா ஆல்பம் கேட்டதாக ஞாபகம் இல்லை. காதலின் மென் வலியை மனதினுள் செலுத்துகிறது 'இதுதான் காதலா' பாடல் இசைக்கும்போது. வழக்கமான ஒரு காதல் பாடல் என்று உதாசீனப்படுத்த முடியாத ஏதோ ஒரு மெஸ்மரிச வசீகரம் 'மயங்கினேன்' பாடலில். கிராமத்துக் குத்துப் பாட்டு சாயல்தான். ஆனால், குத்தாமல் உற்சாக சுருதியில் பயணிக்கிறது 'வேத கோஷம் முழங்கவே' பாடல். 'சங்குசக்கர சாமி வந்து ஜிங்குஜிங்குனு' பாடலில் முதல் நொடியிலேயே பற்றிக்கொள்ளும் உற்சாகத்தை சின்னப் பொண்ணுவின் குரலில் அடுத்தடுத்த உயரங்களுக்குத் தூக்கிச் செல்கிறது. முத்து விஜயனின் வார்த்தைகளுக்கும் பரத்வாஜின் வாத்தியங்களுக்கும் தாலாட்டு கெமிஸ்ட்ரி!

விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு