Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

வருங்காலத் தொழில்நுட்பம்


வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்

"இன்றைய தேதியில் இணைய வளர்ச்சியை வில்லனாகப் பார்த்துக் கலங்கும் அரசாங்கம் சீனா!

'எந்த ஒரு நிறுவனமும், தனிநபரும் தாங்களாகவே சர்வதேசத் தொடர்பு எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது!'- இப்படித்தான் ஆரம்பிக்கிறது சீன அரசின் இணையக் கட்டுப்பாட்டுக் கொள்கை. 2008-ல் ஒலிம் பிக்ஸ் விளையாட்டுகள் நடந்துகொண்டு இருக்கும் போதே, தங்களது சென்சார்தனத்தைக் கறாராகத் தொடர்ந்த சீன அரசால் தடை செய்யப்பட்டு இருக் கும் வலைத்தளங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. உதாரணத்துக்கு,

தலாய் லாமா பற்றியவை

தைவான் அரசால் நடத்தப்படும் அத்தனை வலை தளங்களும்

அரசியல், சமூக விவாதங்களை நடத்தும் மீடியா வலைதளங்கள். H.H.C, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா போன்றவை.

சீன அரசைப்பற்றி மட்டும் அல்ல; மற்ற எந்த நாடுகளில் நடக்கும் போலீஸ் அத்துமீறல்களை அலசும் வலைதளங்கள். மக்களாட்சிபற்றிய விவரங்களும், விவாதங்களும்கொண்ட வலைதளங்கள்.

இவை மட்டுமல்ல; ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களும், ஸ்கைப் போன்ற இணையம் சார்ந்த பேசும் (Voice Over IP VoIP) தொழில்நுட்பங்களுக்கும் அனுமதி இல்லை. 'கூகுளின் ப்ளாகர், டாக்ஸ் போன்றவையும் தடை செய்யப்பட்டவைதான் என்பதால், சீனாவுக்குள் இருக்கும்போது இணையம் சுருங்கிய ஒன்றாகத் தெரிவதைத் தவிர்க்க முடியாது" என்றார் சீனா வுக்கு அடிக்கடி பிசினஸ் டிரிப் செல்லும் டாக்டர் விக்டர் சுரேஷ்.

சீன அரசாங்கமும் அவர்களின் முரட்டு பாலி சியை எவ்வளவு நாட்கள் கடைப்பிடிக்க

வருங்காலத் தொழில்நுட்பம்

முடியும் என்பது கேள்விக்குரிய விஷயம்தான். காரணம், இணையத்தில் எளிதாக மக்களை இணைக்க முடி யும் என்பதால், மக்களைக் கடுப்பேற்றும் வகையில் இணையத்தில் தகவல் சென்சார்ஷிப் செய்வது மிகவும் கடினம்.

new.digg.com என்ற இணையதளத்தை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். Digg தளத்தின் மாடல் மிக சிம்பிள். அதே நேரம், ரொம்பவேசுவா ரஸ்யம். இணையத்தில் தொடர்ந்து பதிவேற்றியபடி இருக்கும் வலைப் பக்கங்களில் முக்கியமானவற்றைத் தெரிந்துகொள்வது எப்படி? தேடும் இயந்திரங் களான கூகுள், யாஹூ, பிங் போன்றவற்றின் ரோபாட்டுகள் ஒரு வலைப் பக்கத்தை வரவு செய்து, அதைத் தங்களது தகவல் தளத்தில் சேர்த்துக்கொள்ள பல நாட்கள் ஆகும். அதுவும், பிரபலம் அல்லாத வலைப் பதிவர் ஒருவரின் வலைப்பூ பல மில்லியன் வாசகர்களைச் சேர வேண்டுமானால் என்ன செய்யலாம்? இந்த கேள்விகளுக்கான பதில்தான் Digg தளத்தை உருவாக்கியது. சிறப்பான வலைப் பக்கம் ஒன்றைப் பார்த்தால், நீங்கள் அது சிறப்பானது என வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் வலைப்பக்கங்கள் digg தளத்தின் முதல் பக்கத்தை அடையும். குறிப்பிட்ட வலைப் பக்கம் முதல் பக்கத்தில் பிரசுரமாவதால் பல மடங்கு வாசகர்களைச் சென்றடையும். இணையப் பயனீட்டாளர்களை ஜனநாயக அடிப்படையில் பயன்படுத்திப் பிரபலமாக வேண்டிய தகவல்களைப் பிரபலப்படுத்தும் சமூகச் செய்திச் சேவையான digg தளம் மிகவும் பிரபலமானது தனிக் கதை.

வருங்காலத் தொழில்நுட்பம்

2007-ம் ஆண்டு மே மாதம். Digg.com மூன்று வருடங்களைத் தாண்டாத புதிய நிறுவனம். அதன் சமூக செய்திச் சேவை இணையப் பயனீட்டாளர்களுக்குப் பரிச்சயமாகத் தொடங்கி இருந்த காலகட்டம். டி.வி.டி. தகடுகளில் பதிக்கப்பட்டு இருக்கும் தகவல்களை உரித்தெடுக்கத் தேவையான ரகசியக் கடவுச் சொல்லை தான் கண்டுபிடித்ததாக ஒருவர் தனது வலைப்பூவில் எழுதிவைத்து, அதற்கு Digg தளத்தில் பயனுள்ள உரலியாக வாக்களித்தும் வைக்க, சில மணி நேரங்களில் அவரது வலைப்பூ உரலி பல்லாயிரக்கணக்கான digg பயனீட்டாளர்களின் வாக்குகளைப் பெற்று, digg தளத்தின் முதல் பக்கத்தை அடைந்தது. இது நடந்த சில மணி நேரங்களில், மியூஸிக் இண்டஸ்ட்ரி நிறுவனம் ஒன்றின் மேலதிகாரி ஒருவரின் கவனத்தை எட்ட, digg நிறுவனத்துக்கு இரவோடு இரவாக வக்கீல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதிர்ந்துபோன digg, சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களையும் தனது தளத்தில் இருந்து நீக்கியது. digg நிறுவனத்தின் சிணிளி ஜே அடல்சன் 'ஜனநாயக முறைப்படி செய்தித் தகவல்களைப் பிரபலமாக்குவதுதான் நமது

வருங்காலத் தொழில்நுட்பம்

நோக்கம். ஆனால் வழக்கு, விசாரணை என நமது நிறுவனமே மூடப்படும் நிலை வருவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை' என சுய விளக்கம் கொடுக்க (http://about.digg.com/blog/what'shappeninghddvdstories) இந்தப் பிரச்னை அப்படியே முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், நடந் ததோ வேறு. அடுத்த சில மணி நேரங்களில், digg தளப் பயனீட்டாளர்கள் மீண்டும் மீண்டும் அதே உரலிக்கு வாக்களித்து முதல் பக்கத் துக்குக் கொண்டுவர, இணையப் பயனீட்டு மக்களின் பலம் தெரிய வந்தது. இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், தளத்தையே மூடியாக வேண்டும் என்றசூழலுக்குத் தள்ளப்பட்ட digg, தகவல் நீக்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்தது. மியூஸிக் இண்டஸ்ட்ரி வழக்கு எதையும் போடவில்லை. காரணம், digg மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் மிகப் பகிரங்கமாகவும், வன்மையாகவும், ஒருங்கிணைந் தும் கண்டிக்கப்படும் என்பதால்தான். அது மட்டுமல்லாமல், எந்தத் தகவலை சென்சார் செய்ய வேண்டும் என விரும்பினார்களோ, அந்தத் தகவல் மிக மிகப் பிரபலமாகி முதலுக்கே மோசம் செய்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இது எப்படிச் சரியாகும்? சட்ட ஒழுங்குகள் அற்ற mob மனநிலையுடன் செய்யப்படும் இத்தகைய செயல்களைக் கண்டிக்க வேண்டாமா? மியூஸிக் இண்டஸ்ட்ரியே இதனால் எத்தனை நஷ்டம் அடைந்திருக்கும் என்று கேள்விகள் எழுப்புபவர்களுக்கு, சுருக்கமான பதில் இணைய வரவுக்குப் பின், மியூஸிக் இண்டஸ்ட்ரி பெரிதாக வளர்ந்து இருக்கிறது. இசை டி.வி.டி-களை உரித்தெடுத்து அவற்றின் பாடல்களைச் சுட்டுவிடும் பழக்கம் வியாபாரரீதியில் இந்த இண்டஸ்ட்ரியைப் பாதிக்கவில்லை என்பதே உண்மை. இன்னொரு வாரத்தில் இதை ஆழமாக அலசலாம்.

வருங்காலத் தொழில்நுட்பம்

பை தி வே, இப்படி இணையத்தில்வெளி யாகும் தகவல்களை சென்சார் செய்ய விரும்பி எடுக்கும் நடவடிக்கைகள், அந்த நோக்கத்துக்கு நேர் எதிரான பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு 'ஸ்ட்ரைசாண்ட் விளைவு' (Streisand effect ) என்ற பெயரே உண்டு.

பார்பரா ஸ்ட்ரைசாண்ட் ஒரு பிரபல நடிகை/பாடகி. பிரபலமானவர்களைக் குறி வைத்துப் படம் எடுக்கும் பப்பராசி புகைப்படக்காரரான கென்னத் ஆடல் மேன், ஸ்ட்ரைசாண்ட் புதிதாக வாங்கிய கடற்கரையோர பங்களாவை ஹெலிகாப்டரில் இருந்து படம் எடுத்து ஆன்லைன் வலைதளமான Pictopia.com-க்கு விற்றுவிட்டார். இது தெரிய வந்த ஸ்ட்ரைசாண்ட், 'பொதுஇடங்களில் என்னைப் புகைப்படம் எடுப்பதைத் தடுக்க முடியாது. ஆனால், இது எனது வீடு; இங்கு நான் நீச்சல் குளத்தில்...

ஆங்... அது என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்!

வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்

- log off