Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்


.
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஐஸ்வர்யா தனுஷ் இரண்டாவது குழந்தைக்குத் தாயானார். பேரன் பிறந்ததும் மருத்துவமனைக்கு வந்த ரஜினியிடம், 'சாக்லேட் இல்லையா தலைவா?' என்று லிஃப்ட் ஆபரேட்டர் கேட்க, சந்தோஷமாக இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை அளித்தாராம். 'ஆயிரத்தில்' ஒருவன்!

'பொறுப்பான வி.ஐ.பி. அப்பா யார்?' என நடத்தப்பட்ட இணையதள வாக்கெடுப்பு ஒன்றில், அதிக வாக்குகள் பெற்று முன்னணி இடங்களைப் பிடித்திருப்பது ரஜினிகாந்த்தும் அமிதாப் பச்சனும். மக்கா, இவங்க பேரன், பேத்தியே எடுத்துட்டாங்களே!

இன்பாக்ஸ்

சச்சின், மெஸ்ஸி, காகா என உலகின் நட்சத்திர வீரர்கள் அனைவரின் ஜெர்சி எண்ணும் 10. இதனால் அந்த நம்பர் ஜெர்சியைப் பிடிக்க விளையாட்டு வீரர்களுக்கு இடையே இப்போது கடும் போட்டி. 'பத்'தவெச்சுட்டியே பரட்டை!

இன்பாக்ஸ்

இங்கு எதிர்ப்புகள் கொடி கட்டிப் பறக்க, 'ரெடி' படப்பிடிப்புக்காக, இலங்கைக்கு சல்மான் கானுடன் பறந்துவிட்டார் அசின். அதிபர் ராஜபக்ஷேவின் விருந்தினர்களாக வந்திருப்பதால், இருவருக்கும் 'இசட்' பிரிவு பாதுகாப்பு. ஏன் கண்ணு!

வங்காளப் பெண்ணான யாமினி ராவ் சவுத்ரிதான் வருண் காந்தியின் வருங்கால மனைவி. வாரணாசியில் மருமகளுக்கு என மேனகா காந்தி டஜன் கணக்கில் சேலைகள் வாங்கியபோதுதான் செய்தி கசிந்திருக்கிறது. கெட்டியாக் கொட்டுங்க கெட்டி மேளம்!

இன்பாக்ஸ்

'சீனிகம்', 'பா' படங்களைத் தொடர்ந்து பால்கி இயக்கும் மூன்றாவது படத்திலும் அமிதாப் பச்சனே ஹீரோ. பிக் பி-க்கு ஜோடி ஸ்ரீதேவி, படத்துக்கு இசை இளையராஜா. சீனி கூட்டணி!

இன்பாக்ஸ்

அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என கங்குலியின் வீட்டில் மொத்தம் 50 பேர் குடியிருக்கிறார்கள். 20 மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் 4 பி.எம்.டபிள்யூ கார்கள் இருக்கின்றன. மஹராஜ்!

இன்பாக்ஸ்

விம்பிள்டனின் முதல் சுற்றுப் போட்டியில் மொத்தம் 11 மணி நேரம் 5 நிமிடங்கள்... இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆட்டத்தில் போராடி விளையாடி வெற்றி பெற்று அசுர சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்காவின் ஜான் இஸ்னர். செட் புள்ளிகள் 6-4, 3-6, 6-7, 7-6, 70-68. டென்னிஸ் வரலாற்றிலேயே இவ்வளவு நீண்ட போட்டி இதுவரை நடந்தது இல்லை. ஆனால், இரண்டாவது சுற்றில் 6-0, 6-3, 6-2 என ஒன்றே கால் மணி நேரத்திலேயே இஸ்னர் தோற்றுப்போனது ஆன்ட்டி க்ளைமாக்ஸ். மனுஷனாப்பா நீ!

இன்பாக்ஸ்

ஏற்கெனவே ஒரு இந்திப் படத்தில் சின்மயி பாடிய இரண்டு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். தற்போது அங்கு தன் முக தரிசனமும் அளிக்கவிருக்கிறார் சின்மயி. ஸ்டார் டி.வி-யின் மியூஸிக் ஷோவுக்கு சின்மயிதான் தொகுப்பாளராம். பிரைம் டைம்ல போடுங்கப்பா!

இன்பாக்ஸ்

ரா-1 படத்தில் உலகிலேயே விலை அதிகமான, அதிவேகமான காரான புகாட்டி வெரான் ஓட்டுகிறார் ஷாரூக் கான். இந்திய மதிப்பில் இந்த காரின் விலை 17 கோடி ரூபாய். ஏ-1.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்