Published:Updated:

இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!

இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!


இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!
இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!
இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ப.திருமாவேலன், ம.கா.செந்தில்குமார்
இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!

கொளுத்தும் கோடை வெயிலுக்குத் தப்பி, 'சம்மர் டிரிப்' எங்கே போனார்கள்?

சுதா ரகுநாதன்

"முதல் தடவையா இந்த வருஷம் இத்தாலிக்குப் போனேன். அமெரிக்காவில் இருந்து என் மகன் கவுசிக், நேரா அங்கே வந்துட்டான். இங்கே இருந்து, நான், கணவர் ரகு, மகள் மாளவிகா மூணு பேரும் போனோம். வழிகாட்ட இத்தாலி தோழி ஈவாவும் வந்திருந்தார். ஒரு நகரமே தண் ணீரில் மிதக்கும் அதியசத்தை நான் வெனிஸ் நகரத்தில் பார்த்தேன். எங்கே போறதா இருந்தாலும் படகுதான். நம் ஊரில் பஸ்ஸ§க்கு நிற்பது மாதிரி அங்கே படகுக்கு நிற்கணும். எந்தக் கட்டடத்தைப் பார்த்தாலும் பழமை ததும்புது. எல்லாக் கட்டடங்களிலும் பழங்கால ஓவியங்கள். அங்கே நான் பார்த்த ஓர் அரண்மனை சென்னைக்கு வந்த பிறகும் கனவில் வருது.

இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!

வெனிஸ்ல அழகழகா விதவிதமா மாஸ்க் கிடைக்கும். அங்கே போற யாரும் மாஸ்க் வாங்காம வர்றதே இல்லை. நானும் வாங்கி னேன். அதே மாதிரி 'மொரானா' என்ற கண்ணாடி வகைகள் அங்கே பிரபலம். உடையக்கூடிய கண்ணாடியில் இவ்வளவு வேலைப்பாடுகள் பண்ண முடியுமான்னு ஆச்சர்யப்படும் அளவுக்குச் செதுக்கி இருக்காங்க. பிளான்ஸ் என்ற இடத்துக்குப் போனோம். அது நம் மகாபலிபுரம், ஜெய்ப்பூர் மாதிரி சிலைகளும் சிற்பங்களும் நிறைந்திருக்கும் நகரம். மைக்கேல் ஏஞ்சலோ செய்த டேவிட் மன்னனின் சிலை அங்கே தான் இருக்கு. கனிவான முகம், கம்பீரமான உடம்பு, காலிலும் கையிலும் தெறிக்கும் நரம்புகள்னு அந்தச் சிலையில் அவ்வளவு உயிரோட்டம்.

கேப்ரீ... உலகத்திலேயே காஸ்ட்லியான சுற்றுலாத் தலம். செருப்புகூட ஏழாயிரம் ரூபாய். அங்க 'லெமன்சலோ'ன்னு ஒரு பானம் கிடைக்குது. பூசணி சைஸ்ல இருக் குற எலுமிச்சம் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பானத்தில் கொஞ்சம் ஆல்கஹாலும் கலந்திருக்காங்க. அதனாலேயே அது பயங்கர பாப்புலர். இப்ப நினைச்சாலும் அடி வயிறு கலங்குற இடம், பல ஆண்டுகளுக்கு முன்னால் விலங்குச் சண்டை நடந்த புராதனக் கட்டடம்தான். சுமார் 55 ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கும் மெகா அரங்கம். அங்கு ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் செத்திருக்குதாம். உள்ளே நடக்கும்போது இப்பவும் ரத்த வாடை அடிக்கிற மாதிரியே திகிலா இருக்கு. இன்னொரு ஆச்சர்யமான இடம்... ஒரு பாலத்தின் இரும்புக் கம்பிகளில் பல்லாயிரக்கணக்கான பூட்டுக்கள் தொங்குகின்றன. ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உருவாகும் காதல் கெட்டியா இருக்க இப்படி பூட்டு மாட்டிட்டுப் போவாங் களாம். இவை எல்லாவற்றையும்விட இத்தாலியப் பெண்கள் என்னைக் கவர்ந்தார்கள். ஒரு அடி உயரத்துக்கு ஹீல்ஸ் போட்டுக்கிட்டு அலட்சிய மான பார்வையோடு அவங்க நடந்து போற ஸ்டைலில் ஒரு கம்பீரமும் பெருமிதமும் இருக்கு!"

உதயநிதி ஸ்டாலின்

இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!
இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!

"இந்தத் தடவை ஆஸ்திரேலியா போனோம். முதலில் கோல்டு கோஸ்ட். கடற்கரைகள், மழைக் காடுகள், த்ரில்லிங்கான தீம் பார்க் உள்ளடக் கினதுதான் இந்த கோல்டு கோஸ்ட். இதில் ட்ரீம் வேர்ல்டு, சீ வேர்ல்டு, மூவி வேர்ல்டுனு பல பகுதிகள் இருக்கு. கடல் விலங்குகளுடன் விளையாட்டு, டால்ஃபின் ஷோ எல்லாம் சீ வேர்ல்டு. ஓரளவுக்குத் துணிச்சலும் கடல் உயிர்கள் மீது அன்பும் உள்ளவங்களுக்கு இதை விட்டு வெளியே வர மனசு வராது. நாங்களும் மீன்களா மாறி நீந்தினோம். இதே மாதிரி நினைச்சுப் பார்க்க முடியாத சாகச விளையாட்டுகள் மூவி வேர்ல்டில் அதிகம். ஹாலிவுட் பட கார் சேஸிங் ஸீன்களை அவ்வளவு தத்ரூபமாச் செஞ்சு காட்டி ஆச்சர்யப்படவெச்சாங்க. கார்கள் ஒண்ணோடு ஒண்ணு மோதிச் சிதறுவதைப் பார்த்தா பயமா இருக்கும். ட்ரீம் வேர்ல்டு போனால், கங்காரு கூட ரொம்ப நெருக்கமாப் பழகலாம். போட்டோ எடுத்துக்கலாம்.

இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!

கிரேட் பாரியர் ரீஃப் என்பது பவளப் பாறைகள் உள்ள கடற்பகுதி. ஆக்சிஜன் சிலிண்டர், லைஃப் ஜாக்கெட் எல்லாம் மாட்டிவிட்டு நம்மைக் கடலுக்குள் இறக்கிவிடுறாங்க. டிஸ்கவரி சேனல்ல சாகசம் பண்றவங்க கடலுக்கு அடி யில் மீன்கள் மாதிரியே நீந்துவாங் களே... அதேபோல் நாமும் மீன் களோடு சேர்ந்து நீந்தலாம்.

எப்போதும் மழை பெய்துகொண்டே இருக்கும் மழைக்காடு களுக்குப் போனோம். பசுமையும் மழையும் இணைஞ்ச அந்த ஜில் கலவை இப்பவும் மனசுல இருக்கு. விஞ்ச்சில் தொங்கிக்கிட்டே மழைக் காட்டைப் பார்த்த அனுபவம் ஆயுசுக்கும் மறக்க முடியாது!"

இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!
இத்தாலியப் பெண்கள்... ஆஸ்திரேலிய மீன்கள்!